.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா!. Show all posts
Showing posts with label சினிமா!. Show all posts

Saturday 4 January 2014

டைரக்டர்களை நேர்முகத்தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன்..!



தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் விஜயசேதுபதி தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவமே இல்லாதவராக இருந்து, குறும் படம் இயக்கியவர் என்றால் நம்பி கால்சீட் கொடுத்து விடுவார். அப்படி அவர் நம்பி நடித்த எந்த படமும் அவரை ஏமாற்றவும இல்லை. அதனால்தான் இப்போது குறும்பட டைரக்டர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் எந்த படத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஒருவர் தன்னிடம் கதை சொல்ல முயற்சி எடுக்கிறார் என்றதுமே அவரைப்பற்றிய மொத்த தகவல்களையும் முன்கூட்டியே நேர்முகத்தேர்வு நடத்துகிறார். அப்போது அவர்கள் சொல்லும் பதில்கள் தனக்கு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே அடுத்த சிட்டிங்கில் கதை கேட்கிறார்.

இல்லையேல், இன்னும் இரண்டு வருடத்துக்கு கால்சீட் டைரி புல்லாகி விட்டது. அதனால் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு கதை கேட்போம் என்று நாசுக்காக சொல்லி நழுவிக்கொள்கிறார். இருப்பினும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவரது அலுவலகத்துக்கு கதைகளுடன் படையெடுககும் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சூரியின் பெயரில் போலி முகவரி..?



நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.

பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்
பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் அதிக பாலோவர்களைப் பெறலாம் என்ற ஆசையே இந்த போலி அக்கவுண்ட் தொடங்குபவர்களின் நோக்கமா இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சூரியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள @im_actor_soori என்ற டிவிட்டர் ஐடியும் போலி என்று சமீபமாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து சூரி விளக்கமளித்தால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

ஸ்டார்களைத் துரத்தும் ஹீரோக்கள்..!




புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்‌ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம்.
நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ பாகவதர் வருகிறார். சினிமாவில் பாகவதரின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு சின்னப்பா வருகிறார். இவர்களை காலி பண்ண ஒரு சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வருகிறார்கள் என்று எப்போதும் ஒருவித ‘கரண்ட்’ பாய்ச்சலிலேயே இருந்திருக்கிறது நமது சினிமாவுலகமும் அதற்கு முந்தைய நாடக உலகமும்.

அதன் நீட்சியாக கமல், ரஜினி, அஜீத், விஜய் என்று பரபரப்பாகி இதோ- விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரைக்கும் ஒரு மவுன யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது கோடம்பாக்கத்தில். (நடுவில் வந்த விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராமராஜன் போன்றவர்கள் யாராலும் ரஜினி- கமல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. அஜீத்-விஜய்யை தவிர. இந்த அஜீத் விஜய்யின் இடத்தை பிடிக்கத்தான் இப்போதிருக்கும் நடிகர்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். சரி, அதுபற்றி பின்னால் பார்ப்போம்) பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியதாக கூறுகிறது சினிமா வரலாறு. அவரைத் தங்கத்தட்டில் சாப்பிட வைக்கிற அளவுக்கு பாகவதர் காலத்தை பொற்காலமாக்கினார்கள் ரசிகர்கள். ஒருமுறை நேரு தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் போகிற இடங்களில் எல்லாம் நேருவை வரவேற்க திரண்டிருந்தது கூட்டம். பாகவதர் வீட்டை கடக்கும்போது மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருக்க, இங்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றாராம் நேரு. அது உங்களை பார்க்க வந்த கூட்டமல்ல, பாகவதரை பார்க்க வந்த கூட்டம் என்றார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அப்படியென்றால் அவரை காங்கிரசில் சேரச் சொல்லுங்களேன் என்று நேரு கொக்கி போட, காமராஜரே பாகவதரிடம் சென்று காங்கிரசில் சேர அழைத்ததாக கூறுகிறார்கள்.

ரஜினி கமலுக்கு இருந்த அதே ஜாக்கிரதை உணர்வு அப்போதே இருந்திருக்கிறது பாகவதருக்கு. அந்த அழைப்பை அவர் நாசுக்காக மறுத்தும் இருக்கிறார். இவருக்கு போட்டியாக பிற்பாடு வந்த பி.யூ.
சின்னப்பாவையும் காங்கிரஸ் விடவில்லை. கட்சியில சேருங்களேன் என்று அன்பு அழைப்பு விடுக்க, அந்த விஷயத்தில் பாகவதரையே பின்பற்றினாராம் அவரும். பாகவதருக்கும் கிட்டப்பாவுக்குமான போட்டியை இப்போது படித்தாலும் ஒரு துப்பறியும் நாவலை போல விறுவிறுப்பாக இருக்கிறது. பாகவதரின் பவளக்கொடி நாடகம் கொடி கட்டி பறந்த காலத்தில், அப்படியென்ன அந்த நாடகத்தில் இருக்கிறது என்று மாறுவேடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் ரசித்தாராம் கிட்டப்பா. பாகவதருக்கு முன்பு தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவித்தவர் அல்லவா?

கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தராம்பாள். பாகவதர் மீது கிட்டப்பா எந்தளவுக்கு கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சம்பவமே சாட்சி. அதே பவளக்கொடி நாடகத்தை கணவருக்கு தெரியாமல் பார்த்து ரசித்தார்  கே.பி.சுந்தராம்பாள். இதில் கோபமுற்ற கிட்டப்பா, மனைவி என்றும் பாராமல் அவரை  சுடுசொற்களால் ஏச, வருத்தத்தோடு கிட்டப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுந்தராம்பாள். ‘என்னை நடத்தை கெட்டவள் என்று நீங்கள் ஏசியிருக்கிறீர்கள். உங்களுக்கு நரகம்தான் மிஞ்சும்’ என்று அவர் கிட்டத் தட்ட சாபமே கொடுத்திருக்கிறார் அந்த கடிதத்தில். (ஆதாரம்- கே.பி.சுந்தராம்பாள் கடிதங்கள்).

சிறுவயதிலேயே கிட்டப்பா இறந்தாலும், வாழ்நாள் முழுக்க வெள்ளைச் சேலை கட்டி இறந்து போனார் சுந்தராம்பாள். இத்தனைக்கும் இவர் கிட்டப்பாவின் தாலி கட்டாத மனைவி.
பாகவதரின் சிவப்பழகை ஒரு கருப்பழகு வந்து காலி பண்ணிய அதிசயமும் இங்கே நடந்தது. பாகவதர் சிவப்பு, நளினம் என்றால் அவரை காலி பண்ண வந்த பி.யூ.சின்னப்பா கருப்பு, முரடு! குட்டையாக இருந்தாலும், சற்றே தெனாவட்டானவரும் கூட! ‘இவன் ஆம்பிளைடா’ என்கிற பாடி லாங்குவேஜ் அவருக்கு. எந்நேரமும் பீடி வலிக்கும் பழக்கமும் இருந்ததாம். அஞ்சலிதேவி எழுதிய ‘எனது சினிமா காதலர்கள்’ புத்தகத்தில் இவரது பீடி நாற்றம் பற்றி வர்ணித்திருக்கிறார் அவர். அருகில் வந்தாலே அவர் மீது பீடி நாற்றம் அடிக்கும் என்று அஞ்சலிதேவியே குறிப்பிட்டிருந்தாலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அளவில்லாதது.

பாகவதரின் ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகள் ஓடியது என்றால் இவரது உத்தமபுத்திரன் படமும் மூன்று தீபாவளிகளை பார்த்தது. அப்படத்தில் இவருக்கு டபுள் ரோல். இவரது படங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. சொந்த ஊரான புதுக்கோட்டையில் இவர் சொத்துக் களாக வாங்கி குவித்தாராம். இனி புதுக்கோட்டையில் இவருக்கு நிலம் விற்கக் கூடாது என்று அரசே உத்தரவு போடுகிற அளவுக்கு வாங்கி குவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் வந்த காலம் வசன காலம்.

பார்ப்பதற்கு பாகவதர் போல அழகாக இருப்பதால் மட்டுமல்ல, தோற்றத்திலும் அவரைப்போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  சின்னப்பாவை போலவே அடிப்படையில் சண்டைப்பயிற்சிகள் அத்தனையும் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி. பாகவதரை மறந்த ரசிகர்கள், சின்னப்பாவை போலவே வீரமான எம்.ஜி.ஆரை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவர் நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்த படத்தை ஐந்து மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். மலைக்கள்ளன், மதுரை வீரன் என்று மன்னர் கால படங்களில் எம்.ஜி.ஆரின் அழகும், அவரது வாள்வீச்சும், திரண்ட தோள்களும், தித்திக்கும் சிரிப்பும் ரசிகர்களை கொள்ளை கொண்டது. அப்போதுதான் அதுவரை அரச சபையை முன்னிறுத்தி வந்த படங்களில் இருந்து மாறுபட்டு வந்தது பராசக்தி. தமிழ்சினிமாவை புரட்டிப் போட்ட முதல் சமூகப்படம்.

ஒருமுறை சிவாஜி, இனி வாள் சண்டைக்கு வேலையிருக்காது. எம்ஜிஆர் என்ன செய்வாரோ என்று பேசியதாகவும் கூறுகிறார்கள் பழங்கால நிருபர்கள். எம்.ஜி.ஆர் சும்மாயிருப்பாரா? திருடாதே என்கிற முதல் சமூகப்படம் எம்.ஜி.ஆரையும் வாரி அணைத் துக் கொள்ள இருவரும் சமமாக டிராவல் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர் காங்கிரசில் சேருகிறார் சிவாஜி. அதற்கப்புறம் இவர்களின் படங்களை கட்சி முத்திரையோடு பார்க்க தயாராகிறார்கள் ரசிகர்கள். எம்.ஜி.ஆரை தி.மு.க தொண்டர்களும், சிவாஜியை காங்சிரஸ் தொண்டர்களும் ஆராதனை செய்ய, அவர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் இருவரது  கட்சிக் கொடிகளும் பட்டொளி வீசி பறக்க ஆரம்பிக்கின்றன.

நடுவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் இருவரும் சேர்ந்தே ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அதுதான் கூண்டுக்கிளி. இப்பவும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. காரணம், இந்த படத்தை எங்கும் திரையிட வேண்டாம் என்று    சேர்ந்தே முடிவெடுத்தார்களாம் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். ஏன்? அதுதான் பயங்கரம். இந்த படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. வெறிபிடித்த சிவாஜி ரசிகர் ஒருவரை எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் குத்தி கொலையே செய்துவிட்டார். அப்போது எடுத்த முடிவுதான் இது.  சிவாஜிக்கு பார்த்த பெண்ணை, அவர்தானென்று தெரியாமல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொள்வார். அவள் நினைவிலேயே சுற்றி திரியும் சிவாஜி பல காலம் கழித்து எம்ஜிஆர் வீட்டுக்கு வரும்போது அவளை பார்த்துவிடுவார். அவள் எம்ஜிஆரின் மனைவி என்றே தெரியாமல் கையை பிடித்து இழுக்க, அது போதாதா ரசிகர்களுக்கு? படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அடிதடி. ஆனால் ஒன்று. எம்ஜிஆருக்கும்  சிவாஜிக்குமான தனிப்பட்ட செல்வாக்கை உலகத்திற்கு அறிவித்த படம் கூண்டுக்கிளிதான்.

இருவரது ரசிகர்களும் வெட்டு குத்து என்று வெறிபிடித்து திரிந்தாலும், எம்ஜிஆரும் சிவாஜியும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிவாஜி நடித்த சாந்தி என்ற படத்தின் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த தணிக்கை குழு, அப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தரவில்லையாம். இது குறித்து அப்போதைய முதல்வர் காமராஜரிடமும், தணிக்கை குழுவிடமும் சாந்தியை வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டது யார் என்று நினைக்கிறீர்கள்? சிவாஜிக்கு தொழில் போட்டியாளராக இருந்த எம்.ஜிஆர்தான். அப்படியிருந்தது அவர்களின் சினிமாவை தாண்டிய நட்பு.

இவர்களின் சினிமா சகாப்தம் மெல்ல மெல்ல சரியும் நேரத்தில் உள்ளே வந்தவர்கள்தான் கமலும் ரஜினியும். எம்.ஜி.ஆர்- சிவாஜி போல அரசியல் பின்புலத்தை கொண்டிருக்கவில்லை இவர்கள். ரஜினியை போலவே ஒருத்தர் வந்துருக்கார். நடிப்பும் சூட்டிகை என்று பாராட்டப்பட்ட விஜயகாந்த், கடைசிவரைக்கும் போராடியது ரஜினியின் இடத்தை பிடிக்கதான். நடிக்கிற எல்லா படங்களும் ஹிட். கமல் மாதிரியே இருக்கார்ப்பா... என்று கொண்டாடப்பட்ட மைக் மோகன் பிடிக்க நினைத்தது கமலின் இடத்தை. ஆனால் காலம் ஒருவருக்கு செய்த நாற்காலியை இன்னொருவருக்கு கொடுப்பதில்லை.

ஆனாலும் ரஜினியும் கமலும் எப்படி? கமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லனாக உள்ளே நுழைந்தவர் ரஜினி. பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க கமலை தேடிப் போகிறார் பாரதிராஜா. அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பாரதிராஜாவை தேடி வருகிறார் ரஜினி. ‘அப்பல்லாம் ரஜினி எங்க தங்குவாருன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் ஒரு ரூம் கொடுத்திருந்தாங்க’ என்கிறார் கமல். ‘நானும் ரஜினியும் நினைத்தாலே இனிக்கும் ஷுட்டிங் நேரத்தில் ஒருவர் முதுகில் மற்றவர் சாய்ந்து கொண்டு உறங்குவோம்’ என்று கமல் சொல்கிற போது, இருவருக்குமான நட்பு எந்தளவுக்கு பரிசுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்களையும் தொழில் போட்டி போட்டு தாக்கியதை எப்படி இல்லையென்று மறைக்க முடியும்?

நாம சேர்ந்து நடிச்சா ஒரு 100 ரூபாய் நோட்டை ரெண்டா கிழிச்சு கொடுப்பாங்க. அதே தனித்தனியா நடிச்சா, அந்த நோட்டு ரெண்டு பேருக்குமே முழுசா கிடைக்குமே என்று ரஜினிக்கு வியாபார வித்தைசொல்லிக் கொடுத்தார் கமல். காலத்தை தாண்டி சிந்திக்கிற கலைஞனாச்சே ? அவர் நினைத்ததுதான் நடந்தது. அதற்கப்புறம் இருவரும் தனித்தனியாக நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இருவரும் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டது வியாபாரிகள்தான்.

ஒரு படத்தில் ரஜினியை போலவே தோற்றம் கொண்ட நளினிகாந்த் என்பவரை கமல் நையப் புடைப்பதைப் போல காட்சிகள் வைக்கப்பட்டன. இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார். இவர் படங்களிலும் கமல் சீண்டப்பட்டார். ஒரு கால கட்டத்தில் கமல் பாணியில் எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்கள். அந்த நேரத்தில்தான் தற்போது அமரர் ஆகிவிட்ட அனந்துவின் அட்வைஸ் கை கொடுத் தது ரஜினிக்கு. கமல் பாணியில் ரஜினி நடித்தாலோ, ரஜினி பாணியில் கமல் நடித்தாலோ வெகு விரைவில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இருவரும் தனித்தனி பாதையை தீர்மானித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அவர் அறிவுறுத்த ரஜினியின் பாணி அதற்கப்புறம் முற்றிலும் வேறானது.

எழுபது எண்பதுகளில் வெளிவந்த அமிதாப்பச்சன் படங்களின் ரீமேக்குகள் ரஜினிக்கு கைகொடுத்தன. கதை விஷயத்தில் ரஜினி உள்ளே வருவதேயில்லை. அண்ணாமலை ஹிட்டுக்கு பிறகுதான் அவர் கதைக்குள் நுழைத்து கருத்து சொல்ல ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். கமல் அப்படியல்ல. படத்தில் எறும்பு ஊர்ந்து போனாலும் அது கமலுக்கு முன்பே தெரிந்தாக வேண்டும். இது இருவருக்குமான வித்தியாசம் என்றாலும், கமலின் படங்களை ரஜினி உன்னிப்பாக கவனிப்பதும், ரஜினியின் படங்களை கமல் உன்னிப்பாக கவனிப்பதும் இன்றளவும் நடந்து வருகிறது.

ஒருமுறை ஒரு மிக்சிங் தியேட்டருக்கு வந்தாராம் கமல். அங்கு ரஜினி நடித்த வேறொரு படத்தின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாம். அதை நின்று கவனித்த கமல், ‘முன் பக்கம் இன் பண்ணியிருக்கார். பின் பக்கம் ஷர்ட்டை வெளியில் விட்டிருக்கார். இந்த படம் ஹிட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தாராம். 

ரஜினி கமல் காலத்தில் அவர்களுக்கு இருந்த சவால்களை விட பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது அஜீத்துக்கும் விஜய்க்கும்.

