
உடல் பருமன் ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அதுவே அடிப்படை என்பதையும் அறிவோம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் வலிகளும் அதிகம் வரும் என்கிற புதிய புள்ளிவிவரம் சொல்கிறது மருத்துவம்.உடல் பருமனால் வலிகள் அதிகரிப்பதன் பின்னணி, தீர்வுகள் மற்றும் லேட்டஸ்ட் சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். ‘‘உடல் பருமனை பி.எம்.ஐ என்கிற அளவீட்டால் அறிகிறோம். பி.எம்.ஐ கணக்கீட்டின் படி, 25க்கும் மேலாக உள்ளவர்கள் அதிக எடை உள்ளவர்களாக சொல்லப்படுகிறார்கள், மருத்துவப் புள்ளிவிவரப்படி, பி.எம்.ஐ 25 முதல் 30 வரை உள்ளவர்கள் 20 சதவிகிதமும், 30 முதல் 35 வரை உள்ளவர்கள்...