.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 29 August 2013

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

 Methods of Laptop Maintenance.!

 
மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.   லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான். 
மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும். 

மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? 

Methods of Laptop Maintenance

  • குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.  
  • மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். 
  • குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days
  • மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். 
  • மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும். 
  • மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)
  • அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
  • லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம். 
  • மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும். 
  • முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)
  • மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது. 
  • மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இணையத்தை எளிதாக கையாள பயன்மிக்க குறிப்புகள்..!

Internet tips and Tricks

மிகச்சிறந்த Internet tips and Tricks (கணினிக் குறிப்புகள்) என்ற இப்பதிவில் உண்மையிலேயே சிறந்த Internet tips and Tricksகளைப் பார்க்க இருக்கிறோம்.

internet tips and tricks
 
இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இன்று ஏராளம். கணினியில் மூலம் அதிகம் இணையத்தைப் பாவிக்கிறோம். வலைத்தளங்கள் அல்லது இணையப் பக்கத்தை எளிதாக கையாள குறுக்கு விசைகளைக் (Shortcuts of internet)கற்றுக்கொண்டோமானால் எளிதாக நாம் பிரௌசிங் செய்யலாம்.

இதனால் நேரம் மீதியாகும். குறிப்பாக Internet சென்டர் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறுக்குவிசைகள் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் இணையத்தில் உங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இணையத்தில் உலவப் பயன்படும் உலவிகளைப் பற்றிய தகவல்களையும் (About Browsers)அறிந்துவைத்திருப்பது மேலும் இணையத்தில் சிறப்பாக உலவ பயன்படும்.

விரைவாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் Internet tips and Tricks களைப் பார்ப்போம்.

முதலில் உங்கள் பிரௌசரைத் திறந்தவுடன் என்ன செய்வீர்கள்? அட்ரஸ் பாரில் நீங்கள் விரும்பும் வலைத்தளத்தின் பெயரை உள்ளிட்டு Go அல்லது Enter அழுத்துவீர்கள் அல்லவா?

இதில் உள்ளப்படும் URL -ஐ முழுவதுமாக தட்டச்சிட்டு, உதாரணமாக http://goodluckanjana.blogspot.com/ என தட்டச்சிட்டு enter கொடுப்பீர்கள்.

இனி அவ்வாறு செய்ய வேண்டாம். goodluckanjana என அட்ரஸ் பாரில் தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டிப்பாருங்கள்.

வலைத்தளம் திறக்கிறதா? கண்டிப்பாக திறக்கும். Ctrl+Enter கொடுக்கும்போது தானாவே அட்ரஸ்பாரில் நாம் உள்ளிடும் பெயருக்கு முன்பாக htttp:// என்ற ஆரம்பமும், .com என்ற முடிவும் தானாகவே சேர்ந்துகொள்ளும்.

ஒவ்வொரு வலைத்தள முகவரியையும் இப்படி வலைத்தளத்தின் பெயரை மட்டும் உள்ளிட்டு கண்ட்ரோல்+என்டர் மட்டும் தட்டுவதால் எளிதாக வலைத்தளத்தைத் திறக்க முடியும்.

இணையப்பக்கங்களில் ஒரு தொடுப்பிலிருந்து மற்றொரு தொடுப்புக்கு எளிதாக மாற Tab அழுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

Tab பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு இணைப்பிலிருந்து அடுத்த இணைப்பிற்கு தானாகவே செல்ல முடியும்.

மீண்டும் முந்தைய இணைப்பிற்கு செல்ல Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தில் உள்ள படிவத்தை (Form) நிரப்ப அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல இந்த Tab key உங்களுக்கு உதவும். Email Form, வலைத்தளங்களின் கணக்குகளை உருவாக்க(Website account creation form) போன்ற விண்ணப்ப நிரப்புக் கட்டங்களை நிரப்பும்போது ஒவ்வொரு கட்டமாக கர்சரை வைத்துக் கிளிக் செய்யாமல் Tab விசையை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லலாம். முந்தை கட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தை, வலைப்பக்கத்தை மறுபடியும் தொடக்கம்(Refresh) செய்ய F5 விசையை அழுத்துங்கள்.

வலைத்தளம் அல்லது வலைப்பக்கத்திலுள்ள URL செலக்ட் செய்ய F6 விசையை அழுத்துங்கள்.
அல்லது Alt+D கொடுக்கலாம்.

வலைபக்கத்தை முழுவதுமாக Screen க்கு கொண்டுவர F11 விசையை அழுத்துங்கள்...

கூகிள் சர்ச் போன்ற சர்ச் பாக்சில் நீங்கள் வேண்டியதை எளிதாக தேடிப்பெற தேட வேண்டிய சொற்களுடன் "" குறிகளை இட்டு Search கிளிக் செய்யுங்கள். உதாரணமாக "goodluckanjana" என Google Search-ல் தேடினால் நீங்கள் தேடிய சொற்களுக்கான "goodluckanjana" -க்கான சரியான முடிவுகள் மட்டும் உங்களுக்கு காட்டும். இவ்வாறு நீங்கள் உங்களுக்கு வேண்டிய சொற்களை "" குறிகளுக்குள் இட்டுத் தேடுவது உங்கள் தேடுதலை எளிதாக்கும். நீங்கள் வேண்டிய செய்திகளடங்கிய வலைத்தளங்கள் முதன்மைப்படுத்தி காட்டும்.

தேடுபெட்டியில் தேடியதை தட்டச்சிட்டுவிட்டு அருகிலுள்ள Search பட்டனை கிளிக்செய்வதைக் காட்டிலும் Enter அழுத்திப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தேடுபெட்டியில் தேடும்போது வேண்டியதை தட்டச்சிட்டு என்டர் கொடுத்தாலே போதும். உடனே தேடல் தொடங்கிவிடும். மௌஸ் கர்சரைக் கொண்டுபோய் சர்ச் பட்டனில் கிளிக் செய்துதான் சர்ச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. (புதியவர்கள் இந்த Internet tips and Tricks ஐ கவனிக்கவும்.)

Tabbed Browsing

தற்காலத்தில் உள்ள அனைத்து பிரௌசர்களுமே Tabbed browsing அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. முக்கிய பிரௌசர்களான IE, Firefox, Google Chrome ஆகிய உலவிகளில் இப்போது Tabbed Browsing வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது வலைப்பக்கத்தில் உள்ள இணைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய விண்டோவில் திறக்கும் முறை மாறிவிட்டது.

ஒரே விண்டோவில் Tabbed முறையில் அடுத்து அடுத்து திறக்கும் செயல்பாட்டைக் கொண்ட புதிய வலைஉலவிகளே(Tabbed Browsing) இப்போது பெரிதும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதையும் நவீன தொழில்நுட்ப்பதிற்கு(New Technology) ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இவ்வாறு டேப்(Tab) பயன்படுத்தி ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் ஒரே விண்டோவில் திறப்பதற்கு குறுக்கு விசைகள் உள்ளன. பொதுவாக எல்லா உலவிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு வலைப்பக்கத்தை அல்லது ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்க இந்த இணைப்பில் கண்ட்ரோல் கிளிக் செய்தால் புதிய டேபிள் அந்த இணைப்பு திறக்கும். இதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உங்கள் Mouse-ல் Scroll Wheel இணைப்பின் மீது ஒரு சொடுக்கு சொடுக்குவதன் மூலமும் வலைப்பக்கத்திலுள்ள ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்கச் செய்யலாம். இவ்வாறான Internet tips and Tricks களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர Internet Browsing உங்களுக்கு எளிதாகிவிடும்.