வேடிக்கை என்னவென்றால் பந்தயத்தில் இப்போதும் பலமான குதிரையாக இருக்கிறார்கள் ரஜினியும் கமலும். சைடில் ஓடி வரும் குட்டி குதிரைகளும் அவ்வப்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் அதையும் சமாளிக்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு. விஜய்க்கு அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்கிற படகு எல்லா மழைக்காலங்களிலும் கை கொடுக்கிறது. ஆனால் அஜீத்திற்கு அப்படியல்ல. படகில்லாத நேரத்தில் நீச்சல். கை ஓயும் நேரத்தில் கர்ணம் என்று சுயமான ஓட்டம்தான். இவர்கள் இருவரின் கவனமுமே ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி மீதுதான். அதற்கான வித்தையை அவரிடமே கேட்டுத் தெளிகிற அளவுக்கு இருக்கிறார்கள் இவர்கள்.

இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன? என்று அஜீத் விஜய்யை நோக்கி சவால் விட்டதும், ஒரு படத்தில் அஜீத்தின் தொப்பையை விஜய் கிண்டலடித்ததும் இறந்த காலமாகிவிட்டது. காலம் தந்த பக்குவமா, அல்லது திடீர் போட்டியாளர்களின் சலசலப்பா, தெரியவில்லை. இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தோடு செலவிடுகிறார்கள். ஆனால் இவர்களின் ரசிகர்கள்தான் இப்போதும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

ரஜினியின் இடத்திற்காக அஜீத்தும் விஜய்யும் போராடிக் கொண்டிருக்க, இவர்களின் இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு பின் வந்த நடிகர்கள். சூர்யாவாகட்டும், விக்ரமாகட்டும், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்று ஒரு கூட்டமே அஜீத் விஜய்யின் மார்க்கெட்டை தாண்டிவிடுகிற வேகத்தில் ஓட நினைத்தாலும், இந்த பந்தயத்திலிருந்து அஜீத்தும் விஜய்யும் விலகினாலொழிய அது நடக்காது போலிருக்கிறது. ஏனென்றால் ஹீரோ என்பது வேறு. ஸ்டார் என்பது வேறு.

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்கள் மட்டும்தான் ஸ்டார்கள்! துரத்துகிற மீதி அத்தனை பேரும் இந்த நேரம் வரைக்கும் ஹீரோக்கள் மட்டுமே!

சரவணன் சம்பளம் நான்கு கோடி..?



எங்கேயும் எப்போதும், இவன்வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணனை நோக்கி நிறையப் படநிறுவனங்கள் வருகின்றனவாம்.


அவர்களில் முந்திக்கொண்டு வந்திருப்பது ஏஆர்.முருகதாஸ் என்கிறார்கள். அவரடம் உதவிஇயக்குநராக வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் விட எனக்கே முன்னுரிமை கொடுத்து எங்கள் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.


அவர் நிறுவனத்துக்குப் படமெடுத்தால் அதிகச் சம்பளம் கேட்கமுடியாதே என்று யோசித்த சரவணன், பதில் சொல்லாமல் நாட்களைக் கடத்தியிருக்கிறார்.


இதுதான் காரணம் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட முருகதாஸ், அடுத்த படத்தை எங்களுக்கு எடுத்தால் உனக்குச் சம்பளம் நான்குகோடி என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத சரவணன், அடுத்தபடம் முருகதாஸ் நிறுவனத்துக்குத்தான் என்று ஒப்புக்கொண்டாராம்.


தன்னிடம் பணியாற்றியவரை இவ்வளவு சம்பளம் கொடுத்து ஒப்புக்கொள்ள வைக்க முருகதாஸ் நினைத்ததற்கும் பின்னணி இருக்கிறதென்று சொல்கிறார்கள்.


அவர் இயக்குநரையும் அவருடைய கதைக்கேற்ப சந்தைமதிப்புள்ள ஒரு கதாநாயகனையும் ஒப்பந்தம் செய்துவிடுவார். அதன்பின் அந்தப்படத்தை வேறு ஏதாவது ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கப்போவதாக அறிவிப்பார். உண்மையில் அந்தப்படத்தைத் தயாரிப்பது அவர் கூட்டுச்சேருகிற நிறுவனமாகத்தான் இருக்கும்.


ஆனால் இவருடைய நிறுவனத்தின் பெயரும் படத்தில் இருக்கும். இவருக்கு அதனால் என்ன கிடைக்கும்? அந்தப்படக்குழுவை ஒப்பந்தம் செய்து கொடுத்ததற்காக அவர் சில கோடிகளைப் பெற்றுக்கொள்வார். சாதாரணமாக தயாரிப்புமேலாளர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.


அந்தப்படத்தில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான சம்பளம் கூடக் கிடைக்காமல் போகும். ஆனால் அதே வேலையை முருகதாஸ், உட்கார்ந்தி இடத்திலிருந்து செய்துவிட்டு சில கோடிகளைப் பெற்றுக்கொள்கிறார் என்கிறார்கள்.


அதுவும் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பது உங்களுக்குக் கிடைத்திருக்கிற அரியவாய்ப்பு என்றே சொல்வாராம் முருகதாஸ். பணம் போடுகிறவர்களும் அதையே பெருமையாக எண்ணிக்கொண்டு அவர் சொல்கிற படியெல்லாம் செய்வார்களாம். முருகதாஸ் எனும் பெயருக்குக் கிடைக்கும் இலாபம் இது.

இரட்டைவேடங்களில் சூர்யா..!



              லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.

              அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடங்கள் என்பது மட்டும் உறுதியாம். அந்தப்படத்துக்குத் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பெயர், கல்யாணராமன். இரட்டைவேடம் என்று சொல்லிவிட்டு கல்யாணராமன் என்று பெயரும் வைத்தால் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில்கல்யாணராமன் ஆகிய படங்களின் நினைவு வரும். அதுபோன்ற ஒரு படத்தையே மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? இந்தப்படமும் நகைச்சுவை பெருமளவில் கலந்த சண்டைப்படம் தானாம்.

               பிதாமகன் படத்துக்குப் பிறகு சூர்யா, நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அந்தப்பாணியில் ஒரு கதையைத் தயார் செய்தால், அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சூர்யாவை வேறுபடுத்திக்காட்டலாம் என்கிற வெங்கட்பிரபுவின் எண்ணம் செயலாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பலருடைய எதிர்ப்பை¬யும் மீறி வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் படம் முடிவதற்கு முன்பே இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

ஹாட்ரிக் அடிக்கும் நயன்தாரா..?



தெலுங்கில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறது வெங்கடேஷ் நயன்தாரா ஜோடி.

2014ம் ஆண்டில் தமிழில் 5 படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.

இதில் தெலுங்கில் ‘ராதா’ என்ற படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகிறது இந்தப்படம்.

ஏற்கனவே இவர்கள் இரண்டுபேரும் ‘லட்சுமி’ ‘துளசி’ என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சீயானின் ‘த்ரிஷ்யம்’ மோகம்..!



‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் விக்ரம்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.

படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்துள்ள விக்ரம் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

தற்போது இதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனரும், தயாரிப்பளாருமான சுரேஷ் பாலாஜி கைப்பற்றியுள்ளாராம்.

‘தல’யின் அடுத்த படம் யாருக்கு..?




கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன.

சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்.

ஆனால் இதற்கெல்லாம் ஒரு முடிவும் இன்னும் வெளியாகவில்லை, புத்தாண்டை கொண்டாட அவுஸ்திரேலியா பறந்த அஜித் திரும்பி வந்த பிறகே இதற்கான பதில்கள் கிடைக்குமாம்.

100வது நாளில் ‘ராஜா ராணி’...!



100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது அட்லியின் ராஜா ராணி.

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராஜா ராணி.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’.

இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விடயமே.‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ளது.

வீரம் படம் முரட்டுக்காளை ரீமேக்..?



‘வீரம்’ படம் முரட்டுக்காளை ரீமேக் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துள்ளன.

அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம்.

விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியது.


இந்நிலையில் நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குனர் சிவாவிடம் கேட்டபோது, இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல.

அண்ணன், தம்பிகளின் கதை என்பதால் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது,மலையாளப் படமான வெள்ளியேட்டன் படத்தின் தழுவல் என்று கூறப்படுவதும் தவறான தகவல் என்றும் வீரம் படம் நேரடி தமிழ் படம் எனவும் கூறியுள்ளார்.

Thursday 2 January 2014

தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்!!




இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த நாயகன் - நாயகி காம்பினேஷன் ஹிட்டானால் அவர்களை நம் ரசிகர்கள் உள்ளங்கைகளால் தாங்குவார்கள். கமல்- SRIதேவி, ரஜினி - SRIபிரியா, பிரபு - குஷ்பு... என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஹிட்டான ஜோடிகள்.

ஆர்யா – நயன்தாரா

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அறிமுகமான இந்த ஜோடி அப்போதே பேசப்பட்டது. மீண்டும் ‘ராஜா ராணி’யில் ஜோடி சேர்ந்த இவர்களை ‘மேட் ஃபார் ஈச் அதர், ஜோடியாக ஜான் – ரெஜினா கதாபாத்திரங்களில் ‘ராஜா – ராணி’ படத்தில் வார்த்தெடுத்தார் இளம் இயக்குநர் அட்லி. படத்தில் ஜெய்யுடனும் நயன்தாரா நடித்திருந்தாலும், ஆர்யா – நயன்தாரா கெமிஸ்ட்ரியே பெரிதும் பேசப்பட்டது. மேலும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஆர்யா – நயன்தாரா திருமணம் என்ற உத்தியை பயன்படுத்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. ‘ராஜா – ராணி’ 30 கோடி வசூல் செய்தது மட்டுமல்ல, இந்தப் படத்தின் ஆடியோ, காலர் டுயூன் சந்தை. பண்பலையில் பாடல்கள் வரிசையில் முன்னணிஎன எல்லாவற்றிலும் கலக்கியது. ஆர்யாவுடன் இனி இணைந்து நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா சொல்லும் அளவுக்கு இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

விஷால் – லட்சுமிமேனன்

தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் தடுமாறிவந்த விஷாலுக்கு, இந்த ஆண்டு கைகொடுத்த படம் ‘பாண்டிய நாடு’. இதில் ஒரு சாமான்ய மதுரை இளைஞனாக நடித்த விஷாலுக்கு ஜோடியாக, ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் லட்சுமிமேனன். இந்தப் படத்தில் இவர்களது காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் குவிந்தார்கள்.

சூர்யா – அனுஷ்கா
60 கோடிக்கு குறையாத வசூல் குவித்த சிங்கம் 2-ஆம் பாகத்தில், சூர்யாவின் காதலியாக, முதல்பாகத்தில் நடித்த அனுஷ்கா, 2 ஆம் பாகத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். இளமைத்துள்ளலுக்கு ஹன்சிகா இன்னொரு கதாநாயகியாக இதில் சேர்க்கப்பட்டாலும், அனுஷ்கா – சூர்யா இடையேயான காதல் காட்சிகளுக்குதான் இதில் அதிக வரவேற்பு.

நஸ்ரியா – நிவின்

அல்போன்ஸ் புத்திரனின் இசை ஆல்பத்தில் நிவினுடன் ஜோடி சேர்ந்து யூடியூப் ரசிகர்களிடம் எக்குத்தப்பாக ஏற்கனவே பிரபலமாகியிருந்தது இந்த ஜோடி. மீண்டும் அதே அல்போன்ஸ் இயக்கத்தில் ‘நேரம்’ படம் வழியாக தமிழுக்கு அறிமுகமான இந்த ஜோடியின் இயல்பான, கவித்துவமான உடல்மொழியால் இவர்களை தங்களுக்கான ‘கனவு ஜோடியாக’ ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வெறும் 2 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், கதை சொன்ன விதத்துக்காக மட்டுமல்லாமல், நஸ்ரியா – நிவின் ஜோடிக்காவும் 9 கோடி வசூல் செய்து கலக்கியது.

ஜீவா - த்ரிஷா

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெசி கதாபாத்திரத்தில் தோன்றிய த்ரிஷாவுக்கு மீண்டும் அதைவிட சிறப்பான பாராட்டு கிடைக்கச் செய்த படம் ‘என்றென்றும் புன்னகை’. இந்தப் படத்தில் இளம் விளம்பர காப்பி ரைட்டர் ப்ரியாவாக – ஜீவாவை மனதில் வரித்துக்கொண்டு அவர் காதலைச் சொல்லமாட்டாரா என்று ஏங்கும் கதாபாத்திரத்தில் காட்டிய இயல்பும் நெருக்கமும் ரசிகர்களுக்கு ஜீவா - த்ரிஷா ஜோடியை மிகவும் பிடிக்க காரணமானது.

விஜய் – அமலாபால்

வியாபார ரீதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து வந்த அமலாபால், விஜயுடன் ஜோடி சேர்ந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் விஜய் – அமலா இடையிலான காட்சிகள் ரசனையாக அமைந்து விட்டதும், க்ளைமாக்ஸில் அமலா பால் திடீர் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுத்ததும் ரசிகர்களை கவர்ந்ததால் இந்த ஜோடி பேசப்பட்டது.

இந்த ஆண்டில் அஜீத்தின் ஆரம்பம் வெளியான போதிலும், அவர் இப்படத்தில் காதல்காட்சிகளில் அவ்வளவாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 1 January 2014

கமலுடன் மீண்டும் இணைகிறார் மீனா..?



விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

மலையாளத்தில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அப்படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதுவரை இந்த தொகைக்கு எந்த மலையாள படமும் விலைபோனதில்லையாம். அதனால் கமல் மாதிரி முன்னணி நடிகர்கள் நடித்தால் படத்தை பிரமாண்டமாக்கி பெரிய தொகையை எடுத்து விடலாம் என்று அவரை அணுகியுள்ளார்களாம். ஆனால் கமல்தரப்பு இன்னும் உரிய பதிலை சொல்லவில்லையாம். விஸ்வரூபம்-2 வந்த பிறகுதான் எதையுமே சொல்ல முடியும் என்று கூறி விட்டாராம்.

இந்தநிலையில், இந்த படம் கமலிடம் சென்று விட்ட தகவலை அறிந்த மீனா, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த தான் தமிழில், கமலுக்கும் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தவர் என்பதால், தான் அவருடன் நடிக்க தகுதி உள்ள நடிகைதான் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம மீனா.

ஒருவேளை, கமல் மறுத்தால் பசுபதியை வைத்து படத்த இயக்குவோம் என்று மீனாவிடம் சொன்னபோது, அதனாலென்ன அவருடனும் குசேலன் படத்தில் நடித்திருக்கிறேனே. தமிழில் எந்தநடிகரை வைத்து இயக்கினாலும் ஹீரோயினி வாய்ப்பு எனக்குத்தான் தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு வைத்திருக்கிறாராம் மீனா.

அனாமிகா நயன்தாரா கர்ப்பிணி இல்லையாம்..!



இந்தி சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான் போன்ற நடிகர்கள் நடிக்கிற படங்கள்தான் 100 கோடியை மிஞ்சிய வசூலை குவிக்கும். ஆனால், முதன்முதலாக வித்யாபாலனின் கஹானி படம் அந்த ரெக்கார்டை உடைத்தெறிந்துள்ளது. இதனால் இப்போது வித்யாபாலனின் ஹீரோயினி இமேஜூம் கான் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறதாம்.

அப்படி வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த கஹானி படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான அனாமிகாவில் நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். வித்யாபாலனுக்கு இணையான நடிப்பை என்னாலும் தர முடியும் என்று தில்லாக சொல்லி நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த படத்தின் கதையின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் அப்படத்தை இயக்கும் சேகர்முல்லா.அதாவது, புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரை தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம். இதனால் கர்ப்பிணி என்பதுதான் அந்த கதையின் அடிநாதமாக விளங்கியது. அது இல்லாமல் படமாக்கினால் எப்படி அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிககும் என்று சிலர் அவரை கேட்கிறார்களாம்.

அதற்கு, இந்தியில் செய்யாத ஒரு விசயத்தை ரீமேக்கில் செய்ய நினைத்தபோது வந்த யோசனைதான் இது என்று சொன்ன சேகர்முல்லா, இந்த படம் நயன்தாராவின் பர்பாமென்சில் இன்னும் வேறுமாதிரியாக வந்துள்ளது. கஹானி இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் என்கிறாராம்.

ஒரு கிராமத்துக்கு உணவு பரிமாறிய அஜித்!



விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படததில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார்.கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

படத்தில் அஜித் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். மேலும் ஒரு காட்சியில் 2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.அந்தக் காட்சி முடிந்ததும் "பிஎம்டபிள்யூ ஓட்டுனவனை மாட்டு வண்டி ஓட்ட வச்சுடீங்களேப்பா" என்று கிண்டலாக அஜித் சொன்னது யூனிட்டில் சிரிப்பை வரவழைத்தது என்று சிறுத்தை சிவா கூறினார்.

ஷங்கர் இயக்கத்தில் மம்முட்டி?



பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 'ஐ' படம் முடித்த பிறகு, சரித்திரக் கதையைக் கையில் எடுக்கப் போகிறாராம்.

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் 'ஐ'.

விக்ரமின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத படமாக 'ஐ' இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைத்தபடி ஸ்லிம்மாக இருக்கும் விக்ரம் ஸ்டில்கள் படத்தின் பல்ஸை அதிகரிக்கின்றன.

