.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 25 August 2013

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!




பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக்கின் எனப்படும் ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கணணி நிபுணர் கலீல் ஷ்ரியாதே ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளமை பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை ஃபேஸ்புக் குழு அவதானத்தில் கொள்ளவில்லை.

வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சினையே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சினம்கொண்ட கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

தனது பெயர் கலீல் ஷ்ரியாதே என்றும் தான் தகவல் தொழில்நுட்பத்தில் கடைநிலை பட்டம் பெற்றுள்ளதாக ஜக்கர் பர்கின் பக்கத்தில் கலீல் குறிப்பிட்டுள்ளார்.

ஜக்கர் பர்கின் www.facebook.com இணையதளத்தில் ஒரு பிரச்சினையை கண்டுபிடித்துள்ளதாகவும், அது குறித்து முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாகவும் எழுதியுள்ளார்.

அந்த பிரச்சினை மூலம் ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொரு பயனரின் பக்கத்தில் எழுத முடிகிறது.

தான் சாரா குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர் பர்க்குடன் ஹார்வர்டில் கல்வி கற்ற சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!




கூகுள் நிறுவனம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் சேவைகளில் இருக்கும் செக்கியூரிட்டி குறைபாடுகளை கண்டுபிடித்து தகவல் குடுப்பவர்களுக்கு 5000 டாலரை பரிசாக தர உள்ளது. அதாவது கிட்டதிட்ட 3,21,675 ரூபாய் பரிசாக வழங்கப்படும். டெக்கனாலஜியில் அதிகம் திறமை உள்ளவர்கள் கூகுள் சேவைகளில் உள்ள பக்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்து பரிசை வெல்லாம். ஒவ்வொரு பக்ஸ் ரிப்போர்ட்டுக்கும் பரிசு தனித்தனியாக உண்டு.
 

கூகுள் நிறவனம் இதுவரை கிட்டதிட்ட 13கோடிகளை பரிசாக வழங்கியுள்ளதாம். சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் உலகின் முன்னனி நிறுவனமான மைக்கிரோஷாப்ட் போன்றைவைகளும் இது போன்ற பரிசுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. அண்மையில் கூட ஹலீல் என்பவர் பேஸ்புக் ஓனரின் அக்கவுன்டையே ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாடுகளை தெரிவித்தார். அவருக்கு 500 டாலரை பரிசாக பேஸ்புக் வழங்கியது. இது போன்ற வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!




ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.


ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் அரகசாங்க ஏஜென்சி இந்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்ந பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் வின்டோஸ்8 கம்பியூட்டரில் டிரஸ்டெட் பிளாட்பார்ம் மாடியூல் (Trusted Platform Module) என்ற சிப் உள்ளது. இது கம்பியூட்டரின் பாதுகாப்புக்காக வின்டோஸ்8 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

வின்டோஸ்8 மற்றும் TPM சிப் இணையும் பொழுது ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர்களின் கட்டுபாட்டை இழந்து விடுகிறது இதனால் பிரச்சனை ஆரம்பிக்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மறுத்த மைக்கிரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ்8 கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் TPM சிப்பை வேண்டுமானால் செயல் இழக்க செய்துவிடலாம் அந்த வசதி அதில் உள்ளதாக தெரிவித்தது.

உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த முதல் இந்தியப் பெண்!

உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால். ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்துவரும் இவர், 13 வருடங்களுக்கு முன்னால், தனது 35 வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள தல்மா மலையேறக் குழுவினருடன் இணைந்தார். இந்த மலையேற்ற நிகழ்ச்சி மூலம், தார் பாலைவனத்தில் நடத்தப்படும் ஒட்டகங்களின் சாகசப்பயணம் பற்றி அறிந்து, அதில் பங்குகொண்டார். இதற்குப்பின்னர், ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும், கிளிமாஞ்ஜெரோ சிகரத்தை அடையும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டை அடைந்து, இந்திய நாட்டின் தேசியக் கொடியை அங்கு நாட்டினார்.

1-Indian-woman-achiver

இந்த முயற்சி, அவருக்கு பிற நாடுகளின் உயரமான சிகரங்களையும் அடைந்து, அங்கும் இந்தியக் கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.
அந்த சாதனையையும் தற்போது பிரேமலதா நிகழ்த்தியுள்ளார். இந்த வருடம் மே மாதம், வடஅமெரிக்காவில் உள்ள மெக்கின்லே மலையின் தெனாலி சிகரத்தை அடைந்து, அங்கு இந்திய நாட்டுக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், தனது கனவை அவர் நிறைவு செய்துள்ளார்.

இதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் ஆவார். தற்போது, டாடா ஸ்டீல் குழுமத்தின் சாகச அமைப்பின் தலைவராக விளங்கும் இவர், பிரேமலதாவிற்கு மன மற்றும் உடல் ரீதியான பயிற்சிகளை அளித்து, இந்த சாதனையைப் புரிய அவருக்கு உதவிகரமாக இருந்தார்.மேலும்
மற்ற பெண்களும் தங்களுடைய குடும்பச்சூழலில் இருந்து வெளிவந்து, இதுபோன்ற சாகச அனுபவங்களைப் பெறவைப்பது என்பதே தனது அடுத்த விருப்பமாக இருக்கும் என்று பிரேமலதா தெரிவித்தார்.

உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி


 Last-living-creature-bed-bug


                இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top