.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 23 August 2013

கவிதைகள்!

கவிதைகள்

வாழ்க்கை

இன்று
தவறிவிடும்
லட்சியக்குறி
நாளை
காத்திருக்கும்
கேள்விக்குறியாம்!
 

புன்னகை
பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!
 
கடவுள்
யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

தேசிய கீதம்
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்

நிலநடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!
  
ஒற்றுமை
அருகருகே இருந்தாலும்
முட்டிமோதாது சுழலும் சமாதானம்
மின்விசிறி!
 
வெளிநாட்டு வேலை
உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்

கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்!

கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்

Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM - தற்காலிக‌  நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers(0,1) - இரும எண்கள் / துவித‌ எண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC(Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command -  கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language -  கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT(Information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise - ஒத்தியக்கம்

தத்துவங்கள்!

++தத்துவங்கள்++

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.


வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!


ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.


நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!


உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.


கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!


உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்


இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!


நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!


நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.

ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

சுவையான தகவல்கள் சில....

எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
 
தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். 

 உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.

 குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
 
திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.
இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.

கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).

திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.

பொது அறிவு வினா-விடைகள்:-

பொது அறிவு வினா-விடைகள்:-

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8) இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மேடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.  
11) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
12) இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
13) இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
14) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
15) உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
16) நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
17) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
18) மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
19) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
20) ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
21) பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை.
22) சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
23) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
24) சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
25) பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.  

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top