'ஐ' படம் முடிந்த பிறகு, ரஜினியை வைத்து ஷங்கர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இப்போது,  சரித்திரக்கதையை எடுக்க ஷங்கர் விரும்புகிறாராம்.

அதுவும் மகாபாரதக் கர்ணன் கதையை படமாக்கப் போகிறாராம். கர்ணன் கேரக்டருக்கு மம்முட்டி தான் சரியாக இருப்பார் என்று நினைத்த ஷங்கர், மம்முட்டியிடம் ஓ.கே வாங்கிவிடடராம்.

ஷங்கர் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் கர்ணன் படம் வெளிவரும் என்றால் அதில் பிரம்மாண்டத்துக்குப் பஞ்சம் இருக்காது.

2014-ம் ஆண்டு - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!!



ஜனவரி முதல் தேதி புத்தாண்டு. இந்த புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு என்றாலும், அது உலகம் முழுக்க அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படும் ஒரு புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர் தங்களது புத்தாண்டு லட்சியங்கள் என்னென்ன என்பதையும், 2013ம் ஆண்டில் அவர்கள் ரசித்த படங்கள், பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்பதையும் மனம் திறந்து கூறியுள்ளனர். இதோ...

டாப்சி

இந்த வருஷம், என் குடும்பத்தினர் மற்றும் என் நெருங்கிய நண்பர்களை வெளியில் அழைத்து போய் நிறைய நேரம் அவர்களோடு நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். இந்த வருடத்தில் எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ ரன்பீர், ஹீரோயின் தீபிகா படுகோனே. இவர்களுக்கு இந்த வருஷம் நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்கன்னு சொல்லலாம் என்கிறார்.

சிம்ரன்

இந்த வருஷம் சந்தோஷமும், அமைதியும் நிறைய எனக்கும், என்னை சுற்றி இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த வருஷம் நிறைய தமிழ் படங்கள் வெளிவந்தன. பெரும்பாலான புதுமுகங்கள் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க, அவங்க எல்லோர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்ல ஆசைப்படுறேன் என்றார்.

த்ரிஷா

எந்த வருஷமும், நான் எந்த புதுத்திட்டமும் போடுவதில்லை. ஏனென்றால் என்னால் எதையும் நிறைவேற்ற முடியாது. அதனால் எப்போதும் போல என் வேலையை பார்த்துட்டு போயிடுறேன். எப்போதும் போல, இந்த வருஷம் கல்யாணம் பண்ணுவிங்களான்னு கேட்குகிறீங்க, நடக்கலாம், நடக்காம போகலாம். எல்லாத்துக்கும் நேரம் நல்லா அமையனும், பார்க்கலாம் என்கிறார்.

ஹன்சிகா
2013 நாலு படங்கள் எனக்கு கிடைத்தது. 2014, தமிழ் 4, தெலுங்கு 4 என்று பயங்கர பிஸியா இருக்கேன். போனவருஷத்தை விட 2014 நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு ஆசைப்படுறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் நன்றி. இந்த வருஷம் வந்த படங்களில் நடித்த எல்லோருமே அழகா நடிச்சிருந்தாங்க. எல்லாருமே என் குடும்பம் மாதிரி. என்னால் ஒருத்தரை தேர்வு செய்ய முடியல. எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.

காயத்திரி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)


புது வருஷத்தில் எந்த பிளானும் பண்றதில்லை, எடுப்பதும் இல்லை. ஒருநாள் முடிவு பண்ணினா அதை செய்திடுவேன். மனசுக்குள் ஒரு சின்ன ஆசை என்னனா? நல்ல நல்ல படங்கள், தரமான படங்களா பண்ணனும், தரமான படங்கள் கொடுக்கும் ஹீரோ, இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ, ஹீரோயின் விஜய், காஜல் தான். துப்பாக்கி படத்தில் அவங்க கெமிஸ்ட்ரி அவ்ளோ சூப்பர்.

நந்திதா (அட்டகத்தி)

கிட்டத்தட்ட 7 படங்களில் வித்யாசமான ரோலில் நடிச்சிட்டேன். ஆனா, இன்னும் பெர்பார்ம் பன்ற அளவு நல்ல கேரக்டர்களில், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். முக்கியமா காலையில 6 மணிக்கு எழுந்திருக்க பழகனும். இந்த வருஷம் எனக்கு பிடித்த ஹீரோ கடல் கவுதம் தான். அப்புறம் நம்ம குமுதா என்று தன்னை கூறுகிறார்.

ஜனனி அய்யர்

புது வருஷங்களில் புது திட்டங்கள் போடுறதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறந்ததை செய்யனும், அவ்ளோ தான். 2013-ல் வந்த சிறந்த படம், ஹீரோ, ஹீரோயின்னா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா தான்.

பிரியா ஆனந்த்

புது வருஷங்களில் நிறைய பிளான் பண்ணுவேன். ஆனா, அதை கடைபிடிக்க முடியாது. ஆனா ஒன்னு மட்டும் மாத்திக்கனும். எனக்கு மறதி ரொம்ப அதிகம். பெரிய தப்பான பழக்கம் அது. இந்த வருஷம் அதை குறைக்கனும். இந்த வருஷத்தில் பெஸ்ட் ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் த்ரிஷா(பத்து வருஷம் ஆனாலும் இப்போ வரை தொடர்ந்து ஹிட் கொடுத்திட்டு இருக்காங்க)

சாட்டை மகிமா

2013 என் படங்களில் சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தேன். இதை வரும் வருடங்களில் சரி பண்ண விரும்புகிறேன். இயக்குநர்களின் பிடித்த நடிகையாக வரனும்னு ஆசை. இந்த வருஷம் எனக்கு பிடித்த நடிகர் - சூர்யா, நடிகை - அனுஷ்கா.

ஸ்ரீகாந்த்
2014 தரமான வெற்றிகரமான படங்கள் தரனும் என்பதே என் இலக்கு. நான் தொடங்கி இருக்கும் கோல்டன் பிரைடேஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நல்ல படியாக கொண்டு வர ஆசைப்படுறேன். இந்த வருடம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ கமல் சார். ஹீரோயின் நயன்தாரா.

ஜெய்குகேனி - மெய்யழகி

2013 நான் பண்ண படங்கள் சில பரிட்சார்ந்த முயற்சியாவே இருந்தது. ஆனால் 2014 நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணனும், வெயிட் குறைக்கனும், நல்ல கதைகள் அமைந்து என் பேர் நிலைக்க ஆசைப்படுகிறேன். இந்த வருஷம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ - ஜெய், ஹீரோயின் நஸ்ரியா என் சாய்ஸ்.

லட்சுமி மேனன்

எந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாம சினிமாவுக்கு வந்தவள் நான். அதனால் எதுக்கும் பிளான் பண்ண மாட்டேன். எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வேன். எது வந்தாலும் நல்லதுக்குனு எடுத்துப்பேன்.

எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ - விஷால், ஹீரோயின் - மரியான் பார்வதி.

பிரசாந்த்

2013 நிறைய ரிலாக்ஸ் பண்ணிட்டேன். 2014-ல் விட்ட இடத்தை பிடிக்க போராடப் போகிறேன். நிறைய கடினமா உழைப்பை கொடுக்க தயாராகி கொண்டு இருக்கேன். இந்த வருஷம் வந்த படங்களில் கமல் சாரின் விஸ்வரூபம் படமும், அவரது நடிப்பும் என்னை கவர்ந்தது.

விஜய் வசந்த்

புதுத்திட்டங்கள் எடுக்கிற பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை. இப்போது 2 படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். 2014-ல் இன்னும் தரமான நல்ல படங்களா நடிக்க ஆசைப்படுகிறேன்.

இந்த வருஷம் வந்த படங்களில் அதிகமாக பேசப்பட்டதும், ஹிட் கொடுத்ததும் விஜய் சேதுபதி தான். ஹீரோயின் எனக்கு எந்த சாய்சும் இல்லை என்கிறார்.

இனியா

புது வருஷம் எனக்கு பெருசா எந்த திட்டமும், இல்லை. எப்பவும் பேசப்படுற நல்ல படங்களா பண்ணனும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கு. 2014-ல் பார்க்கலாம். எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்.

பூர்ணா

எனக்கு எப்பவும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. எந்த விஷயம் என்றாலும் நாளை பார்த்துக்கலாம், நாளை பார்த்துக்கலாம்னு தள்ளி போட்டுவிடுவேன், அதை கொஞ்சம் மாத்தனும், சமூக நல விஷயங்களில் கொஞ்சம் பங்கெடுக்க ஆசைப்படுகிறேன். இந்த வருடம் தமிழ் படங்கள் நிறைய பார்க்கல, அதனால என்னால் பெஸ்ட் யாருன்னு சொல்ல முடியல என்கிறார்.

