.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 30 August 2013

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து!

      வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை...

கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு...

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிவிட்டர் அச்சு இயந்திரம்.    டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று ஒரு விஷயமே இல்லை. டிவி,டெஸ்க்டாப்,ஸ்மார்ட்...

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான். பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த வேலை தேவை என்றாலும் சரி பேஸ்புக் கைகொடுக்கும். சரி,பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்பு தேடுவது எப்படி? முதல் வழி,மிகவும் எளிதானது.உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.ஆம் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை உங்கள் பேஸ்புக்...

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி. ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top