.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday 1 January 2014

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராகிறாரா விஷால்?



ஆம் ஆத்மி என்ற கட்சி, தொடங்கிய ஒரே ஆண்டில் வியத்தகு வெற்றி பெற்று தலைநகர் டில்லியில் ஆட்சி அமைத்து டோட்டல் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. அதோடு, 40 ஆண்டுகால அரசியல் கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், சமந்தா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அக்கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், நடிகர் விஷால், அந்த கட்சியின் தமிழக தலைவராகப்போவதாக ஒரு செய்தி பரபரப்பை கூட்டியது. அதிலும் இதுவரை அரசியல் பற்றி ஒரு கருத்துகூட சொல்லாத விஷாலுக்குள்ளும் ஒரு அரசியல்வாதி இருந்து கொண்டிருந்தாரா? என்று பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றனர்.

ஆனால், இநத செய்தி விஷாலின் காதுக்கு சென்றபோது, அவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்னுமே புரியலையே என்றாராம். அப்போதுதான் நீங்க பேப்பரே படிக்கிறது இல்லையா என்று சொல்ல ஆரமபித்தவர்கள் அக்கட்சியின் டில்லி வரலாறை சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள்.

அதன்பிறகுதான், அப்படியா சங்கதி. நானே இப்பத்தான் அந்த கட்சியை பத்தி கேள்விப்படுறேன். அதற்குள் நான் அக்கட்சியின் தமிழக தலைவராகப்போறதா யாரு பரப்பி விட்டாங்க? ஒன்னுமே புரியலையே சாமி. என்று மண்டையை சொறிந்தாராம் விஷால்.

சரி எப்படியோ செய்தி பரவிப்போச்சு. கட்சிப்பணி வா வா என்கிறது. உங்க அபிப்ராயம் என்ன? என்று கேட்டபோது, என் படத்துல அரசியல் இருந்தாகூட எனக்கு அது பிடிக்காது. அந்த அளவுக்கு அரசியல்ல ஈடுபாடே இல்லாதவன் நான். நானாவது அரசியலுக்கு வர்றதாவது. அட போங்கண்ணே ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம் விஷால்.

அனாமிகா நயன்தாரா கர்ப்பிணி இல்லையாம்..!



இந்தி சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான் போன்ற நடிகர்கள் நடிக்கிற படங்கள்தான் 100 கோடியை மிஞ்சிய வசூலை குவிக்கும். ஆனால், முதன்முதலாக வித்யாபாலனின் கஹானி படம் அந்த ரெக்கார்டை உடைத்தெறிந்துள்ளது. இதனால் இப்போது வித்யாபாலனின் ஹீரோயினி இமேஜூம் கான் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறதாம்.

அப்படி வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த கஹானி படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான அனாமிகாவில் நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். வித்யாபாலனுக்கு இணையான நடிப்பை என்னாலும் தர முடியும் என்று தில்லாக சொல்லி நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த படத்தின் கதையின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் அப்படத்தை இயக்கும் சேகர்முல்லா.அதாவது, புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரை தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம். இதனால் கர்ப்பிணி என்பதுதான் அந்த கதையின் அடிநாதமாக விளங்கியது. அது இல்லாமல் படமாக்கினால் எப்படி அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிககும் என்று சிலர் அவரை கேட்கிறார்களாம்.

அதற்கு, இந்தியில் செய்யாத ஒரு விசயத்தை ரீமேக்கில் செய்ய நினைத்தபோது வந்த யோசனைதான் இது என்று சொன்ன சேகர்முல்லா, இந்த படம் நயன்தாராவின் பர்பாமென்சில் இன்னும் வேறுமாதிரியாக வந்துள்ளது. கஹானி இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் என்கிறாராம்.

ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்...!




தலவரலாறு:

 ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.

முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை - காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 - 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

Tuesday 31 December 2013

எதிர்நீச்சலால் சங்கத் தலைவரான சிவகார்த்திகேயன்..!!!



 தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.

ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது.

படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.

'ஆரம்பம்' 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால், திரையரங்கள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்போ அந்தளவிற்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 'எந்திரன்' படம் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள்.'ஆரம்பம்' தயாரிப்பாளர் வெளிப்படையாக வசூலைத் தெரிவிக்காத வரை, வசூல் 100 கோடி என்ற குழப்பம் தொடரத்தான் செய்யும்.

படத்தயாரிப்பாளருக்கு லாபம், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்றால் கண்டிப்பாக 'எதிர்நீச்சல்', 'சூது கவ்வும்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'பாண்டியநாடு', 'ராஜா ராணி', 'தேசிங்குராஜா' எனப்பட்டது.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில், "எங்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படங்கள் என்றால், 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபம்', 'ராஜா ராணி'. மற்ற படங்களான 'சூது கவ்வும்', 'பாண்டியநாடு', 'தேசிங்குராஜா' ஆகியவை குறைந்த லாபம் சம்பாதித்தது” என்றார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே கொடுத்த லாபத்தைப் பார்த்து, அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் குறைந்த காலத்தில் 20 கோடியைத் தொட்டு இருப்பது பல முன்னணி நடிகர்களை வியப்பில் ஆழ்ந்தியிருக்கிறது.

