சாதாரணமாக சிங்கப்பூர் .துபாய் மலேஷியா என சுற்றுலா சென்று வருபவர்களும் ,அங்கு வேலை பார்த்துவிட்டு வருபவர்களும் சந்தோசமாக வாங்கி வருவது LED அல்லது LCD டி.வி. மேலும் சில எலெக்ட்ரானிக் பொருட்கள்..இனி இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டு வரப்படும் டி.வி க்களுக்கு இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இருக்காது என சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட அந்த நாடுகளில் இவற்றின் விலை மிகவும் குறைவு.
உதாரணமாக:-
SONY 46 அங்குல LCD TV யின் இந்திய விலை ஏறக்குறைய 60000 ரூபாய் அதே TVயை துபாயில் வாங்கினால் வெறும் 37000 ரூபாய்தான்.
அதே போன்று இந்தியாவில் ஏறக்குறைய 25,500 ரூபாய்க்கு விற்பனையாகும் LG 32 INCH LED TV சிங்கப்பூரில் 14000 ரூபாய்க்கு கிடைக்கிறது .
சாம்சங் நிறுவனத்தின் 40-inch 3D LED TV இங்கு 74000 ரூபாய் பாங்காங்கில் அதன் விலை 42000 ரூபாய்தான்.. டி.வி. மட்டுமின்றி நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களும் மற்ற நாடுகளில் விலை குறைவு.
இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் மூலமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 டி.வி க்கள் வருகிறது.என Consumer Electronics and Appliances Manufacturers Association என அழைக்கப்படும் CEAMA தெரிவிக்கிறது.
இவ்வாறு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் காரணமாக இந்தியாவில் மார்க்கெட் நடுநிலை, ,வியாபாரத்திட்டங்கள் மற்றும் சட்டப்படியான விநியோகத்திட்டம் ஆகியவை தடுமாறுகிறது.மேலும் இந்திய சந்தையில் பொருள் வாங்கும் மனநிலை குறைகிறது.என சோனி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுனில் நய்யார் தெரிவித்தார்.
இதனால் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கியுள்ள சாம்சங்,சோனி ,எல்ஜி மற்றும் பேனசானிக் போன்ற கம்பெனிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டுவரப்படும் டி.வி க்களுக்கு இனி இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பனசானிக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் வாரண்டியுடன் இருந்தாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கிளைகம்பெனிகளிடம் பேசி சர்வதேச வாரண்டிமுறையை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததனர்.
இதற்கிடையில் வெளிநாடுகளில் விலை மலிவாக கிடைக்கும் டிவி இங்கு ஏன்அதிக விலைக்கு விற்கப்படுகிறது என கேட்டபோது இங்கு மற்ற நாடுகளை விட வரி விதிப்பு முறைகளின் காரணமாக 30% முதல் 40% அதிக வரி ,உற்பத்தி செலவு மற்றும் பலகட்ட விநியோக முறை ஆகியவை இருப்பதால் இந்த கூடுதல் விலை என்று சாம்சங் நிறுவன தரப்பில் கூறினார்.மேலும் இப்படி வெளி நாடுகளில் இருந்து கொன்து வருவதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரியிலும் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இதுபற்றி அரசு தெளிவான முடிவு எடுக்காத நிலையில் இனி வெளி நாடுகளிலிருந்து வாங்கி வரும் டி.வி.க்களை இங்கு சர்வீஸ் செய்வது என்பது இனி கடினம்தான்.அரசு வரிவிதிப்பு முறைகளை மாற்றி இங்கும் குறைந்த விலையில் டிவிக்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்.