.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தமிழனின் வரலாறு! பயனுள்ள தகவல். Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு! பயனுள்ள தகவல். Show all posts

Tuesday, 20 March 2018

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!   பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத...

Thursday, 16 January 2014

முதுமை என்பது வரமா..? சாபமா..?

           இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நகரங்களில் 17.3 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில்...

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!  மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும். ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும்...

ஐ லவ் யு...அப்பா...உங்கள் மகன் சொல்ல வேண்டுமா...?

நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும். நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும்.  ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான...

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!

 அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள். இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை........... தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!! ...

சருமத்தில் ரோமமா..? நீக்கலாம்...! தடுக்கலாம்..!

 நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு . அழகுத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... தொடர்ந்து இங்கே படிக்கலாம்....               சருமத்தில் ரோமமா..? நீக்கலாம்...! தடுக்கலாம்..! ...

Wednesday, 15 January 2014

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) .....     தொடர்ந்து இங்கே படிக்கலாம்....  மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!! ...

டீ தூளில் - எது ஒரிஜினல்?எப்படிக் கண்டுபிடிப்பது?

ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்: இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்! முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின்.....     தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... டீ தூளில் - எது ஒரிஜினல்?எப்படிக் கண்டுபிடிப்பது...

Wednesday, 8 January 2014

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்விலங்கிடலாமா?சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய...

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!

சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.அத்திட்டத்தின்படி, சென்னை,...

Tuesday, 7 January 2014

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?

சஹாரா:“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.“ஆரஞ்ச்’ வந்த வழி:வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.தாய் + தந்தை:தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.உதகமண்டலம்:தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று...

Sunday, 5 January 2014

ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி

என்னென்ன தேவை? பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி...

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம்பூவின் பயன்கள்:- மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும்,...

ஆக்ஸிஜன் பயன்பாடு…

ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன் இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது.  நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில், சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே பயன்படுத்துகிறது.  சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான்.  இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது. காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே உபயோகிக்கிறது.  எனவே, நீண்ட நேரம்...

Saturday, 4 January 2014

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top