.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label விழாக்களின் தொகுப்பு. Show all posts
Showing posts with label விழாக்களின் தொகுப்பு. Show all posts

Thursday 16 January 2014

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி





ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி:-
          
 ஹாலிவுட் சினிமாவின் உயரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இதில் 'கிராவிட்டி' மற்றும் 'அமெரிக்கன் ஹஸல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகப்படியாக, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுவதால் எந்தத் திரைப்படம் விருதைப் பெரும் என இப்போதே ரசிகர்கள் இடையே விவாதம் ஆரம்பித்துவிட்டது. முழு பரிந்துரை பட்டியல் பின்வருமாறு:


சிறந்த திரைப்படம்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

ஹெர்

நெப்ராஸ்கா

ஃபிலோமினா

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த இயக்குனர்


ஸ்டீவ் மெக்குயின் (1............

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....



Friday 27 December 2013

பொங்கல் சிறப்புகள்





கரும்பின் தத்துவ இனிப்பு

பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.

மஞ்சள் குலை வாங்குவது ஏன்?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது< அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் ' என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

காப்பரிசி சாப்பிடுங்க!


பொங்கலன்று காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை திருவிளக்கின் முன் படைக்க வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து, அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றை கலக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதன்முதலாக காதுகுத்தும் சமயத்தில் இந்த அரிசியை உறவினர்களுக்கு கொடுப்பார்கள். இதனால் இதற்கு காதரிசி என பெயர் வந்தது. காப்பரிசி என்றும் சொல்வர். குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பொங்கலன்று இரவு பூஜை

பொங்கலன்று காலைநேர சூரிய பூஜை எவ்வளவு முக்கியமோ, அதே போல இரவு நேர பூஜையும் முக்கியம். அன்று இரவு முன்னோர்களை வழிபட வேண்டும். ஒரு தலைவாழை இலையை குத்துவிளக்கின் முன் விரித்து, அதில் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், புத்தாடைகள் வைக்க வேண்டும். முன்னோரை மனதார வணங்கி, ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். நம் குடும்பத்தில் மணமாகாத கன்னிப்பெண்கள் இறந்து போயிருந்தால், அவர்களின் நினைவாக, உறவுப்பெண்களில் கஷ்டப்பட்ட பெண் ஒருவருக்கு திருமணத்திற்கான உதவியைச் செய்ய வேண்டும்.

தண்ணீருக்கு மரியாதை

குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்றும் சொல்வர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பொங்கலை வைக்கலாம். அன்று அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு, பூசணி, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மணலால் சிறு வீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின் (சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்ததுடன், தண்ணீரில் வாழும் மீன் முதலான ஜீவன்களுக்கு தானமளித்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களை திட்டாமல் சாப்பிட வைக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக வைக்கப்பட்ட இந்தப் பொங்கலை இப்போதும் வைத்து, எதிர்காலத்திலாவது தண்ணீருக்கு மரியாதை செய்ய பழகிக் கொள்வோம்.

காவிபட்டை ரகசியம்

ஒரு காலத்தில் வீட்டில் வெள்ளையடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இப்போது போல விதவிதமான வண்ணங்களை பூசும் வழக்கமில்லை. எனவே வீட்டு வாசல் சுவரில் வெள்ளையடித்து, நடுவில் காவிநிற பட்டையை அடிப்பார்கள். காவி இறைவனை சென்றடைவதற்குரிய நிறம். துறவிகளுக்குரிய அடையாளம்.
இல்லறத்தில் இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில், மனதளவிலாவது துறவறத்தை கடைபிடிக்க வேண்டும், பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. பொங்கல் கட்டி எனப்படும் பொங்கல் பானை வைக்கும் கற்களிலும் (அடுப்பு) வெள்ளையடித்து இடையிடையே காவிபட்டை (நீளமான கோடு) இட வேண்டும். கோயில் மதில் சுவர்களில் வெள்ளை, காவி நிற கோடுகள் போடுவதன் ரகசியம் இதுவே. மேலும் இந்தக் கோடுகள் கள்ளமற்ற பால் மனமும், செம்மையான (உறுதியான) மனமும் வேண்டும் என்பதையும் இங்கு வரும் பக்தன் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