Browserகள் பலவகை:

நம் கணினியிலேயே அமைந்திருக்கும் Browser ஒன்று உண்டு. அதுதான் Internet Explorer என்ற வலைஉலவி. பெரும்பாலானவர்கள் இதையே தங்கள் உலவியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இணையத்தில் பல்வேறு வலைஉலவிகள் இலவசமாக கிடைக்கின்றன. அவைகள் கணினிலேயே இணைந்து இருக்கும் இன்டர்நெட் பிரௌசரைவிட மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது.

அவற்றில் முதன்மையான மூன்று browserகள்.. (Top Three Browsers)

1. Google Chrome
2. Firefox Browser
3. Opera Browser

இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட அனைத்து உலவியிலும் தற்போது நான் முன்னரே குறிப்பிட்டபடி Tabbed Browsing முறையில் இயங்குகிறது.

Add-Ons and Plugins:

இத்தகைய புதிய பிரௌசர்களுக்கு ஆயிரக்கணக்கில் பிளகின்களும், ஆட்ஆன் புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. வேண்டிய வசதிகளை இந்த வலைஉலவிகளில் இணைப்பதன் மூலம் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

உங்கள் பிரௌசர் அப்டேட்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் புதிய வசதிகளைப் பெற முடியும். உதாரணமாக Adobe Flash Player Update-ஐ கூறலாம். இந்த Adobe Flash Player ஆனது இணையத்தில் இருக்கும் வீடியோக்கள், படங்களை காண்பதற்கு பயன்படுகிறது.

இவ்வாறான update களைச் செய்யும்போது கணினியின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பிரௌசர் பிளகின்கள்(Browser Plugins), ஆட்ஆன் புரோகிராம்களை (Odd-On Programe)தவறாமல் அப்டேட் செய்வது முக்கியம்.

மேற்கண்ட Internet tips and Tricks  அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செய்ய பழகிக்கொண்டாலே இணையம் உங்கள் வசமாகும்.  உங்களாலும் மிகச் சிறந்த, வேகமான,பாதுகாப்பான உலவுதலை(Browsing) செய்ய முடியும்.
 

Wednesday, 28 August 2013

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற!


கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 

நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும்.

  1. பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும். 
  2. கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும். 
  3. தொடர்ச்சியாக கணினித் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது. 
  4. இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது. 
  5. கண்களில்  ஒரு வறட்சித் தன்மை ஏற்படும். 
இதன் விளைவாக
  • தெளிவற்ற பார்வை
  • கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம்
  • திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்
  • கண்களில் நீர்வழிதல்
  • எழுத்துக்கள் மங்கலாக தெரிதல்
  • இரண்டிரண்டாக உருவங்கள் தெரிதல்
  • கண்ணிற்கு முன்பு பனிப்படலம் மூடியதைப் போன்ற ஒரு தோற்றம்
இவை அனைத்துமே ஏற்படும்.

இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? 

கணினி இருக்கை: 

முதலில் கணினியில் பணிபுரியதக்க இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இருக்கையானது ஏற்றி, இறக்கும் வகையிலும் நன்கு சுழலும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
கணினியில் உள்ள விசைப்பலகைக்கு இணையாக நீங்கள் அமரும் இருக்கையில் கைப்பிடி உங்கள்  கைகளைத் தாங்க வேண்டும். அதாவது கணினியில் உள்ள விசைப் பலகையில் விரல்களை வைத்து தட்டச்சிடும்பொழுது உங்கள் முழங்கையானது கீழே இறங்காமல்  நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் கைப்பிடியில் இருக்குமாறு உங்கள் இருக்கையின் உயரத்தை வைத்திருக்க வேண்டும்.

