
கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’...