2013-ம் வருடத்தில் தடதடவென முன்னேறியது சிவகார்த்திகேயன் தான்.

தமிழ் சினிமா 2013 : விளம்பரத்தை விரிவாக்கிய ட்விட்டர்...!!!



 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ல் படங்களை பிரபலப்படுத்தும் யுக்தியில் ட்விட்டர், யு-டியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறன.


2012ல் ஆண்டை விட 2013ல் வெளியான பல்வேறு படங்களுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனியாக கணக்கு தொடங்கப்பட்டது. அதில் படத்தைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இந்த முயற்சி பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.


'ராஜா ராணி' படத்திற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில், படம் வெளியாவதற்கு முந்தைய தினம், படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால் நயன்தாரா பெயர் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்ட்டானது. இப்போட்டிகளால் நல்ல விளம்பரமும், படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது என்றால் மிகையல்ல.


'இரண்டாம் உலகம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'விஸ்வரூபம்', 'சேட்டை', 'நேரம்', 'சிங்கம் 2', 'தங்க மீன்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனியாக ட்விட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக் தளத்தில் தனியாக ஆரம்பித்து, படத்தினை விளம்பரப்படுத்தினார்கள். 2013-ல் திரைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்தது.


ட்விட்டர் தளத்தில் 'விஸ்வரூபம்' பட சர்ச்சையின் போது #ISupportKamal,


'தலைவா' பட சர்ச்சையின் போது #Thalaivaa மற்றும் டீஸர், டிரெய்லர் வெளியான போது உருவாக்கப்பட்ட டேக்குகள்,


'ஆரம்பம்' வெளியான போது #Arrambam, #BiggestBlockbusteroftheyearArrambam, #ArrambamCensorDay


 உள்ளிட்ட பல டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட்டானது.


இவ்வாறு சமூக வலைத்தளங்கள் படங்களை பிரபலப்படுத்தும் விதத்தில் பல விஷயங்களில் உதவியது. அஜித்தை விமர்சித்து விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டேக்குகள், விஜய்யை விமர்சித்து அஜித் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டேக்குகள் என அவப்பெயரும் சமூக வலைத்தளங்களால் வாரி வாரி வழங்கப்பட்டன.


2014ல் பெரியளவில் படங்களை பிரபலப்படுத்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'



புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.


புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.


அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட பேஸ்புக், கூகுள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.


இப்படி கொத்துக் கொத்தாக பாஸ்வேர்டுகள் களவுபோவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதுதான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.


பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இதுவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.


எனவே, புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள்.


பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.


எனவே பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.


பாஸ்வேர்டை மாற்றுங்கள். இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.?




இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது.


0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சங்களைக் கொட்டிச் சேருவது என்பது எல்லா மாணவர்களாலும் இயலாத காரியம்.இப்படிப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பை இலவசமாக வழங்கி, கையோடு ராணுவத்தில் டாக்டர் வேலையையும் வழங்குகிறது.


மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 130 இடங்கள் உள்ளன. 105 இடங்கள் மாணவர்களுக்கும், 25 இடங்கள் மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, ராணுவ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வைச் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. 2014ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.


ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேரப் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் தேவை. வயது 17 முதல் 22க்குள் இருக்க வேண்டும். ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானதும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


இந்த ஆன்லைன் தேர்வில் ஆங்கிலம், லாஜிக்-ரீசனிங் பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்வி கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக 130 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களின் படிப்புக்கான அனைத்துச் செலவையும் பாதுகாப்பு அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது. டியூஷன் கட்டணம், விடுதி, உணவு வசதி, புத்தகம், சீருடை அனைத்தும் இலவசம். படிப்பு செலவுகளுக்காகத் தனியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.


4 அரை ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மராட்டிய மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கும். ராணுவ மருத்துவமனைகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் முடித்ததும் ராணுவ மருத்துவப் பிரிவில் அதிகாரி அந்தஸ்துடன் மருத்துவர் பணியில் நியமிக்கப்படுவார்கள்.


ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, அனைத்து வசதிகளும் உண்டு. ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து பணியாற்ற விரும்பினால் பணியைத் தொடரலாம்.


2014ஆம் ஆண்டுக்கான ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். இதுதொடர்பான முழு விவரங்களை அக்கல்லூரியின் இணையதளத்தில்( http://afmc.nic.in/) மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் மருத்துவப் படிப்புகள்...!




உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.


முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது..

சென்னையில் சிறந்து விளங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ரேடியாலஜி பிரிவில் முதுநிலைப் படிப்பிற்கான அனுமதி 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவு பெங்களூரு மருத்துவக் கல்லூரிகளில் 3 அல்லது 3.5 கோடிக்கு கிடைக்கின்றது. எலும்பு மற்றும் தோல் மருத்துவத்திற்கான உயர்கல்வி அனுமதி ஒன்றிலிருந்து ஒன்றரை கோடியாக இருக்கின்றது. குழந்தை மருத்துவத்திற்கான அனுமதி 1.6 கோடிக்கு கிடைக்கின்றது.


ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது. இத்தகைய முறை பெற்றோர்களுக்குமே திருப்தி அளிக்கவில்லை. இதுபோல் ஏல முறையில் அனுமதி கிடைப்பது சொத்துகளை வாங்குவதுபோல் இருக்கின்றது. அதுபோல் பணம் கொடுக்க இயலாத பெற்றோர்களின் பிள்ளைகளே எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் ரேடியாலஜி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 683 சீட்டுகளே அந்தப் பிரிவில் உள்ளன. மாணவர்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. இந்தப் பற்றாக்குறை செலவினத்தை அதிகரிக்கின்றது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.


இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என்று கல்லூரி தரப்பு நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது நிர்வாக செலவு அதிகரிப்பதால் அதனை ஈடுகட்ட அனுமதிக் கட்டணம் அதிகரிக்கின்றது என்பது அவர்கள் தரப்பு கருத்தாகும்.

நியூசிலாந்து தொடரில் இந்திய அணி: யுவராஜ்சிங் சிங் மிஸ்ஸிங்!



இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது.


அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 
இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு அறிமுக வீரர் பின்னி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.


வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒரு நாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதி நேப்பியரில் துவங்க உள்ளது.


இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த போட்டியில் தோனி, ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ராஹானே, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, இஷ்வர் பாண்டே, வருண் ஆரோன், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் அடங்கிய இந்திய அணி விளையாட உள்ளது.

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி..!



பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.

நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.

தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!




வரிசை எண் – படம் வெளியான தேதி – படத்தின் தலைப்பு – தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளரின் பெயர் – இயக்குநரின் பெயர் – டப்பிங் மொழி

மேற்குறிப்பிட்ட வரிசையில் இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது..!

1 4/1/2013 நண்பர்கள் கவனத்திற்கு வி.சகாதேவன், சுப்பராயன் கே.ஜெயக்குமார்
2 4/1/2013 குறும்புக்கார பசங்க கே.பாண்டியன், அருள்ராஜ் டி.சாமிதுரை
3 4/1/2013 மயில் பாறை டி.சக்கரவர்த்தி பி.சிவக்குமார்
4 4/1/2013 கனவு காதலன் ட்ரீம் மெர்ச்சண்ட் திருநா அண்ணன்
5 4/1/2013 நிமிடங்கள் ஜெயந்தி கீதா கிருஷ்ணா கீதா கிருஷ்ணா
6 4/1/2013 கள்ளத்துப்பாக்கி சி.எஸ்.முருகேசன்-தேவி ரவிதேவன் லோகியாஸ்
7 4/1/2013 டேபிள் நம்பர் 21 HINDI
8 4/1/2013 அருந்ததி வேட்டை கே.ஜெயராமன்-எஸ்.வேல்முருகன் விஜி தம்பி
 TELUGU
9 4/1/2013 மாயகத்தி Cho ooog oh ENGLISH
10 4/1/2013 கமாண்டோஸ் ஏகே 47 Red Dawn ENGLISH
11 11/1/2013 அலெக்ஸ் பாண்டியன் கிரீன் ஸ்டூடியோ சுராஜ்
12 13/1/2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா தேனாண்டாள் பிலிம்ஸ் மணிகண்டன்
13 13/1/2013 புத்தகம் ராம் பிக்சர்ஸ் விஜய் ஆதிராஜ்
14 13/1/2013 சமர் எம்.கே.எண்டர்பிரைசஸ் திரு
15 13/1/2013 விஜயநகரம் அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் தன்வீர்
16 25/1/2013 பத்தாயிரம் கோடி மாயா கிரியேஷன்ஸ் வி.சீனிவாசன் சுந்தர்
17 25/1/2013 காதல் வலி
18 1/2/2013 கடல் மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம்
19 1/2/2013 டேவிட் ரிலையன்ஸ் மீடியா பிஜோய் நம்பியார் HINDI
20 7/2/2013 விஸ்வரூபம் ராஜ்கமல் பிலிம்ஸ் கமல்ஹாசன்
21 8/2/2013 மெளன விழிகள் லேனா கிரியேஷன்ஸ் முருகவேல்
22 15/2/2013 வனயுத்தம் அக்ஷயா கிரியேஷன்ஸ் ரமேஷ்
23 15/2/2013 சில்லுன்னு ஒரு சந்திப்பு மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் ரவி லல்லின்
24 15/2/2013 நேசம் நெசப்படுதே செல்வா திரைக்கூடம் ராஜசூர்யன்
25 15/2/2013 ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் யு டிவி ரெமோ டிசெளசா HINDI
26 22/2/2013 பாட்டி சுந்தரமூர்த்தி பிலிம்ஸ் என்.ரமேஷ்குமார்
27 22/2/2013 ஆதிபகவன் அன்பு பிக்சர்ஸ் அமீர்
28 22/2/2013 ஹரிதாஸ் ராம்தாஸ் புரொடெக்சன்ஸ் குமரவேலன்
29 22/2/2013 டை ஹார்ட்-5 ENGLISH
30 1/3/2013 வெள்ளச்சி கீதாலயா மூவிஸ் வேலு விஸ்வநாத்
31 1/3/2013 என் காதலுக்கு நானே வில்லன் ஷோபா சினி கலர்ஸ் கே.எஸ்.மணி TELUGU
32 1/3/2013 நான்காம் பிறை சுதா ஸ்கிரீன்ஸ் வினையன் MALAYALAM
33 1/3/2013 சுண்டாட்டம் பிலிம் பேம் பிரம்மா ஜி.தேவ்
34 1/3/2013 சந்தமாமா கிளாஸிக் சினிமாஸ் ஆர்.இராதாகிருஷ்ணன்
35 1/3/2013 ஆண்டவ பெருமாள் பராசக்தி சினிமாஸ் ப்ரியன்
36 1/3/2013 லொள்ளு தாதா பராக் பராக் ராஜ் கென்னடி பிலிம்ஸ் ஜெயக்குமார்
37 1/3/2013 காதல் போதை
38 1/3/2013 நரன் குல நாயகன் ENGLISH
39 8/3/2013 ஒன்பதுல குரு காஸ்மோ அண்ட் பாஸ் பிலிம்ஸ் பி.டி.செல்வக்குமார்
40 8/3/2013 மதில் மேல் பூனை Sri Vishali Films பரணி ஜெயபால்
41 15/3/2013 வத்திக்குச்சி பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் பி.கின்ஸ்லின்
42 15/3/2013 பரதேசி பி ஸ்டூடியோ பாலா
43 15/3/2013 நினைவோடு கலந்துவிடு LULU Creations அஜித் எம்.கோபிநாத்
44 15/3/2013 கரும்புலி ENGLISH
45 15/3/2013 கருடபார்வை நாராயணா பிலிம்ஸ் விவேஹானந்தன் TELUGU
46 22/3/2013 கண் பேசும் வார்த்தைகள் Sri Balaji Cine Creations ஆர்.பாலாஜி
47 22/3/2013 நானும் என் ஜமுனாவும் குருராஜா இண்டர்நேஷனல் ராஜா முத்துப்பாண்டியன்
48 22/3/2013 கருப்பம்பட்டி சுந்தர் பிக்சர்ஸ் பிரபுராஜசோழன்
49 22/3/2013 மறந்தேன் மன்னித்தேன் மஞ்சு எண்டெர்டெயின்மெண்ட் குமார் நாகேந்திரா
50 22/3/2013 அழகன் அழகி அண்ணாமலையார் பிக்சர்ஸ் நந்தா பெரியசாமி
51 22/3/2013 கீரிப்புள்ள ஏஞ்செல் பிலிம் இண்டர்நேஷனல் பெரோஸ்கான்
52 22/3/2013 மாந்தரீகன் ஆர்.பி.பிலிம்ஸ் அணில் MALAYALAM
53 29/3/2013 சென்னையில் ஒரு நாள் ரேடான் பிக்சர்ஸ் ஷகீத் காதர்
54 29/3/2013 மாமன் மச்சான் ஏ.முகமது அனிபா எம்.ஜெயராஜ்
55 29/3/2013 பிப்ரவரி 31 எஸ்.எஸ்.பிரேம்குமார் எஸ்.எஸ்.பிரேம்குமார்
56 29/3/2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பசங்க புரொடெக்சன்ஸ் பாண்டிராஜ்
57 29/3/2013 கந்தா வி.பி.பிலிம்ஸ் பாபு கே.விஸ்வநாத்
58 12/4/2013 சேட்டை யூ டிவி கண்ணன்
59 12/4/2013 4 பவர்ஸ்டார் மூவிஸ் பகவதி பாலா
60 12/4/2013 உனக்கு 20 எனக்கு 40 பண்ணாரியம்மன் மூவிஸ் கே.பி.எஸ்.அக்சய்
61 12/4/2013 மறுவிசாரணை செந்தில் ஆண்டவர் சினிமாஸ் வி.எஸ்.விஜயகோபால் TELUGU
62 12/4/2013 நினைவுகள் அழிவதில்லை அக்னி கலைக்கூடம் பகத்சிங்கண்ணன்
63 12/4/2013 அதிரடி வேட்டை 14 ரீல்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் சீனு வைட்லா TELUGU
64 19/4/2013 திருமதி தமிழ் இராதே பிலிம்ஸ் ராஜகுமாரன்
65 19/4/2013 கெளரவம் டூயட் மூவிஸ் ராதாமோகன்
66 19/4/2013 உதயம் என்ஹெச்-4 தயாநிதி அழகிரி மணிமாறன்
67 19/4/2013 ரெஜினா ரெயின்போ ஆர்ட் புரொடெக்சன்ஸ் எஸ்.எம்.மன்சூர்
68 19/4/2013 இரு கில்லாடிகள் ஷான்ஸ் இண்டர்நேஷனல் ஷான்
69 19/4/2013 யார் இவள் விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் ஆர்.ஃபேக்டர் MALAYALAM
70 26/4/2013 அயன்மேன்-3 ENGLISH
71 26/4/2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து ஏட்ரியா டெக் பிலிம்ஸ் பாலசேகரன்
72 26/4/2013 நான் ராஜாவாகப் போகிறேன் உதயம் விஎல்எஸ் சினி மீடியா பிருத்வி ராஜ்குமார்
73 26/4/2013 யாருடா மகேஷ் அன்பு பிக்சர்ஸ் ரா.மதன்குமார்
74 1/5/2013 சூது கவ்வும் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நலன் குமரசாமி
75 1/5/2013 எதிர் நீச்சல் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
76 1/5/2013 மூன்று பேர் மூன்று காதல் மகேந்திரா டாக்கீஸ் வசந்த்
77 1/5/2013 மனிதனாக இரு சேதுமணி அனந்தா சேதுமணி அனந்தா
78 10/5/2013 ராஜராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ. வி கிரியேஷன்ஸ் மணிவண்ணன்
79 10/5/2013 சிபி லேக்னா பிலிம்ஸ் ஜார்ஜ் பிரசாத்
80 10/5/2013 அமெரிக்கா டூ அமிஞ்சிக்கரை சக்ரா கிரியேஷன்ஸ் தசரத் TELUGU
81 10/5/2013 யுத்தம் Scott Waugh / Mouse Mccoy ENGLISH
82 10/5/2013 வெற்றி வீரன் வேல் பிலிம்ஸ் ஜெயந்த் TELUGU
83 17/5/2013 நேரம் வின்னர் புல்ஸ் – விஸ்வநாதன் அல்போன்ஸ் புத்திரன்
84 17/5/2013 மாடப்புரம் ஓயே புரொடெக்சன்ஸ் பிரவீண்
85 17/5/2013 ருத்ராவதி பிரிமியர் பிலிம்ஸ் – கே.ரவிசங்கர் ஜெயசந்திரன் TELUGU
86 17/5/2013 நீ எனக்காக மட்டும் சேலம் நியூ மாடர்ன் சினிமாஸ் கே.பி.சக்திவேல்
87 17/5/2013 வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் வி.ராமச்சந்திரன் தபூ சங்கர்
88 17/5/2013 கண்ணுக்கு இமையானால் ஜெயதேவி மூவி மேக்கர்ஸ் குமரகுருநாதன்
89 24/5/2013 மாசாணி SreeGreen Productions-சரவணன் பத்மராஜா-எல்.ஜி.ஆர்.
90 24/5/2013 சோக்காலி யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ்-நாவரசன் ஏ.சரணா
91 24/5/2013 கல்லாப்பெட்டி பி.எஸ்.கருணாநிதி ராரா
92 24/5/2013 நடிகையின் டைரி ஆதிராம் அனில் MALAYALAM
93 24/5/2013 Fast & Furious – 6 ENGLISH
94 24/5/2013 கரிமேடு ஆப்பிள் பிளாஸ்ஸம் கிரியேஷன்ஸ் சீனிவாசராஜூ KANNADAM
95 30/5/2013 குட்டிப்புலி வில்லேஜ் தியேட்டர்ஸ் முத்தையா
96 30/5/2013 இசக்கி என்.கணேசன் எம்.கணேசன்
97 30/5/2013 கண்ணாடி பிசாசு Charlie Vaughen ENGLISH
98 30/5/2013 போலீஸ் தாதா சக்ரா கிரியேஷன்ஸ் பூரி ஜகன்நாத் TELUGU
99 7/6/2013 யமுனா எஸ்.எஸ்.ஸ்டூடியோஸ் – எஸ்.சிவா ஈ.வி.கணேஷ்பாபு
100 7/6/2013 சொல்ல மாட்டேன் பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்.பி.இஸ்மாயில்
101 7/6/2013 அபாய கிரகம் (After Earth) ஈ.வி.கணேஷ்பாபு ENGLISH
102 7/6/2013 நாயக் கிரெளன் மூவிஸ் வி.வி.விநாயக் TELUGU
103 14/6/2013 தீயா வேலை செய்யணும் குமாரு யூ டிவி சுந்தர் .சி
104 14/6/2013 தில்லுமுல்லு வேந்தர் மூவிஸ் பத்ரி
105 14/6/2013 சூப்பர்மேன் ENGLISH
106 21/6/2013 தீக்குளிக்கும் பச்சை மரம் மில்லினியம் விஷுவல் மீடியா எம்.வினீஷ்-எம்.பிரபீஷ்
107 21/6/2013 வேல்ட் வார் ENGLISH
108 28/6/2013 அன்னக்கொடி மனோஜ் கிரியேஷன்ஸ் பாரதிராஜா
109 28/6/2013 துள்ளி விளையாடு ஆர்பி ஸ்டூடியோஸ் வின்சென்ட் செல்வா
110 28/6/2013 மங்கா டிபன் சென்டர் ஜெயம் நந்தா பிலிம்ஸ் வெங்கி TELUGU
111 28/6/2013 அம்பிகாபதி கிரிஷிகா லூல்லா ஆனந்த் எல்.ராய் HINDI
112 5/7/2013 சிங்கம்-2 லஷ்மண்குமார் ஹரி
113 5/7/2013 தி லோன் ரேஞ்சர் ENGLISH
114 12/7/2013 சத்திரம் பேருந்து நிலையம் ஹாஜி சினி கிரியேஷன்ஸ் ரவிபிரியன்
115 12/7/2013 அன்பா அழகா சுந்தரவள்ளி புரொடெக்சன்ஸ் எஸ்.சிவராமன்
116 12/7/2013 காதலே என்னை காதலி ஆர்.எஃப்.சினிமாஸ் – சுமன் ஐ.ஏ.எம்.ஷண்
117 12/7/2013 ருத்ரநகரம் ENGLISH
118 12/7/2013 வேட்டைப்புலி எஸ்.பிரபாகர்-ஆர்.கண்ணன் திரில்லர் மஞ்சு KANNADAM
119 19/7/2013 மரியான் ஆஸ்கர் பிலிம்ஸ் பரத்பாலா
120 26/7/2013 பட்டத்து யானை செராபின் சேவியர் ஜி.பூபதி பாண்டியன்
121 26/7/2013 சொன்னா புரியாது 360 டிகிரி பிலிம் கார்ப்பரேஷன் கிருஷ்ணன் ஜெயராஜ்
122 26/7/2013 களியாட்டம் MALAYALAM
123 26/7/2013 வோல்வர் ENGLISH
124 2/8/2013 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் மூன் ஸ்டார் எஸ்.ஓ.நபிதாஸ்
125 2/8/2013 புல்லுக்கட்டு முத்தம்மா கே.வி.கே.சினி ஆர்ட்ஸ் முத்துப்பாண்டி MALAYALAM
126 2/8/2013 ரவுடி ராஜா சேலம் பி. சங்கர் ஒக்குடு குணசேகர் TELUGU
127 2/8/2013 ஜமீன் சுசித்ரா துரை ஜி.அசோக் TELUGU
128 2/8/2013 ஞாபகங்கள் தாலாட்டும் எம்.எஸ்.ராஜூ TELUGU
129 2/8/2013 கொலை வெறியன் ENGLISH
130 2/8/2013 இரும்புக் கை மாயாவி ENGLISH
131 9/8/2013 தலைவா சந்திரபிரகாஷ் ஜெயின் விஜய்
132 10/8/2013 555 சென்னை சினிமா இந்தியா சசி
133 15/8/2013 ஆதலால் காதல் செய்வீர் தாய் சரவணன் சுசீந்திரன்
15/8/2013 பாசமலர் கே.வி.பி.பூமிநாதன் பீம்சிங்
134 15/8/2013 தி காலனி ENGLISH
135 23/8/2013 தேசிங்கு ராஜா எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – மதன் எழில்
136 23/8/2013 அன்றொரு நாள் நடந்தது என்ன? கருப்பையா கிருஷ்ணன் சக்திசிவம்
137 23/8/2013 Skyline – 2 ENGLISH
138 30/8/2013 பொன்மாலைப் பொழுது அமிர்தகெளரி ஏ.சி.துரை
139 30/8/2013 தங்கமீன்கள் கெளதம் வாசுதேவ் மேனன் ராம்
140 30/8/2013 சும்மா நச்சுன்னு இருக்கு எஸ்தல் புரொடெக்சன்ஸ் ஏ.வெங்கடேஷ்
141 30/8/2013 சுவடுகள் ஜெய்பாலா
142 6/9/2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பிக்சர்ஸ்-மதன் பொன்ராம்
143 7/9/2013 ஆர்யா சூர்யா தேனாண்டாள் பிலிம்ஸ் இராம.நாராயணன்
144 13/9/2013 மத்தாப்பூ சுடலைக்கண் ராஜா தினந்தோறும் நாகராஜ்
145 13/9/2013 மூடர்கூடம் நவீன் நவீன்
146 13/9/2013 உன்னோடு ஒரு நாள் ஜார்ஸி புரொடெக்சன்ஸ் துரை கார்த்திகேயன்
147 13/9/2013 சூப்பர் S.G.R.பிரசாத் பூரிஜெகன்னாத் TELUGU
148 13/9/2013 தி கான்ஜூரிங் ENGLISH
149 20/9/2013 மெளன மழை ஜாபர் அலி ஆனந்த்
150 20/9/2013 அடுத்தக் கட்டம் நவநீதன் கணேசன் முரளிகிருஷ்ணன் முனியன்
151 20/9/2013 6 அபி-அபி பிக்சர்ஸ் வி.இஸட். துரை
152 20/9/2013 யா யா டி.அஜய்குமார் ஐ.ராஜசேகரன்
153 27/9/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கின்
154 27/9/2013 ராஜாராணி ஏ.ஆர்.முருகதாஸ் அட்லி
155 2/10/2013 இ.ஆ.பாலகுமாரா ஜெ.எஸ்.சதீஷ்குமார் கோகுல்
156 2/10/2013 பேஷ்ராம் HINDI
157 4/10/2013 நிலா மீது காதல் ராஜாராம் மூவிஸ்-ஆர்.மைக்கேல்சாமி இளையகுமார்
4/10/2013 நினைத்தாலே இனிக்கும் கவிதாலயா கே.பாலசந்தர்
158 11/10/2013 கயவன் SKY Productions வெங்கி நிலா
159 11/10/2013 நய்யாண்டி பைவ் ஸ்டார் புரொடெக்சன்ஸ் ஏ.சற்குணம்
160 11/10/2013 வணக்கம் சென்னை ரெட் ஜெயிண்ட் பிக்சர்ஸ் கிருத்திகா உதயநிதி
161 18/10/2013 ரகளபுரம் கென் மீடியா மனோ
162 18/10/2013 சித்திரையில் நிலாச் சோறு செந்தூர் பிக்சர்ஸ் ஆர்.சுந்தர்ராஜன்
163 18/10/2013 நுகம் சினர்ஜி புரொடெக்சன்ஸ் ஜெஃபி
164 18/10/2013 நினைவுகள் உன்னோடு கரூர் வி.வி.முருகேசன் உசிலை டி.மகேஷ்பாபு
165 18/10/2013 நிர்ணயம் PCSM Sree Saravanan
166 18/10/2013 அஞ்சல்துறை லதா சினி கிரியேஷன்ஸ் ஏ.ஆர்.ரபி
167 18/10/2013 கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு ENGLISH
168 25/10/2013 இங்கு காதல் கற்றுத் தரப்படும் விஜயா கிரியேஷன்ஸ் Sreedharan
169 25/10/2013 முத்து நகரம் ஐ.பி.சினி ஆர்ட்ஸ் – ஆர்.முருகன் திருப்பதி
170 25/10/2013 சுட்ட கதை லிப்ரா புரொடெக்சன்ஸ் சுபு
171 25/10/2013 ரவுடி கோட்டை சிவம் அஸோஸியேட்ஸ் ஈஸ்வர் TELUGU
172 25/10/2013 வசந்தசேனா ஜெ.ஜெ.விஷூவல்ஸ் ராமன் TELUGU
173 31/10/2013 ஆரம்பம் Sree Sathyasai creations விஷ்ணுவர்த்தன்
174 2/11/2013 பாண்டிய நாடு விஷால் பிலிம் பேக்டரி சுசீந்திரன்
175 2/11/2013 ஆல் இன் ஆல் அழகுராஜா ஸ்டூடியோ கிரீன் எம்.ராஜேஷ்
176 2/11/2013 KIRISH-2 Raakesh Roshan HINDI
177 14/11/2013 ஆப்பிள் பெண்ணே பாண்டியன் ஆர்.கே.கலைமணி
178 14/11/2013 பீட்சா-2 வில்லா திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் தீபன்
179 14/11/2013 ராவண தேசம் New Empire Celluliods அஜய் நூதக்கி KANNADAM
180 14/11/2013 மசாலா TELUGU
181 15/11/2013 அந்த வீட்ல என்னமோ நடக்குது விஜயராஜ் ராஜேஷ்
182 15/11/2013 தோர்-2 ENGLISH
183 22/11/2013 மாயை ஹாலம்மா டாக்கீஸ் ஜெ.ஆர்.கண்ணன்
184 22/11/2013 இரண்டாம் உலகம் பிவிபி செல்வராகவன்
185 22/11/2013 மெய்யழகி ஜி.ரிஸ்வான் ஆர்.டி.ஜெயவேல்
186 22/11/2013 Night of Vegenance ENGLISH
187 22/11/2013 மரண சாசனம் விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட் ஜான் ஆண்ட்டனி MALAYALAM
188 29/11/2013 நவீன சரஸ்வதி சபதம் ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் கே.சந்துரு
189 29/11/2013 விடியும்முன் காயம் ஸ்டூடியோஸ் பாலாஜி கே.குமார்
190 29/11/2013 ஜன்னல் ஓரம் ஹேமந்த் மூவிஸ் கரு.பழனியப்பன்
191 29/11/2013 சொன்னதை செய்வேன் நவநீதம் பிலிம்ஸ் ஏ.ஆர்.வெங்கடேசன்
192 29/11/2013 என்னாச்சு முகமது இஸ்மாயில் Sreemani
193 29/11/2013 அப்பாவுக்குக் கல்யாணம் எஸ்கேஎம் மீடியாஸ் ஆறுமுகச்சாமி
194 29/11/2013 செயிண்ட் டிராகுலா ENGLISH
195 6/12/2013 கல்யாண சமையல் சாதம் அபினேஷ் இளங்கோவன் ஆர்.எஸ்.பிரசன்னா
196 6/12/2013 ஈகோ பெரியசாமி ரவிச்சந்திரன் எஸ்.சக்திவேல்
197 6/12/2013 வெள்ளை-தேசத்தின் இதயம் விஸ்வா டிரீம் வேல்ர்டு ஜூஹெய்ன்
198 6/12/2013 தகராறு தயாநிதி அழகிரி கணேஷ் வினாயக்
199 6/12/2013 பெண் அடிமை இல்லை ரமணா பிலிம்ஸ் ராஜ நாயுடு TELUGU
200 6/12/2013 கும்கி வீரன் ENGLISH
201 6/12/2013 Hunger Games Catching Fire ENGLISH
202 13/12/2013 தேடி பிடி அடி சஹானா மூவிஸ் ஏகன்
203 13/12/2013 இவன் வேற மாதிரி யூ டிவி-திருப்பதி பிரதர்ஸ் எம்.சரவணன்
204 13/12/2013 கோலாகலம் பிஜிஎஸ் பிலிம் இண்டர்நேஷனல் பி.ஜி.சுரேந்திரன்
205 13/12/2013 சந்தித்ததும், சிந்தித்ததும் சிபிசாம் பாலு ஆனந்த்
206 13/12/2013 அச்சம் தவிர் Ramadootha Creations சின்னி கிருஷ்ணா 143
207 20/12/2013 பிரியாணி ஸ்டூடியோ கிரீன் வெங்கட்பிரபு
208 20/12/2013 என்றென்றும் புன்னகை டாக்டர் ராம்தாஸ் அஹமத்
209 20/12/2013 தலைமுறைகள் கம்பெனி புரொடெக்சன்ஸ் பாலுமகேந்திரா
210 20/12/2013 தூம்-3 HINDI 64
211 25/12/2013 மதயானைக் கூட்டம் ஜி.வி.பிரகாஷ் விக்ரம் சுகுமாரன்
212 27/12/2013 புவனக்காடு மலர் மீடியா வி.எம்.மோகன்
213 27/12/2013 விழா ஜே.வி.மீடியா டிரீம்ஸ் பாரதி பாலகுமாரன்
214 27/12/2013 ஜெ.சி.டேனியல் யோகராஜ் பாலசுப்ரமணியம் கமல் MALAYALAM
215 27/12/2013 சார் வந்தாரா ATK Pctures பரசுராம் TELUGU

