.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 25 August 2013

உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த முதல் இந்தியப் பெண்!

உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால். ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்துவரும் இவர், 13 வருடங்களுக்கு முன்னால், தனது 35 வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள தல்மா மலையேறக் குழுவினருடன் இணைந்தார். இந்த மலையேற்ற நிகழ்ச்சி மூலம், தார் பாலைவனத்தில் நடத்தப்படும் ஒட்டகங்களின் சாகசப்பயணம் பற்றி அறிந்து, அதில் பங்குகொண்டார். இதற்குப்பின்னர், ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும், கிளிமாஞ்ஜெரோ சிகரத்தை அடையும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டை அடைந்து, இந்திய நாட்டின் தேசியக் கொடியை அங்கு நாட்டினார்.

1-Indian-woman-achiver

இந்த முயற்சி, அவருக்கு பிற நாடுகளின் உயரமான சிகரங்களையும் அடைந்து, அங்கும் இந்தியக் கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.
அந்த சாதனையையும் தற்போது பிரேமலதா நிகழ்த்தியுள்ளார். இந்த வருடம் மே மாதம், வடஅமெரிக்காவில் உள்ள மெக்கின்லே மலையின் தெனாலி சிகரத்தை அடைந்து, அங்கு இந்திய நாட்டுக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், தனது கனவை அவர் நிறைவு செய்துள்ளார்.

இதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் ஆவார். தற்போது, டாடா ஸ்டீல் குழுமத்தின் சாகச அமைப்பின் தலைவராக விளங்கும் இவர், பிரேமலதாவிற்கு மன மற்றும் உடல் ரீதியான பயிற்சிகளை அளித்து, இந்த சாதனையைப் புரிய அவருக்கு உதவிகரமாக இருந்தார்.மேலும்
மற்ற பெண்களும் தங்களுடைய குடும்பச்சூழலில் இருந்து வெளிவந்து, இதுபோன்ற சாகச அனுபவங்களைப் பெறவைப்பது என்பதே தனது அடுத்த விருப்பமாக இருக்கும் என்று பிரேமலதா தெரிவித்தார்.

உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி


 Last-living-creature-bed-bug


                இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கடிதத்தில் ‘நாசா’ வை கலக்கிய சிறுவன்!


இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென ‘நாசா’ மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார். 7 வயது சிறுவன் டெக்ஸ்டர், இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்பதுதான் லட்சியம். இது தொடர்பாக இவர் அண்மையில் அமெரிக்காவின ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி ‘நாசா’ மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும், விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன், ‘‘அன்புள்ள நாசா, எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு 7 வயது தான் ஆகிறது. எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலதித்த நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Parents News, Boy Mars Letter, Boy Nasa Mars, Boy Nasa Mars Letter, Dexter Nasa Mars, Dexter Nasa Mars Letter, Katrina Anderson, Nasa Mars Letter, Photos, Parents News

இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா, டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு ‘நாசா’அளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான். அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)


இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ 2011ல் பதிவானதாக இருந்தாலும் தற்போதுதான் இது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.
WATCH VIDEO……



 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oDubUuplR5g

குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் (பரபரப்பு காணணொளி)!

 


உலகில் எத்தனையோ விசித்திரங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புலப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்கள் அனைத்துங்கும் இதயம் உள்ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப்பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்கள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காணமுடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத்தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று சொல்லித்தான் புரியவேண்டுமா  என்ன.


இந்தியாவில் பிறந்துள்ள ஒரு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளது அனைவரையும் கடந்த காலங்களில் மட்டுமன்றி இன்றும்  மருத்துவ அதிசமாக நோக்கப்படுகிறது. உடலுக்கு வெளியில் துடிக்கும் அந்த பச்சிளம் குழந்தையில் இதயத்தினை பார்க்கும் ஒவ்வொருவரது இதயங்களும் கணத்துப்போகும் என்பதே உண்மை. மெடிகல் மிராகல் என்று ஆங்கிலத்தில் அழைப்பது இது போன்ற சில  வழமைக்கு மாறான மருத்துவ அதிசயங்களைத்தான். துடிக்கும் இதயத்தை காணளொயில் காணலாம்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=64UpzlPkDP4




 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top