விதார்த்

இந்த வருஷத்தில் நான் தெரிஞ்சிகிட்ட ஒரே விஷயம், நல்ல கதை, நல்லா நடித்தால் மட்டும் போதாது, அந்த படத்தை மக்கள் கிட்ட போய்சேர்க்கும் நல்ல தயாரிப்பு நிர்வாகம் வேண்டும், அந்த மாதிரி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படங்களில் இன்னும் அதிகமாக நடிக்க ஆசை. 2013-ல் வந்த படங்களிலேயே இப்போ வரை என்னை பாதித்த ஒரே கேரக்டர், விடியும் முன் படத்தில் நடித்த அந்த குழந்தை தான்.

சிவகார்த்திகேயன்

2013 எனக்கு சூப்பர் வருஷம். 2014 இன்னும் சூப்பரா இருக்க வேண்டுகிறேன். இந்த இடத்தை தக்க வைக்க ரொம்ப போராட வேண்டியிருக்கு. காமெடி எல்லை தாண்டி, டான்ஸ், ஆக்ஷ்ன் இப்படி கொஞ்சம் கவனம் செலுத்த ஆசை இருக்கு.

இந்த வருஷம் வந்த படங்களில் பலரும் நல்லா நடிச்சிருந்தாங்க. கமல்சாரின் விஸ்வரூபம் பார்த்து மிரண்டு போனேன், அஜித் சாரின் ஸ்டைல், நடிப்பு, விஜய் சாரின் டான்ஸ், சூர்யா சாரின் ஆக்ஷ்ன் இப்படி பலரும் சிறப்பா நடிச்சிருந்தாங்க. நடிகைகள்ன்னா - ஹிஹிஹி....

சுரபி (இவன் வேற மாதிரி)


வரும் வருஷம், பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும், என் பெயரை தமிழ் சினிமாவில் கொஞ்சம் பேச வைக்க ஆசைப்படுறேன். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ - அஜீத், ஹீரோயின் - சமந்தா.

பாவனா

எனக்கு ஒரு கெட்ட பழக்கம், நடந்து போனதை பற்றி யோசித்து ரொம்ப டிஸ்டர்ப் ஆவேன். அது முடிஞ்சிபோச்சுன்னு யோசிக்க மாட்டேன். மிஸ் ஆனது பற்றி அப்புறம் யோசிக்கறத 2014-ல் சுத்தமா நிறுத்த ஆசைப்படுகிறேன். நல்ல தமிழ் படங்களில் அடுத்த வருடம் என்னை பார்க்கலாம். எனக்கு பிடித்த ஹீரோ - ரன்பீர், ஹீரோயின் - தீபிகா.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!

Tuesday 31 December 2013

மவுசு கூடிய ஸ்ரீதிவ்யா - மவுசு குறையாத நயன்தாரா...



 தமிழ் திரையுலகின் நடிகைகளை பொருத்தவரையில், ரசிகர்கள் மனதில் மீண்டும் ராணியாக அமர்ந்தார் 'நயன்தாரா'. எல்லா வருடத்தையும் போலவே இந்த வருடமும் நாயகியை முன்னிலைப்படுத்தி நிறைய படங்கள் வெளிவரவில்லை. 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா மற்றும் 'விடியும் முன்' படத்தில் பூஜா ஆகிய படங்களைத் தவிர நாயகிகளைத் முன்னிலைப்படுத்தி எந்த ஒரு படமும் வரவில்லை.

முன்னணி நாயகிகளான அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளுமளவில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்பது மிகப்பெரிய சோகமே. லட்சுமி மேனன், நஸ்ரியா ஆகிய புதுமுக நடிகைகளும் தங்களது பங்களிப்பை அளித்தார்களே தவிர, அவர்களுக்கும் முன்னணி நாயகிகள் நிலைமை தான்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படத்தில் நாயகியாக நடித்ததின் விளைவு, ஸ்ரீதிவ்யா கால்ஷீட் டைரி 2014ல் ஃபுல்லாகிவிட்டது. 'ஊதா கலரு ரிப்பன்' பல படங்களுக்கான வாசலை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு முன்பு ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'காட்டுமல்லி', 'நகர்ப்புறம்' ஆகிய படங்கள் முடிந்தாலும் இன்னும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் ஹிட், 2014ல் ஜி.வி.பிரகாஷுடன் 'பென்சில்', அதர்வாவிற்கு ஜோடியாக 'ஈட்டி', விஷ்ணுவிற்கு ஜோடியாக 'வீர தீர சூரன்' என ஸ்ரீதிவ்யா பயங்கர பிஸி.

'ராஜா ராணி' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார் நயன்தாரா. ’மெளன ராகம்’ படத்தின் நிழல் தான் என்று அனைவரும் கூறினாலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாயகியாக நடித்தாலும், இவரது மார்கெட் குறையாதது இவரை மேலும் சந்தோஷமாக ஆக்கியது. 'ராஜா ராணி' படம் வெளிவருவதற்கு முந்தைய தினம் ட்விட்டர் தளத்தில் இவரது பெயர் இந்தியளவில் டிரெண்டானது தான் ஹைலைட்.

அஜித்துடன் நடித்த 'ஆரம்பம்' படமும் வசூலை குவிக்க நயன் மவுசு குறையவே இல்லை. 2014ல் பாண்டிராஜ் - சிம்பு படம், ஜெயம் ரவி - ஜெயம் ராஜா படம், 'கஹானி' தமிழ், தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா' என நயனின் பட புக்கிங்களும் ஃபுல் ஸ்டாப் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எதார்த்தமான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் லட்சுமி மேனன், அதே பாணியை தொடர்வாரா அல்லது தனது பாணியை மாற்றிக் கொள்வாரா என்பது போகப் போகத் தெரியும்.

2014ல் நாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிகமான படங்கள் வெளிவருமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் சினிமா 2013 ஒரு பார்வை




 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ம் ஆண்டும் காமெடி படங்களே பெரும் அளவில் வெளியாகின. பெரிய நடிகர்கள் படங்கள் வசூல் ரிதியில் முன்னணியில் இருந்தாலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிறு நடிகர்களின் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.

மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. நலன் குமாரசாமி, நவீன் உள்ளிட்ட புதிய இயக்குநர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

காமெடி நடிகர்கள் பட்டியலில் சந்தானம் இல்லாத சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சூரி, ’எதிர்நீச்சல்’ சதிஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் தங்களது முத்திரையை பதித்தார்கள்.

மொத்தத்தில் புதிய இயக்குநர்கள் கவனம் ஈர்த்தனர். சிறு நடிகர்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்தன. புதிய கதைகளத்தில், புதிய நடிகர்கள் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழ் திரையுலகிற்கு உணர்த்தினார்கள் ரசிகர்கள்.

அவ்வகையில் 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வெளியான முக்கியமான படங்களும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்க்கலாம்.

ஜனவரி : ஆரம்பமே அதிர்ச்சியளித்த 'அலெக்ஸ் பாண்டியன்'

'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'சமர்' ஆகிய படங்கள் ஜனவரியில் வெளியான முக்கியமான படங்கள். பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. ஆனால் நடந்ததோ, 'எப்படி விளம்பரப்படுத்தினாலும் படம் பிடிக்கவில்லை' என்று நிராகரித்தனர் ரசிகர்கள். வருடத் தொடக்கமே கார்த்திக்கு அதிர்ச்சியளித்தது.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெளியீட்டு சமயத்தில் பாக்யராஜ், 'இது எனது 'இன்று போய் நாளை வா' படத்தின் மறுபதிப்பு. ஆகையால் எனக்கு பணம் தர வேண்டும்' என்று கே.பாக்யராஜ் செய்த சர்ச்சையினிடையில் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சந்தானம். சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர் ரசிகர்களுக்கு லட்டை அளித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளினார்கள்.

வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான 'சமர்' போதிய வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்று பெரும் சர்ச்சையில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் மக்களால் கொண்டாடப்படவில்லை.

பிப்ரவரி : விஸ்வரூபமெடுத்த கமல்

'கடல்', 'டேவிட்', 'விஸ்வரூபம்', 'ஆதிபகவன்', 'ஹரிதாஸ்' ஆகிய படங்கள் பிப்ரவரியில் வெளியான முக்கியமான படங்கள்.

படத்தின் புகைப்படம் ஒன்றைக் கூட வெளியிடாமல், 'நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் மூலம் மக்களை திரையரங்கிற்கு இழுத்த படம் 'கடல்'. ஆனால் 'கடல்'க்கு உள்ளே போயிட்டு, மணிரத்னம் அளித்த சுனாமியால் மக்களுக்கு தலைவலியை உண்டாக்கி, நிராகரிக்க வைத்த படம். 'கடல்' மூலம் அதிர்ச்சியளித்தார் மணிரத்னம் என்றால், அவரது உதவி இயக்குநர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' மூலம் பேரதிர்ச்சி கொடுத்தார்.

