பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.
கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
பச்சைத்தண்டு :
கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.
செங்கீரைத்தண்டு...
Monday, 26 August 2013
அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்!
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை...
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……
* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.
* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.
* அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.
* உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச்...
ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?
நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன . சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும் பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது. அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படிங்கள் பள்ளிகள் மாறி வருகின்றன. ஆடம்பரமான தனியார் பள்ளிகள் பகட்டான விளம்பரங்களை செய்து வருகின்றன. அவற்றின் தோற்றப்பொலிவும் அழகும் கண்ணைக்...
ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!
ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.
அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.
எது முக்கியம்
ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.
மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள...