.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 31 May 2013

Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!



 ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!








 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 



இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா?



 அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும்.



 இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.


மொபைல் battery doctor


இது உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க என்ன தான் செய்கின்றது ?




 

  இதனை ஒருமுறை இதனை Click செய்வதன் மூலம் உங்களது Android சாதனத்தின் சக்தியை சேமிக்க முடியும். (One-tap power saving)


    Android சாதனம் இன்னும் எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்குமென்பதனை துல்லியமாக காட்டுகின்றது.


    உங்களது Android சாதனத்தில் குறிப்பிட்டஒரு செயல்பாடு இயக்கப்படுவதன் காரணமாக எவ்வளவு நேர சக்தி வீண் விரயமாகின்றது என்பதுடன் அதனை முடக்குவதன் மூலம் எவ்வளவு நேர சக்தியை சேமிக்கலாம் என்பதனையும் கணக்குப்போட்டு காட்டுகின்றது.







    உங்கள் Android சாதனத்தின் சக்தியை எவ்வாறு சேமிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதுடன். தேவைக்கேற்ற விதத்தில் சில வசதிகளை செயற்படுத்தியும் தேவையற்ற வசதிகளை முடக்கியும் பயன்படுத்த உதவுகின்றது.


    அமைதியாக Battery இன்  சக்தியை வீண் விரயம் செய்யும் மென்பொருள்களை கட்டுப்படுத்துகின்றது.(Task Killer)


    Battery இன்  சக்தியை அதிகம் எடுத்துக்கொள்ளும் மென்பொருள்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

    குறிப்பிட்ட ஒரு நேரத்தில் Battery இன்  சக்தியை சேமிக்கும் வசதியை தருகின்றது. (Pre-made saving mode along with schedule feature)



மேலும் பல வசதிகளுடன் கட்டண மென்பொருளுக்கு ஈடான வசதிகளை வழங்கும் இந்த முற்றிலும் இலவசமான மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.
  




                                                                                               நன்றி! தகவல்தொழில்நுட்பம்

இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்!!!







          இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.




              இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.




             இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 




               சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.





சீறும் சூரியன்: சில புகைப்படங்கள்!!!







சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீச்சுவாலை சீற்றங்களை நாஸாவின் விண்வெளி ஓடம் எடுத்த துல்லியமான சில புகைப்படங்களின் தொகுப்பு இது.




மே 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள் காலகட்டத்தில் சூரியனில் நான்கு உக்கிரமான தீச்சுவாலை சீற்றங்கள் காணப்பட்டன. இந்த வருடத்தில் சூரியனில் அவதானிக்கப்படும் மிக மோசமான தீச்சுவாலை சீற்றங்களாக இவை கருதப்படுகின்றன.
 




 இவ்வாறாக தீப்பிழம்பை பீய்ச்சி அடிக்கும் சீற்றம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.






இந்த சீற்றத்தால் சூரியத் துகள்கள் விண்வெளியில் நெடுந்தூரத்துக்கு வீசியெறியப்படுகிறது. இந்தப் படத்தில் வீச்சு எந்த அளவுக்கு பரவுகிறது என்பதைக் காட்டுவதற்காக சூரியனின் விட்டம் வரை கருப்பு தகடிட்டுக் காட்டப்பட்டுள்ளது





 சூரிய தீப்பிழம்பு சீற்றதால் வீசியெறியப்படும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும்போது துருவப் பகுதிகளில் வானில் ஒளிப் பிம்பங்கள் தோன்றுகின்றன.





 சூரியனைப் பார்க்கும்போது அதில் கருப்பு புள்ளிகளாக தோன்றும் இடங்கள் இந்தச் சீற்றத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன.





 அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எஸ் டி ஓ என்ற விண்கலம் சக்தி வாய்ந்த காமெராக்களைக் கொண்டு துல்லியமான வீடியோ பதிவுகளை அனுப்புகிறது.






சூரியனின் மேற்பரப்பில் காந்த சக்தியால் ஏற்படும் இந்த வளையங்களும் வண்ணமயமானவை.