தமிழ் நேரடி படங்களின் மொத்த எண்ணிக்கை : 151

டப்பிங் படங்கள் : 64
தெலுங்கு : 20
கன்னடம் : 3
மலையாளம் : 8
ஹிந்தி : 7
ஆங்கிலம் : 26

கூகுளில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்டோர் பட்டியல் பார்த்தாச்சா?




ஆண்டுதோறும் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப் பட்டோர் பட்டியலை அறிவிப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போது http://www.google.com/trends/topcharts  என்னும் இணையத்தில்  இந்தாண்டு யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை  தெரிந்து  கொள்ளலாம். இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என ‘தலைவா’ படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக வழக்கம்போல் காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?




தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மனித உடலைப் பற்றி அறிவோம்!



மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-

  1. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. 
  2.  மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
  3. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
  4. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.
  5. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
  6. மனித மூளையின் எடை 1.4 கிலோ.
  7. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்.
  8. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
  9. உடலின் மெல்லிய சருமம் கண் இமை.
  10. மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.
  11. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
  12. மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
  13. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
  14. மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.
  15. ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.
  16. மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
  17. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
  18. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
  19. நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
  20. நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
  21. நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
  22. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
  23. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
  24. நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது. 
  25. உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
  26. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
  27. புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
  28. மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். 
  29. மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
  30. ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
  31. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
  32. நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
  33. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
  34. க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  35. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

தனுஷிற்குக் குரல் கொடுக்கவிருக்கும் அமிதாப்...!!




ராஜ்னா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி, அறிமுகப்படத்திலேயே வசூலையும், ரசிகர்களையும் கோடிகளில் அள்ளிய தனுஷ் தனது இரண்டாவது ஹிந்திப் படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சீனி கும் மற்றும் பா ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை இயக்குனராகப் போற்றப்படும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.


இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத, அதே சமயம் சினிமாவில் பிரபல ஹீரோவாக ஆசைப்படும் ஒரு இளைஞனாக நடிக்கவிருப்பதாகவும், தனுஷிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குரல் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஹிந்தி அறிமுகப் படமான ராஜ்னா சாதனையை முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!




மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர். 

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.



Monday 30 December 2013

நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...




உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.


வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது.  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.


புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.  புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.


விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடு


சென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால்  சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும். 


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.


மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.


புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.


விடிய விடிய சிறப்பு பஸ்கள்


புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!







சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.


தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது.


சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், Ôஎனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.


4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா…Õ என விளக்கம் கொடுத்தார் லின். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.


போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது. ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை.இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சவூதி இளவரசருக்கு மரண தண்டனை?


 
 

சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் மரணத் தண்டனை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.


ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.


உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு பட்டத்து இளவரசர் சல்மான் அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், “ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் பொருந்தும். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என கூறி உள்ளார்.

இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top