போதுமான வெளிச்சம்: 

  1. நீங்கள் பயன்டுத்தும் கணினி திரைக்கும், கணினியிலுள்ள விசைப்பலகைக்கும் போதுமான அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உங்கள் பணியை நீங்கள் தொடரலாம். 
  2. உங்களுக்கு எதிர்புறமிருந்து ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வெளிச்சம் ஏற்பட்டு அது உங்கள் கண்களில் பட்டு எதிரொளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிர்புறம் இருந்து வரும் வெளிச்சமானது கண்டிப்பாக உங்கள் கண்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். 
  3. கணினித் திரைக்கும் உங்களுக்கும் தோராயமாக 33 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களை கைகளை நீட்டினால் கணினித் திரையை உங்கள் விரல் நுனி தொடும் தூரத்தில் கணினித் திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

வருமுன் காப்போம்: 

கணினியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். அதாவது இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.
அதென்ன இருபதுக்கு இருபது பார்முலா என்கிறீர்களா?

இருபதுக்கு இருபது: 20-20-20

கணினித் திரையையே தொடர்ந்து உற்றுப்பார்த்து வேலை செய்யாமல் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறுபக்கம் திருப்பி, இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை அல்லது பொருள்களை தொடர்ச்சியாக இருபது நொடிகள் பார்ப்பதைத்தான் இருபதுக்கு இருபது பார்முலா என்பார்கள்.
கணினித் திரையிலேயே பார்வையை தொடர்ந்து மணிக்கணக்கில் பதிக்காமல், அதிலேயே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்காமல் பார்வையை வேறு திசையில் திருப்பி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை, குறிப்பிட்ட நொடிகள் பார்க்க வேண்டும்.

இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்: 

பார்வை கணினித் திரையைவிட்டு வேறு திசையில் செலுத்தும்பொழுது கண்ணில் உளை தசைகள் இயக்கப்பட்டு, விழித்திரை லென்சின் குவிய தூரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் மாறுபட்ட கண்ணிற்கு இயக்கம் கிடைக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதால் கண்கள் இயல்புநிலை, இயல்பான இயக்க நிலையைப் பெறுகிறது.
வருடத்திற்கு ஒருமுறையாவது கண்களில் உள்ள பிரச்னைகளை, தகுதியான கண் மருத்துவரை அணுகி கண்சோதனை செய்துகொண்டு, ஆலோசனைப் பெறுவது உங்கள் கண்களைப் பாதுக்காக்க ஒரு அற்புதமான முன்னேற்பாடான பாதுகாப்பு வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?


QR Code என்றால் என்ன? 


QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.

Bard code & QR code


Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.


QR Code-ம் பயனும்: 


  1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு  படமாக கிடைக்கும். 
  2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 
  3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். 
  4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
  5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode  செய்து பெற முடியும்.


QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?


QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி? 


QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..

QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.

QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 


1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.

உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி? 


இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.


qr code generating software

Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)

 

சாதாரணமாகவே நாம் கணினியை மனிதனின் மூளைக்கு ஒப்பிட்டுச் சொல்வோம்.


AMD Microprocessor
 
மனிதனின் மூளைக்கு சரிசமமாக இல்லாவிடினும், மனிதனை விட அதிக கணக்குகள் மற்றும் மனிதனுக்கு தேவையானவைகளை , குறைந்த நேரத்தில் விரைவாக வேலைகளை செய்து தரும் ஒரு சாதனம்தான் கணினி.

கணினிக்கும் மூளை உண்டு. இதை  மைக்ரோ பிராசசர் (Microprocessor) என்கிறோம்.  தமிழில் சொல்வதெனில் நுண்செயலி.


நுண் செயலி என்றால் என்ன? இதன் பணி என்ன?
(What is a micro processor? What is the task?)

நுண் செயலி என்பது ஒரு கட்டுப்பாட்டு இயக்கு மையம் ஆகும். ஆங்கிலத்தில் CPU என்பார்கள். இது சில்லுக்குள் அடங்கியிருக்கும்.

இது கணினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் (Hardware)கட்டளை சைகைகளை ஏற்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

கணினியில் கொடுக்கும் செயல்கள் பல்வேறு நுண்செயல்களாக மாற்றப்பட்டு இயக்கும் பணியை இது செய்வதாலேயே இதை நுண்செயலி என்கிறோம்.

