.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 September 2013

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!


 21-bleeding4-300-1-285x150


                 உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.

மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.

* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.

* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.


* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.

* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.

* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.


ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
 


Love ஹார்மோன்’-களை அதிகரிக்கும் உணவுகள்!!!


 


தற்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

               இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மேலும் அந்த காரணங்களை தெரிந்து கொண்டு அதனை சரிசெய்ய எவ்வளவோ முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதற்கான சரியான பலன் கிடைக்காமல் சிலர் இருக்கின்றனர். இவ்வாறு குழந்தை பெற முடியாமல் இருப்பதற்கு போதிய சத்துக்கள் உடலில் இல்லாதது, உறவு சரியாக இல்லாதது, இனப்பெருக்க மண்டலம் பலவீனமாக இருப்பது என்று பல உள்ளன.

இத்தகைய பிரச்சனைகள் பெரிதும் ஏற்பட நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஒரு காரணம். இவற்றால் உடலில் உள்ள பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி தடைபடுவதோடு, இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு உறவில் சரியான ஈடுபாடின்றி இருப்பார்கள். இத்தகையவர்கள் வயாகராவை வாங்கி சாப்பிடுவார்கள். வயாகரா என்பது பாலுணர்வைத் தூண்டும் ஒருவித மாத்திரை. இவ்வாறு செயற்கை முறையில் கடைகளில் விற்கும் வயாகராவை வாங்கி போட்டு, உணர்ச்சியை தூண்டுவதற்கு பதில், இயற்கையாக பாலுணர்வைத் தூண்டும் ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இப்போது அந்த வகையான பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாலுணர்வைத் தூண்டும் உணவுகள்!!!

தானியங்கள்

முளைகட்டிய தானியங்கள் மற்றும் நவதானியங்களை சாப்பிட்டால், உடலில் உள்ள பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் நன்கு செயல்படும். ஏனெனில் இவற்றில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கும். ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

நியாஸின் உணவுகள்

நியாஸின் அல்லது வைட்டமின் பி3 எனப்படும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான அவோகேடோ, பரங்கிக்காய் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிட்டால், உடலுறவின் போது உணர்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள நியாஸின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, செல்களின் செயல்களை அதிகரித்து, உணர்ச்சியை ஊக்குவிக்கும்.

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள உணவுகளான இனிப்பு உருளைக்கிழங்கு, ராஸ்பெர்ரி, கேரட் மற்றும் நட்ஸ் போன்றவற்றை, உடலுறவு கொள்ளும் 3 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனால் ஆண், பெண் இருவருக்குமே உணர்ச்சிகள் அதிகரித்து, அந்த உணர்ச்சிகளை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும்.

சூப்பர் சாலட்

உறவின் போது நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க ஒரு சில ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் நட்ஸ், விதைகள், தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் உள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாலட் போல் செய்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அந்த நேரத்தில் மிகுந்த உற்சாகத்தை அடையலாம்.

வைட்டமின் டி உணவுகள்

டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கு உண்ணும் உணவில் சேர்க்க வேண்டிய சத்துக்களில் ஒன்று தான் வைட்டமின் டி. இத்தகைய வைட்டமின் டி சத்து, காளான் மற்றும் சிக்கரியில் அதிகம் உள்ளது. ஆகவே இவற்ற சாப்பிட்டால், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உறவின் போது மனநிலையை ஒழுங்குபடுத்தும்.

முளைகள்

முளைகளை உறவு கொள்ளும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 3 முதல் 5 அவுன்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள ஹார்மோன்களை நன்கு தூண்டும். அதேப்போல் முளைப்பயிர்கள், கறுப்பு ராஸ்பெர்ரிகளை இரண்டு மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனாலும் உணர்ச்சிகள் நன்கு தூண்டப்படும்.

ஜிங்க் உணவுகள்

தற்போது அதிக வேலையின் காரணமாக மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அத்தகையவர்கள் தங்கள் டயட்டில் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, சரியான உறவில் ஈடுபட முடியும். இத்தகைய ஜிங்க் சத்து பச்சை காய்கறிகள், பூசணிக்காய் விதைகளின் முளைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

தர்பூசணி

தர்பூசணி ஒரு புதிய வயாகரா என்று சொல்லலாம். எப்படியெனில் இந்த தர்பூசணியில் 92% தண்ணீரும், 8% உணர்ச்சியைத் தூண்டும் சத்தான சிட்ருலின் என்னும் பொருளும் அடங்கியுள்ளன. இந்த சிட்ருலின் உடலினுள் செல்லும் போது அர்ஜினைன் ஆக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜினைன், வயாகராவைப் போலவே இரத்தக்குழாய்களை ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கிறது.

ஒரே மாதத்தில் சர்க்கரைநோயை விரட்டலாம்!


images


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.


கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்!

ஜீரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.
உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான்.

விக்கல் எப்படி வருகிறது? வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது.

இதனால் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் எளிதில் நுழைகிறது. இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது. வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது.

அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை. விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது. மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும்.

சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும். இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே. தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!


‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார்.

sep 2 - GV_PRAKASH_

 


இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். 

ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top