.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பழமொழி விளக்கம். Show all posts
Showing posts with label பழமொழி விளக்கம். Show all posts

Sunday, 5 January 2014

ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி

என்னென்ன தேவை? பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி...

Wednesday, 1 January 2014

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

    இன்பமே துன்பம்:-நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம்...

Monday, 30 December 2013

வாழ்வின் ரகசியம் !!!

வாழ்வின் ரகசியம் !!! "வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன். "தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார். "புரியல குருவே.." என்றான். "எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும். புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார...

Sunday, 29 December 2013

உணவுக்கும், பசிக்கும் ‌நிறைய தொடர்பிருக்கிறது...?

உணவுக்கும், பசிக்கும் ‌நிறைய தொடர்பிருக்கிறது. அது பற்றி ‌நிறைய பழமொழிகளும் உள்ளன. ஒவ்வொன்றும் அனுபவித்துக் கூறப்பட்ட வார்த்தைகளாகும். பழமொழியைப் படிப்போமா? பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே. உண்ட ‌வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே. உண்டி சுருங்கின் பெண்டிருக்கு அழகு. கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல. பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம். கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம். ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான். பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார். தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எச்சில்...

Wednesday, 18 December 2013

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" நேர் விளக்கம் நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை. அறிந்த விளக்கம் : உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும். அறியாத விளக்கம் : இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதன் விளக்கம், நாயகன் = கடவுள் "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்". கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே...

Tuesday, 17 December 2013

குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம்...

Monday, 16 December 2013

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்" - பழமொழி விளக்கம்

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்" நேர் விளக்கம்காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)அறிந்த விளக்கம் :சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.அறியாத விளக்கம் :1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top