
ஆகஸ்டு 15, 2013, இந்தியாவின் 67 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, சுதந்திரதின சிறப்பு உரையாற்றுவது வழக்கம். பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங், இந்தியாவின் 67 வது தனது சுதந்திர தின சிறப்பு உரையை ஆற்ற இருக்கிறார். மற்ற தலைவர்களின் உரையைவிட, பிரதமரின் சுதந்திரதின சிறப்பு உரைக்கு மதிப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவோம்.
அடிமைத் தளத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறுவதில்லை. செயற்கைக்கோள் அனுப்புவதில் நாம் மற்ற நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்பி...