தைமாத முகூர்த்த சிறப்பு

இருமனம் இணையும் திருமண வைபவத்தை, தை மாத முகூர்த்தங்களில் நடத்துவதை பலரும் விரும்புவர். மார்கழி பாவை நோன்பில் வாசலில் கோலமிட்டு பூசணிப்பூவினை வைத்து நல்ல மணமகன் வேண்டி காத்திருந்த கன்னியர் தை மாதத்தில் மாலைசூடுவது வழக்கம். திருமணத்திற்கு ஒருபெண் தயாராகிவிட்டாள் என்பதன் அறிகுறியாகவே பொங்கல் நாளில் வாசலில் கூரைப்பூ வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆவாரம்பூ, மாவிலை, வேப்பஇலை, கண்ணுப்பிள்ளைச் செடி என்று தோரணங்கள் கட்டுவது மங்கலநிகழ்ச்சிக்கான அடையாளமே. இதுவே, நாளடைவில் காளையை அடக்குதல், இளவட்டக்கல்லினை தூக்குதல் என்று வீரசாசகவிளையாட்டு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு மாறின. காலங்கள் மாறினாலும், நம் பண்பாட்டு அடையாளங்கள் மாறுவதில்லை. வழிவழியாக பழகிவந்த தைமுகூர்த்தங்களில் திருமணம் நிகழ்த்துவதையே இன்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

பட்டத்திருவிழா

பொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் "மகர சங்கராந்த்' என்ற பெயரில் இவ்விழாவை,பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா கொண்டாடப்படும். மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், விதவிதமான பட்டங்களைப் பறக்க விடுவர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டின் சின்னம், கலாச்சாரம், நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்கள் அச்சிட்ட பட்டங்களைப் பறக்க விடுவர்.

Tuesday 24 December 2013

கிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்கள் நண்பர்களுக்கு பரிசளியுங்கள்....





நீங்களும் செய்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்கள் நண்பர்களுக்கு 

பரிசளியுங்கள்....



Tuesday 26 November 2013

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

Saturday 16 November 2013

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

                                            nov 16 - edit tolerance-day

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

Thursday 14 November 2013

குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடச் சொன்னார் .  உலகநாடுகளில் பட்டம் பெற்ற நேருவுக்குள் குழந்தை மனம் இருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .


சிறப்பு தினங்கள் என்று ஏராளமான நாட்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன . அதில் துக்ககரமான நினைவு நாட்களும் வருவது குறிப்பிடத்தக்கது .

இப்படி சிறப்பு தினங்கள் எல்லாம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன ?

மனிதர்கள் , சிறப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் , அதை மகிழ்ச்சியின் குறியீடாகவும் கொண்டாடுவதற்கும் வழி வகை ஏற்படுகிறது.

அந்த வகையில் , குழந்தைகள் தினத்தை எத்தனை பேர் உணர்ந்து கொண்டாடுகிறார் என்பது தெரியவில்லை . பெரிய ஜம்பவான்கள் எல்லோருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள்  பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .

தேவையான வசதிகளையும் சுதந்திரத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்கிறார்கள் .

இப்போதெல்லாம் நடைமுறையில் குழந்தைகள் சாதிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இதற்கெல்லாம் வசதி வாய்ப்புகள் ஊடகத்தில் கொட்டிக் கிடக்கின்றன .

உரிய நேரத்தில் குழந்தைகளை வெற்றிப் பெறச் செய்வதே பெற்றோர்களின் முதல் கடமையாகும்  . ஆனால் , தான்தோன்றியா பிள்ளைகளை விட்டு விடும் பெற்றோர்கள் இருப்பதால் தான் , ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தெருவுக்கு வந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .

கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை கைதிகள் போல வளர்க்கும் போக்கை நிறுத்தி விட்டு குழந்தைகள் மொழியில் திருத்த கூடுதலான திறமை ஒவ்வொரு பெற்றோருக்கும் நிச்சியம் வேண்டும் .

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வதற்காக ஐந்திலே இளம் மூங்கில்களை ஒடித்து விடுகிறார்கள் .

குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகளாகவே மாறினால் மட்டும் தான் , இன்றைய குழந்தைகள் நாளைய வெற்றியாளராக முடியும் .

Monday 11 November 2013

INDIA தேசிய கீதத்தின் பொருள்....

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்களகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Saturday 2 November 2013

தீபாவளி சிந்தனைகள்!

தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.


மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது?


பணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, ஏழைகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் நாளும் உழைத்து ஓடாய்த் தேயும் விவசாயி, கூலித் தொழிலாளி போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கும் தீபாவளி பண்டிகை தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்க அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. பலருக்கும் புத்தாடை வாங்கவோ, பெறவோ தீபாவளி காரணமாகின்றது என்பதுதான் உண்மை.


தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது.