நுண்செயலியைக் கண்டுபிடித்தவர் யார்? 
(Who is the inventor of microprocessor?)

கணினியை இயங்குவதற்கு மூலாதாரமான நுண்செயலியைக் கண்டுபிடித்தவர்  மெர்சியன் டெட் ஹாப் (1969). இவர் கால்குலேட்டருக்குத் தேவையுள்ள பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்ததே உலகின் முதல் நுண்செயலியாகும்.

இந்த நுண்செயலியை busicom என்ற ஜாப்பன் நிறுவனம் Calculaterக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கித் தர இன்டென் நிறுவனத்தை நாடும்பொழுது, அதற்கான முயற்சியில் இன்டெல் நிறுவனம் இறங்கியது.
அந்நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்த Mercian E Ted haff அவற்றிற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். அதுவே முதல் நுண்செயலி ஆயிற்று.

தற்காலத்தில் பல்வேறு வகையான நுண்செயலிகள் வந்துவிட்டன.

நுண்செயலிகளின் வகைகள்: 

1. RISC வகை நுண்செயலிகள்
2. x86 வகையான நுண்செயலிகள்
3. 64 பிட் வகையான நுண்செயலிகள்

இத்தகைய பயனுள்ள நுண்செயலிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன தெரியுமா?

கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் Miro Prossorம் ஒன்று. இதனால்  கணினி உலகத்தில் மாபெரும் புரட்சியே ஏற்பட்டுவிட்டது.

மின்னணு உலகத்தில் இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

இம்மின்னணு நுண்செயலியை(Microprocessor) உருவாக்க க்வார்ட்ஸ்(Kvarts) என்னும் கண்ணாடி ஸ்படிகம் பயன்படுகிறது.

இக்கண்ணாடி ஸ்படிகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அது க்வார்ட்ஸ் சிலிக்கானாக (Kvarts sio2) மாற்றப்படுகிறது.

க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றப்பட்ட தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.

முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட (Microprocessor)நுண்செயலி 4004ல் 2300 டிரான்சிஸ்டர்கள் வரைக்கும் வரைந்தனர். தற்போது Pentium 4 போன்ற பிராச்சர்களில் கோடிக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் வரைந்துள்ளனர். இத்தனை டிரான்சிஸ்டர்கள் (Transistors) அடங்கியுள்ள நுண்செயலின் அகலம் எவ்வளவு தெரியுமா?

வெறும் கால் அங்குல சதுரப் பரப்பளவுதான்.

சிலிக்கனின் மேல் போட்டோ resist மூலம் மின்கடத்தும் பொருள், மின் கடத்தாப் பொருள் மற்றும் குறை கடத்தி ஆகியவற்றையும் சேர்த்தே இதில் வடிவமைக்கின்றனர். இது அவ்வளவு சுலபமானது அல்ல.

இந்த மொத்த அமைப்பும் ஒரு டிரான்சிஸ்டர் போல் வேலை செய்வதாலேயே இவற்றை டிரான்சிஸ்டர் என்றழைக்கிறோம்.

இவ்வாறான சிக்கலான இணைப்புகளை வரையும் முறைக்கு போட்டோ லித்தோகிராபி என்று பெயர்.

இவ்வாறு வரையப்பட்ட இணைப்புகளில் உள்ள மெல்லிய கண்ணுக்குத் தெரியாத கோடுகளின் அகலம் மைக்ரான் என்னும் அலகால் அளவிடப்படுகிறது.

இவற்றை வெறும் கண்களால் அளவிட முடியாது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம். குறிப்பாக நாம் உணர்ந்துகொள்ளும்படி சொல்ல வேண்டுமானால் நம் தலைமுடி இருக்கிறதல்லவா? அதில் ஒரு முடியை எழுபதாக பிரித்தால் என்ன அளவு வருமோ.. அந்தளவுதான் மைக்ரான்...

இந்த மைக்ரான் அளவை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது.
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top