.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label அரியவகை இணையதளம்!. Show all posts
Showing posts with label அரியவகை இணையதளம்!. Show all posts

Thursday 29 August 2013

240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்......


இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்

குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்

பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்

இந்த சிறப்புப் பதிவு.

அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு

நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்



அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக

கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு

என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்

நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)

கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக

சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்

முடிவின் வலது பக்கம் இருக்கும் Select  என்பதை சொடுக்கி

மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்

தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்

இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து

தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.


இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமிரா முதல்

மொபைல் போன், கம்ப்யூட்டர்,தொலைக்காட்சி,ஏ.சி என்று

பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்

பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே

இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



என்னிடம் இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் நோக்கியா மொபைல்

போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,

பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று



சொல்லும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

இருக்கப்போகிறது. புது அலைபேசியின் User Manual மட்டும் அல்லாமல்

பழைய மொபைல் போன் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ்

பொருட்களின் பயன்பாட்டு புத்தகத்தையும் சில நிமிடங்களில் ஒரே

இடத்தில் இருந்து தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்

உள்ளது.

இணையதள முகவரி : http://www.retrevo.com/samples/index.html

3G போன் முதல் சைனா போன் வரை , பழைய கணினி முதல் இப்போது

லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் பாக்கெட் கணினி வரை அனைத்து

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் User Manual – ஐ இந்தத் தளத்தில்

இருந்து எளிதாக தரவிரக்கலாம். User Manuals for Popular Categories

என்பதில் இருந்து நாம் தேட விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை

தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் எந்த நிறுவனம் என்பதையும்

அதன் மாடல் எண் என்ன என்பதையும் கொடுத்து எளிதாக

தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பயன்பாட்டு புத்தகம்

(User Manual) -ஐ தேடும் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Wednesday 28 August 2013

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்


 
 
 
 
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



 
இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 
 

Tuesday 27 August 2013

Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்!


 
 
                முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)

 
 
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
 

 
 
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice!



 
 
கூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

மேலும் யூடியுப் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி புகழடைந்தது. இப்போது இத்தளத்தில் புதிய வசதியாக இந்தி மொழியில் சமீபத்திய வெற்றித் திரைப்படங்களை முழுவதும் பார்க்க வழி செய்திருக்கிறது. இனி மேல் புதிய இந்தித் திரைப்படங்களை High Definition உயர்தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.வீடியோவின் தரம் அருமையாக உள்ளது. தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இந்த சேவை Youtube BoxOffice என்று அழைக்கப் படுகிறது.

இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice


 இதில் ஒவ்வொரு மாதமும் புதிய வெற்றியடைந்த திரைப்படங்கள் பதிவேற்றப்படும். பழைய படங்கள் மற்றும் முன்னர் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எப்போதும் போல Bollywood பகுதியிலும் அல்லது இதன் கீழேயே More Videos என்பதைக் கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் படங்களுக்கும் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும்.


இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice
 

Saturday 24 August 2013

பயனுள்ள இணையதள முகவரிகள்...

1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

http://www.cutmypic.com/

2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

http://www.wordia.com/

3. தமிழில் கணினி செய்திகள்

http://tamilcomputertips.blogspot.com/

4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

 http://yttm.tv/

6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.

http://classbites.com/ 

7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

http://www.helioid.com

8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.

 http://www.8on.tv

9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க

http://video.kidzui.com

10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.

http://www.lightworksbeta.com

11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும்  பிரத்யேகமான தளம்.

http://www.freebirthdaymessages.com

12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.

http://bgmaker.ventdaval.com

13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.

http://mailvu.com

Tuesday 20 August 2013

தமிழக பல்கலைக்கழகங்கள்!



தமிழக பல்கலைக்கழகங்கள்:

தமிழகத்திலுள்ள பல்கலைகழகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பெயர் மேல் சொடுக்கி அவற்றுக்கான இணையதளத்திற்கு செல்லலாம்.
  1. அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை
  2. அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
  3. அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி
  4. அழகப்பா பல்கலைக்கழகம்
  5. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  6. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
  7. பாரதியார் பல்கலைக்கழகம்
  8. பெரியார் பல்கலைக்கழகம்
  9. காந்தி கிராமிய ஊரகப் பல்கலைக்கழகம்
  10. இந்திய தொழிற்நுட்ப நிறுவனம்
  11. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
  12. மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  13. அன்னை தெரசா பெண் பல்கலைக்கழகம்
  14. தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
  15. தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம்
  16. தமிழ் நாடு கால்நடை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம்
  17. தமிழ் நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
  18. தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
  20. சென்னைப் பல்கலைக்கழகம்
  21. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  22. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  23. தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
  24. தமிழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

பயனுள்ள இணையதள தொகுப்புகள்!