கடும் சர்ச்சைக்கு இடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது 'விஸ்வரூபம்'. முதலில் தமிழகத்தை தவிர இதர இடங்களில் வெளியானது. வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் கேரளா, பெங்களூர் என வெளியூர்களுக்குச் சென்று 'விஸ்வரூபம்' படத்தினை கண்டு களித்தார்கள். 'எனது ஆழ்வார்பேட்டை வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன். படம் வெளிவராவிட்டால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவேன்' என்று கமல் கூறினார். ரசிகர்களோ அவருக்கு செக் மூலமாக பணத்தை அனுப்பி கமலை தங்களது அன்பால் அடிமையாக்கினார்கள். பின்னர் தமிழகத்திலும் படம் வெளியானது. படம் வெற்றியடைந்தவுடன் பணம் அனுப்பிய இதயங்களுக்கு நன்றியுடன் அவர்களது பணத்தை உரியவர்களுக்கே அனுப்பி வைத்தார் கமல்.

நீண்ட மாதங்கள் தயாரிப்பிற்கு பிறகு வெளியான அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படம், படம் பார்க்க வந்தவர்களை 'பகவானே.. படமா இது' என்று கேட்க வைத்தது. அமீர் இயக்கத்தில் வெளியாகி முற்றிலும் நிராகரிக்க படமாக 'ஆதிபகவன்' அமைந்தது. இப்படத்திற்காக ஜெயம் ரவியின் காத்திருப்பு வீணானது.

சினிமா விமர்சகர்கள் கொண்டாடிய படம் 'ஹரிதாஸ்'. குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினேகா இப்படத்தில் நடித்தார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்கள். வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும், அனைவரது பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களுள் ஒன்றாக இடம் பிடித்தது.

மார்ச் : 'பரதேசி' மூலம் திரும்பிய பாலா

'பரதேசி', 'வத்திக்குச்சி', 'சென்னையில் ஒரு நாள்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் மார்ச்சில் வெளியான முக்கியமான படங்கள். 'அவன் இவன்' படத்தின் மூலம் சற்றே சறுக்கிய பாலா, மீண்டும் தனது எதார்த்த உலகிற்கு திரும்பிய படம் 'பரதேசி'. 'ரெட் டீ' என்ற நாவலை மையப்படுத்தி எடுத்தாலும், அதில் அதர்வா, வேதிகா போன்ற நடிகர்களை கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து 'பாலா இஸ் பேக்' என்று பேச வைத்தார். அதர்வாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது ‘பரதேசி’.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியானதால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டு, குச்சி தீப்பிடிக்காமல் தீப்பெட்டிக்குள் அடங்கிய படம் 'வத்திக்குச்சி'.

'டிராபிக்' என்ற வரவேற்பை பெற்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'. விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரியளவிற்கு படம் சோபிக்கவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. பாண்டிராஜின் காமெடி பாணி இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம்.

ஏப்ரல் : பவர் கட்டானலும் இருப்பேன் என அடம்பிடித்த ராஜகுமாரன்


'சேட்டை', 'கெளரவம்', 'திருமதி தமிழ்', 'உதயம் NH4' ஆகிய படங்கள் ஏப்ரலில் வெளியான முக்கியமான படங்கள். 'டெல்லி பெல்லி' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா என முக்கியமான நடிகர்கள் நடிப்பில் வெளியானலும், இவங்களுக்கு எல்லாம் சேட்டை ஒவராயிடுச்சு என்று மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள். ராதாமோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கெளரவம்', படக்குழுவுக்கு கௌரவத்தை தரவில்லை.

'திருமதி தமிழ்' படத்தைப் பார்த்து விமர்சகர்கள், மக்கள் என அனைவருமே சிரித்தார்கள்; படம் பார்த்து அல்ல, படத்திற்காக ராஜகுமாரன் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து. ராஜகுமாரனின் மேக்கப்பும், அவர் கொடுத்த ’போஸ்’களும், முக்கியமாக அவரே அவருக்கு கொடுத்துக் கொண்ட 'சோலார் ஸ்டார்'பட்டமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் போஸ்டரில் மட்டும் நூறு நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது.

சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கலாம் என்று உணரவைத்த படம் 'உதயம் NH4'. விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்தவித பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை.

மே : சூது கவ்வும் நேரம்

'எதிர்நீச்சல்', 'மூன்று பேர் மூன்று காதல்', 'சூது கவ்வும்', 'நாகராஜ சோழன்', 'நேரம்', 'குட்டிப்புலி' ஆகிய படங்கள் மே மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். பாடல்கள் மூலமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிர் நீச்சல்' மக்களிடையே வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது மட்டுமன்றி, சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக்கியது. தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார்.

அர்ஜுன், விமல், சேரன் நடிப்பில் முன்னணி இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படம் வரவேற்பைப் பெறவில்லை.

'சூது கவ்வும்' என்ற படத்தின் மூலம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் முக்கியமான இயக்குநர் ஆனார் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி களத்தில், தமிழக அரசியலை சாடி எடுக்கப்பட்ட படம். மணிவண்ணன் - சத்யராஜ் இணைப்பில் வெளியான 'நாகராஜ சோழன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, படம் பார்த்தவர்களால் 'ம்ஹூம்.. அமைதிப் படை மாதிரி இல்லை..' என நிராகரிப்பட்டது.

'பிஸ்தா' என்ற YOUTUBEல் வெளியான பாடல் மூலம் படம் எப்போபா ரிலீஸ் என்று கேட்க வைத்த படம் 'நேரம்'. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

சசிகுமார் நடிப்பில் வெளியான 'குட்டிப்புலி', விமர்சகர்கள் மத்தியில் எடுத்த கதையே தான் எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு நிலவினாலும், வசூலில் பாய்ச்சல் காட்டியது 'குட்டிப்புலி'

ஜூன் : திக்குமுக்காடிய தில்லு முல்லுவும்...  அம்பேலான அன்னக்கொடியும்


'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு', 'அன்னக்கொடி' ஆகிய படங்கள் ஜுன் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு' ஆகியவை காமெடியை நம்பி களமிறங்க, 'தீயா வேலை செய்யணும் குமாரு' மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆனால் ரஜினி நடித்தளவிற்கு சிவா நடிப்பு எடுபடாமல் பெட்டிக்குள் படுத்து விட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை இழந்து, 2013ல் படுதோல்வியை சந்தித்தது.

ஜூலை : ரஹ்மானுக்கு மரியாதை கொடுத்த மரியான்

'சிங்கம் 2', 'மரியான்', 'பட்டத்து யானை' ஆகிய படங்கள் ஜுலை மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் 2' வெளியானது. பரபரப்பான திரைக்கதை, பாட்டிற்கு டான்ஸ் ஆட அனுஷ்கா, காமெடிக்கு கைகொடுக்க சந்தானம், இளசுகளைக் கவர ஹன்சிகா, பரபர காட்சியமைப்பு, விறுவிறு வசனம் என பார்வையாளர்களை யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், வசூலை அள்ளியது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சொதுப்பலாகி, தோல்வியடைந்த படம்.

படம் தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டு, ‘மரியான்’ பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் எதிர்பார்க்கப்பட 'பட்டத்து யானை' வெளியாகி தோல்வியடைந்தது.

ஆகஸ்ட் : விஜய்யை அதிரவைத்த ஆகஸ்ட்


'ஐந்து ஐந்து ஐந்து', 'ஆதலால் காதல் செய்வீர்', 'தலைவா', 'தேசிங்கு ராஜா', 'தங்க மீன்கள்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான 'ஐந்து ஐந்து ஐந்து' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது 'ஆதலால் காதல் செய்வீர்'. தற்போதுள்ள இளைஞர்களின் வாழ்க்கைமுறை, யுவனின் மனதை கொள்ளை கொள்ளும் இசை என வரவேற்பைப் பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியன் பனோராமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி, தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற விஜய் வீடியோ மூலம் பேசி என பலதரப்பட்ட முயற்சிக்கு பின் வெளியான படம் 'தலைவா'. போதிய வரவேற்பை பெறவில்லை, வசூலையும் பெறவில்லை.

எழில் இயக்கத்தில் விமல், சூரி நடிப்பில் வெளியான 'தேசிங்குராஜா' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி சூரியை முன்னணி காமெடி ராஜாவாக ஆக்கியது இந்த 'தேசிங்கு ராஜா'

செப்டம்பர் : சங்கம் தந்த செப்டம்பர்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'ராஜா ராணி' ஆகிய படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மூன்று படங்களுமே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம்.

