
சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் ஏற்காடு, அமைந்துள்ளது. இயற்கையின் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 1623 மீட்டர் உயரத்திலும் அதாவது 5326 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்வதற்கு மலைப் பாதையின் வழியே 20 கொண்டை ஊசிவளைவுகளைக் கடந்து செல்லவேண்டும்......அப்படி பயணிக்கும் போது ..நம் முகத்தை தொட்டுச் செல்லும் சில்லென்ற மேகங்கள்,அந்த மேகங்களை தாலாட்டும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் கொண்டை ஊசி வளைவுகள், இதயம் வருடும் மென்மையான இனியக்...