எட்டு மணிநேர இடைவெளீயில் இரண்டு படங்களை எடுத்து அதனை ஒரு முப்பரிமாண படமாக மாற்றி இந்த வண்ணமய படங்களை நாஸா விண்கலம் உருவாக்குகிறது.



பேபி கீப்பர் பேசிக்!! குழந்தையை பராமரிக்க நவீன தொட்டில்!








                 பொதுவாக குழந்தை பிறந்து விட்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. கைக் குழந்தையாய் இருந்தால் கண் கொத்தி பாம்பு போல எந்நேரமும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலில் இருந்து விழும், தொட்டிலில் இருந்து விழும். தவழும் குழந்தையாக இருந்தால் வீடு முழுக்க ரவுண்ட் அடித்து அலம்பல் பண்ணும். கண்டதையும் எடுத்து வாயில் போட்டு கொள்ளும். தத்தி நடக்கும் குழந்தையாய் இருந்தால் டேபிள், சேர் மீது ஏறி பொருட்களை கீழே தள்ளி விடும். அம்மாக்கள் சமைக்கும் போது வந்து புடவையை இழுக்கும். கொதிக்கும் பாத்திரத்தை தள்ளும். இதில் விபரீதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.




                இந்த பிரச்னைகளை சமாளிக்கதான் நம்ம ஊரில் பல விஷயங்களை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப அம்மாக்கள் கையாண்டு வருகின்றனர். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் போடுகின்றனர். அல்லது புடவையில் தூளி கட்டி, குழந்தையை படுக்க வைக்கின்றனர். தவழும் குழந்தையாக இருந்தால் இடுப்பில் கயிறு கட்டி வீட்டில் எங்காவது கட்டி விடுகின்றனர். அல்லது அம்மாக்களே இடுப்பில் குழந்தையை வைத்து கொண்டு ஒரு கையாலேயே வேலை செய்கின்றனர்.





                   இந்த பிரச்னைகளை சமாளிக்க அமெரிக்காவில் பேபி கீப்பர் என்ற பெயரில் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த 2 அம்மாக்கள்தான் இந்த நவீன பையை கண்டுபிடித்துள்ளனர். பேபி கீப்பர் பேசிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ள இந்த பையை, மொபைல் தொட்டில் என்று கூறலாம். இந்த பையில் குழந்தையை உட்கார வைத்து அதில் உள்ள கொக்கிகளை சுவரில் மாட்டி விட்டால் போதும். கண்ணெதிரிலேயே குழந்தையை பார்த்தபடியே, கொஞ்சி கொண்டே அனைத்து வேலைகளை யும் முடித்து விடலாம். குழந்தை என்ன செய்கிறதோ என்ற பயம் இல்லை. 






              சியாட்டில் நகரில் வசிக்கும் 4 குழந்தைகளுக்கு தாயான டோன்ஜா கிங் மற்றும் 6 குழந்தைகளுக்கு தாயான எலிசா ஜான்சன் ஆகியோர்தான் இதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அம்மாக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ளலாம். 35 பவுண்டு எடை வரை உள்ள குழந்தைகளை இந்த பை தாங்கும். எங்கு சென்றாலும் குழந்தையை அதில் உட்கார வைத்து கண்ணெதிரிலேயே மாட்டி வைக்கலாம். எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லலாம் என்று டோன்ஜா வும் எலிசாவும் கூறுகின்றனர். 



Thursday, 30 May 2013

"மீண்டும் உயிர் பெற்றது!!- 400 ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து போன தாவரம்"







               கனடாவின் வடக்கு பகுதி வடதுருவத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி பகுதியில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த பனிமலைகள் தற்போது வெப்ப உயர்வு காரணமாக உருகி  தரைப்பகுதி தெரிந்தது.






              அந்த இடத்தில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்த தாவரங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனி உறைந்தபோது இவையும் உறைந்துபோய் இருந்தன. இதனால் இந்த தாவரங்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.






             ஆனால் இப்போது பனி விலகியதும் மீண்டும் அந்த தாவரங்கள் உயிர்பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top