நவீனின் அசத்தலான திரைக்கதை அமைப்பில் வெளியான 'மூடர் கூடம்', வி.சி.துரையின் உருக வைக்கும் திரைக்கதை, தூங்காமல் கண்ணுக்கு கீழே வீங்க வைத்து நடித்த ஷாம் ஆகிய வகையில் '6 மெழுகுவர்த்திகள்', மிஷ்கின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' என விமர்சகர்கள் பாராட்டினாலும் மூன்றில் எந்த படமுமே வசூல் ரீதியாக வெற்றி பெறாதது சோகமே.

சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் காமெடி கதகளியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூல் ரிதியில் பல முன்னணி நடிகர்களை கலங்கடித்தது. 'சிங்கம் 2' படத்தின் முதல் நாள் வசூலை பல இடங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முந்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா இப்படத்தில் அறிமுகமாகி, ஜி.வி. பிரகாஷ் உடன்’பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரதீரசூரன்’ என படபடவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். பலரையும் சந்தோஷப்படுத்தியது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

'மெளனராகம்' சாயலில் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடிய படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் பாத்திரப் படைப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு என ரசிகர்கள் மனதில் ‘ராஜா ராணி’ சிம்மாசனமிட்டது . குறிப்பாக, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நாயகியாக நயன்தாரா நடித்து, அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.

அக்டோபர் :அசத்தலான ஆரம்பம்.. ஆசைப்பட்டதை அடையாத பாலகுமாரன்


'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நய்யாண்டி', 'வணக்கம் சென்னை', 'ஆரம்பம்' ஆகிய படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி,எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சியாக இருக்கிறார். தனுஷ் நடித்து, நஸ்ரியாவின் பஞ்சாயத்திற்கு இடையே வெளியான 'நய்யாண்டி', படம் பார்க்க வருபவர்களை நய்யாண்டி செய்தது.

அனிருத்தின் ஹிட்டடித்த இசையால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட 'வணக்கம் சென்னை', மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பை பெற்றது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'ஆரம்பம்' வசூல் ரீதியில் கோடிகளை அள்ளியது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் விமர்சகர்கள் கூறினாலும், அஜித் இருக்காரு.. அவருக்கு நாங்க இருக்கோம் என்று படம் பார்த்தார்கள் அஜித் ரசிகர்கள்.

நவம்பர் : தடைகளைத் தாண்ட வைத்த பாண்டிய நாடு

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டியநாடு', 'வில்லா (பீட்சா 2)', 'இரண்டாம் உலகம்', 'விடியும் முன்' ஆகிய படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

கார்த்தி - ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', அழுக்கு ராஜாவாக பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது. சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விஷால் எதிர்நோக்கிய ஹிட்டை பரிசாக அளித்தது. தொடர்ந்த வந்த தோல்விப்படத் தடைகளை விஷால் உடைத்தார்.

'பீட்சா' படத்தின் அடுத்த பாகமாக வெளியான 'வில்லா', முதல் பாகம் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்' வெளியானது. ஆனால், ரசிகர்களை எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் என்று யோசிக்க வைத்து, சலிப்புடன் திருப்பி அனுப்பியது. 2013ல் படுதோல்வி அடைந்த படங்கள் ஒன்றாகவும் பெயர் பெற்றது.

பூஜா நடிப்பில் வெளியான 'விடியும் முன்' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், வசூலில் வானம் விடியவில்லை.

டிசம்பர் : கல்யாண சாப்பாடும், பிரியாணியும்

'கல்யாண சமையல் சாதம்', 'பிரியாணி', 'என்றென்றும் புன்னகை', 'தலைமுறைகள்', 'மதயானைக்கூட்டம்' ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'கல்யாண சமையல் சாதம்' ADULT COMEDY என்ற வகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு - கார்த்தி இணைப்பில் வெளியான 'பிரியாணி' வெளியானது. கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களோடு ஒப்பீடு செய்து அதற்கு 'பிரியாணி' பரவாயில்லை என்று பேச்சுகள் நிலவுகின்றன.

அஹ்மத் இயக்கத்தில் வெளியான 'என்றென்றும் புன்னகை', படம் வெளியான நாளில் கூட்டம் இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு படம் பிடித்து WORD OF MOUTH மூலம் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கும் 'மதயானைக்கூட்டம்' பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கூட்டத்தை சேர்த்து இருக்கிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

2014 ல் கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ்



 தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் ‘பிராண்ட் ஈக்குவிட்டியாக’ வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது!


நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ஆண்டு கண்டிப்பாக மாஸ் ஹீரோக்களின் ஆண்டாக இருக்கப்போவது உறுதி. மேலும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! அப்படியென்ன ஸ்பெஷல்? ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர்கள் அனைவருமே, முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.


2014ன் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகப் பாக்ஸ் ஆபிஸில் அஜித், விஜய் படங்கள் மோதவிருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - கெளதம் மேனன், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா - லிங்குசாமி, விக்ரம் - ஷங்கர் இணைப்பில் 'ஐ', சிம்பு - கெளதம் மேனன், சிம்பு - செல்வராகவன், சிம்பு - பாண்டிராஜ், தனுஷ் - கே.வி.ஆனந்த் இணையும் 'அநேகன்', வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 'காவியத் தலைவன்', பாலா - சசிகுமார் இணையும் படம், ஆர்யா - விஜய் சேதுபதி -ஜனநாதன் இணையும் 'புறம்போக்கு', ஜெயம் ரவி - சமுத்திரக்கனி இணைப்பில் 'நிமிர்ந்து நில்', ஆர்யா - ராஜேஷ் இணையும் படம், சூர்யா - வெங்கட்பிரபு இணையும் படம், விஷால் - ஹரி இணையும் படம் உள்ளிட்ட படங்கள் 2014ல் வெளியாக இருக்கின்றன.


மேலே குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்து நடிகர்களுமே முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில், இப்படங்களுக்கு மிகப்பெரியளவில் ஒப்பனிங் இருக்கும். படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை இருக்கும். 2014ல் இது போன்று, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு எந்தப் படத்தினை வாங்கினாலும் கண்டிப்பாகக் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.


விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கை ஒன்று தான். அந்தக் கோரிக்கை, அனைத்துப் படங்களுமே போதிய இடைவெளி விட்டு வந்தால் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,எங்களுக்கும் நல்லது என்பதுதான்.


டி.வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், எந்தப் படத்தின் உரிமை நமக்கு என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. தங்களது நிறுவனத்தின் விளம்பர வருவாய் குறைந்துள்ளதால், சன் டி.வி நிறுவனம் முக்கியப் படங்கள் அனைத்தையும் வாங்கி விளம்பர வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது. அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா', சூர்யா - லிங்குசாமி படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கிறது.


சன் டி.வியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஜி தமிழ் என முன்னணி டி,வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்தினை டி.ஆர்.பியை ஏற்றுவதற்கு பிரபல நடிகர்களுடைய படங்களை வாங்கும் போட்டியில் இறங்கி இருக்கின்றன.


மொத்தத்தில் 2014ம் ஆண்டு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டி.வி நிறுவனங்கள் என அனைவருக்கும் பண மழையில் நனைய வாய்ப்பு இருப்பது மட்டும் உறுதி.

எதிர்நீச்சலால் சங்கத் தலைவரான சிவகார்த்திகேயன்..!!!



 தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.

ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது.

படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.

'ஆரம்பம்' 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால், திரையரங்கள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்போ அந்தளவிற்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 'எந்திரன்' படம் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள்.'ஆரம்பம்' தயாரிப்பாளர் வெளிப்படையாக வசூலைத் தெரிவிக்காத வரை, வசூல் 100 கோடி என்ற குழப்பம் தொடரத்தான் செய்யும்.

படத்தயாரிப்பாளருக்கு லாபம், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்றால் கண்டிப்பாக 'எதிர்நீச்சல்', 'சூது கவ்வும்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'பாண்டியநாடு', 'ராஜா ராணி', 'தேசிங்குராஜா' எனப்பட்டது.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில், "எங்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படங்கள் என்றால், 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபம்', 'ராஜா ராணி'. மற்ற படங்களான 'சூது கவ்வும்', 'பாண்டியநாடு', 'தேசிங்குராஜா' ஆகியவை குறைந்த லாபம் சம்பாதித்தது” என்றார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே கொடுத்த லாபத்தைப் பார்த்து, அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் குறைந்த காலத்தில் 20 கோடியைத் தொட்டு இருப்பது பல முன்னணி நடிகர்களை வியப்பில் ஆழ்ந்தியிருக்கிறது.

2013-ம் வருடத்தில் தடதடவென முன்னேறியது சிவகார்த்திகேயன் தான்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top