பயனுள்ள இணையதள தொகுப்புகள்:

இங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள்  உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும்.

1. Voter ID Online Registration

2. பட்டா / சிட்டா அடங்கல்

3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

4. வில்லங்க சான்றிதழ்

5. பிறப்பு சான்றிதழ்

6. இறப்பு சான்றிதழ்

7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

9. ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு (E-டிக்கெட்) முன் பதிவு

     I. TNSTC

     II. IRCTC.co.in

     III. Yatra.com

     IV. Redbus.in

10. விமான பயண சீட்டு

     I. Cleartrip

     II. Myke My Trip

     III. Ezeego1

11. BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

12. Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

     I. Oximall.com

     II. Rechargeitnow.com

     III. Itzcash.com

13. E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

14. E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

     I. Ebay.co.in

     II. Indiatimes.com

     III. Rediff.com

15. Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

     I. Icicidirect.com

     II. Hdfcsec.com

     III. Religareonline.com

     IV. Kotaksecurities.com

     V. Sharekhan.com

16. மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

     I. Sbi.co.in

     II. Indianbank.in

     III. Ibo.in

     IV. Bankofindia.com

     V. Bankofbaroda.com

     VI. Axisbank.com/b>

     VII. Hdfcbank.com

17. பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி

     I. Tn.gov.in

     II. Tnresults.nic.in

     III. Dge3.tn.nic.in

     IV. Dge2.tn.nic.in

     V. Pallikalvi.in

     VI. Southindia.com

     VII. Chennaionline.com

     VII. Chennaionline.com

18. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

19. இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

     I. Classteacher

     II. Lampsglow

     III. Classontheweb.com

     IV. Edurite

     V. Cbse.com

20. 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

21. UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

     I. Tnpsc.gov.in

     II. Upsc.gov.in

     III. Upscportal.com

     IV. Iba.org.in

     V. Rrcb.gov.in

     V. Trb.tn.nic.in

22. உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

     I. Employmentnews.gov.in

     II. Omcmanpower.com

     III. Naukri.com

     IV. Monster.com

23. இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

     I. Ssbrectt.gov.in

     II. Bsf.nic.in

     III. Indianarmy.nic.in

24. இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

25. Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

     I. Skype.com

     II. Gmail.com

     III. Yahoochat

     IV. Meebo

26. அடிப்படை கணினி பயிற்சி

     I. Homeandlearn.co.uk

     II. Intelligentedu.com

     III. Ehow.com

27. சிறார்களுக்கு கணினி பயிற்சி

28. இ – விளையாட்டுக்கள்

     I. Zapak.com

     II. Miniclip.com

     III. Pogo.com

     IV. Freeonlinegames

     V. Roundgames.com

29. ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்

     I. Google.com

     II. Wikipedia.com

     III. Hotmail.com

     IV. Yahoo.com

     V. Ebuddy.com

     VI. Skype.com

30. தகவல் அறியும் உரிமை சட்டம்

     I. Rti.gov.in

     II. Rtiindia.org

     III. India.gov.in

     IV. Rti.org

31. சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி

     I. Incredibleindia.org

     II. India-tourism.com

     III. Theashokgroup.com

     IV. Smartindiaonline.com

32. திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி

     I. Tamilmatrimony.com

     II. Kalyanamalai.net

     III. Bharatmatrimony.com

     IV. Shaadi.com

33. குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய

34. ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள

     I. Koodal.com

     II. Freehoroscopesonline.in

35. இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி

36. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்

37. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

38. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     I. Tnfinds.com

     II. Justdial.com

     II. Justdial.com
 
 

எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?



எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?

 

எல்லா  நாட்டிற்கும் தகுந்தாற்போல் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை நாம் கொடுக்கும் போட்டோவிலிருந்து தரும் இணையதள முகவரி: http://www.makepassportphoto.com/




 
மேற்காணும் படத்தில் உள்ளவாறு உங்கள் போட்டோவினையும் அதற்கேற்ற தெரிவுகளையும் தேர்வு செய்து சில நிமிடங்களில் எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவினையும் நீங்கள் பெறலாம். 


Monday 3 June 2013

மூளைக்கு தீனி போடும் அறிவியல் சமாச்சாரங்கள் - அரியவகை இணையதளம்!!!







இணையத்தில் உலா வந்த போது, சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks) என்ற தலைப்பு சற்று வேடிக்கையாக என் கண்ணில் பட்டது. வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. அட, அப்படியா! என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது. 




நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது? இரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது? (இப்போது ஏன் உங்களுக்கு ஆர்வம் வருகிறது?)




இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது? பல இணைய தளங்கள் இருந்தாலும், http://www.exploratorium.edu/snacks/index.html என்ற முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனும் தரப்பட்டுள்ளன.




தளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில் மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. இது தான் இந்த தளத்தின் சிறப்பு.




 Instructions, Advice, and Helpful hints என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.
தளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம் நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு நல்ல புத்தகத் தளமாகும்.



Tuesday 21 May 2013

அரிய தகவல்களைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக இது!





                         எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. 


                         நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பதும் நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும்.  இதனால், நம் அறிவும் விசாலமாகிறது.  இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.  இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது.  



அதன் முகவரி, 






                     இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன.  



                    ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது




                    மேலும் சில தலைப்புகள்  உங்களுக்காக இதோ....













அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய இணைய தளம் இது..

வியக்கவைக்கும் இணைய தளம் - கல்லூரி மாணவர்களுக்கு......







                 கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


                    இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள்.


                      இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி






                       இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 






                       உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 






                        கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது.



           கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.



Note:-

  { மிக அருமையாக உள்ளது இத்தளம் }


 

Saturday 18 May 2013

நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது.






                          இணையத்தில் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்குப் பயன்படும் இணையதளங்கள் இருப்பதைப் போன்று கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென தனிச் சிறப்பு இணையதளங்கள் நிறைய இருப்பதில்லை. ஒன்றிரண்டு தளங்கள் இருப்பினும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது

  

                         காரணம் அவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கேற்ற  (Keywords)  சரியான இணையதளங்கள் கிடைப்பதில்லை. தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப சரியான இணையதளங்களை பட்டியலிடாததே அதற்கு காரணம்.  அதாவது கல்வித் தொடர்பான வார்த்தைகளை உள்ளிட்டு தேடும்பொழுது அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கொண்டிருக்கும் வேறொரு  அதிக டிராபிக் கொண்ட தளங்களையே முதன்மைப் படுத்திக் காட்டும்.




               அதனால் மாணவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கான சரியான கல்வி இணையதளங்கள் பட்டியலிடப்படுவதில்லை. இதற்கு காரணம் கல்வித்தொடர்புடைய இணையதளங்கள் மிகவும் குறைவாக இருப்பதே


                 அப்படி குறைவான உள்ள இணையதளங்களிலும் மிக முக்கியமான இணையதளமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடிய  ஒரு மிகச் சிறந்த முழுமையான இணையதளத்தை இப்பதிவில் பார்க்கலாம்.




தளத்தின் பெயர்ஸ்டூடண்ட்ஸ் 3கே (Students 3k.com)




        இத்தளத்தில் Engineering Students, Arts & Science Students, Polytechnic Students, MBA Students, B.Ed & M.Ed Students மற்றும் HSC (12th) Students ஆகியவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்
  




Engineering Students:



      Engineering Students க்குத் தேவையான  Questions , Notes  ஆகியவைகள் கிடைக்கும். இன்ஜினியர் மாணவர்கள்



என்ற தொடுப்பை சொடுக்கித் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.



Arts & Science Students:




          Arts & Science Students  களுக்கான தளம் இது. இதில் ஆர்ட்& சயின்ஸ்  Study Meterials,  Question Papers  முதல் அனைத்து Questions Bank ம் கிடைக்கும்




              இவ்வாறு அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்




           குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் Aptitude  பகுதியை சொல்லலாம். அது மட்டுமில்லாமல்  Placement Papers,  Projects download,  Career Guidance  ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள தகவல்களும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்




           கல்விக் கடன்  (Educational Loan) வாங்குவதற்கான வழிமுறைகளையும் இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ல்விக் கடன் வழங்கும் வங்கிகளையும் இத்தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். பட்டியலிலிருக்கும் ஒரு சில வங்கிகள்



  • Axis Bank Study Loan
  • Citibank India
  • Syndicate Bank
  • Tamilnad Mercantile Bank
  • UCO Bank Education Loan
  • [CUB] City Union Bank
  • Federal Bank
  • State Bank of Mysore
  • State Bank of Hyderabad [SBH]
  • Indian Bank Loan
  • Punjab National Bank [PNB]
  • HDFC Bank Loan
  • Dena Bank
  • Central Bank of India
  • Bank Of India
  • Bank of Baroda [BOB]
  • Allahabad bank



               ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும், அவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் துறைச்சார்ந்த அனைத்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது இத்தளம். அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் கல்விச்சார்ந்த தகவல்களையும், கல்விக்குப் பயன்படும் தகவல்களையும் தொகுத்து தந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்




நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது


இணையதளத்திற்கான முகவரிhttp://students3k.com/

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top