இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன.
அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக இந்தியா, இலங்கையில் விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம்.
அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.
அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன் சமையலில் வாசனையைக் கூட்டுவதற்கும் இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.
நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும்,...
Monday, 2 September 2013
தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்!
தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.
அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.
அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப்...
13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!
உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார்....
வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கையாக இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறியுள்ளது.
‘பெட்ரோல், பராமரிப்பு, காப்பீடு மற்றும் பிற செலவுகளின் செலவை பார்க்கும்போது, நாம் குடும்ப வருமானம் ரூ.50,000 இருந்தால் மட்டுமே கார் வாங்க திட்டமிட வேண்டும்’ என்று ஒரு வங்கி அதிகாரி கூறியுள்ளார். வங்கி வாகனத்தின் செலவாக 0.51% பதப்படுத்தும்...
இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!
”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து...