நாமெல்லாம் தீபாவளி என்பது நரகாசுரனைக் கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வதைத்ததைக் கொண்டாடும் பண்டிகை என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீபாவளிக்கு இன்னொரு புராணப் பின்னணியும் உண்டு. தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. இராவணனை அழித்துவிட்டு நாடு திரும்பும் ராமபிரானை, வழிநெடுக விளக்குகளை ஏற்றி வைத்து வாணவேடிக்கை முழங்க அயோத்தி நகர மக்கள் வரவேற்பதைக் குறிக்கும் நாளாக தீபாவளி அறியப்படுகிறது.


பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி!
அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு.


நாம் புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளையும், பலகாரங்களையும் சுவைத்து மகிழும் வேளையில், ஒரு அன்பு வேண்டுகோள். ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமல், மாற்று உடை இல்லாமல், தலையில் எண்ணெய் தடவக்கூட முடியாமல் எத்தனை எத்தனையோ பேர் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது; ஏக்கம் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக்குடிசையோ... அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள்.


வறுமை என்பது விதி என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது சிறுமை. வறுமை கண்ட இடத்து நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதுதான் நமக்குப் பெருமை.


தீபாவளிப் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓலைக் குடிசையிலும் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதை உங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்களேன்.


நலம் பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்! இல்லை என்பதே இல்லாத, இன்பமயமான உலகம் உருவாகட்டும்!

Monday 28 October 2013

‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’

தீபாவளி!


குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்!


தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள்,

புது மகிழ்ச்சி,

பலவகைப் பலகாரங்கள்,

ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!.


28 - diwali-alert


ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.


அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் :


1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள் நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டு வைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.

2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.

3. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளைத் தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.

4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

5. ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.

6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒரு போதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.

7. குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.

8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.

9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

11. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.

12. ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.

13. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.

14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

15. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

16. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.

17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.

18. பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.

19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.

21. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.

22. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.

23. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.

24. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக்கொளுத்தி விளையாட வேண்டும்.

25. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..


முதல் உதவிக் குறிப்புகள் :


1. எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்க்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்ப்படும்.

4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.

5. ஒருவேளை உங்கள்மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்:

பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.

1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை.உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.

3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல் வேண்டும்.

4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்த்துச் செல்வதற்க்கு முன்னால் வலி நிவாரணியாக எந்த மருந்தினையும் கொடுக்கக்கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்க்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக்குழாய்களை மென்மையானதாக்கி விடும், எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள்.இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..

ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!

பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!

அனைவருக்கும் ஒளி மயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Monday 7 October 2013

மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!

மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


6 - mysore dasara
 


நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை உலகப் புகழ் பெற்ற பெருங் கொண்டாட்டம் இது! மைசூரில் ஆண்டுதோறும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான ஆரம்பம் என்ன? 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. 


பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். ‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். 


மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார். 


மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரைக் காத்த தேவி, இங்கு ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ஒருவளாக காட்சிதருகிறாள். மகிஷன் வாழ்ந்தது இன்றைய மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான். 


சாமுண்டி மலையில் அருளும் சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று அவனை வதம் செய்தாள். அதனால் மகிஷாசுர என்பது மறுவி மைசூர் ஆயிற்று. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.


 பலராமன், அபிமன்யு, கஜேந்திரா, கங்கா, அர்ஜுனா, சரளா, மேரி என்ற பெயர் கொண்ட யானைகள் வழக்கமாக தசராவில் கலந்து கொள்ளும். அந்த யானைகளுக்கு மக்கள் மகத்தான வரவேற்பளிப்பர். தசரா இந்திரவிழா போன்று கொண்டாடப்படுகிறது. எப்போதும் பொலிவிழக்காத மைசூரின் தசரா திருவிழா கர்நாடக கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பெருவிழாவாக போற்றப்படுகிறது.


இதன் முக்கிய அம்சமாய் இடம்பெறுவது ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான். பலராமா எனும் மூத்த யானைக்கு தங்க முகபடாம் அணிவிக்கப்படும். 900 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிந்து, பலராமா கம்பீரமாகக் காட்சியளிக்கும். தசரா வைபவத்திற்காக காட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள் நகரத்தின் நெரிசல்களுக்கிடையே தினமும் 6 கி.மீ. பாகன்களின் கட்டளைக்கேற்ப நடந்துகொள்ளும். அப்போது மைசூர் வீதிகளில் ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!’ (மைசூரின் தசராதான் எத்தனை அழகு!) என்ற பாடல் வீதிகளில் ஒலிக்கிறது. தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.



தசரா கண்காட்சி வளாகம் அருகே, தேவராஜ அர்ஸ் மல்யுத்தப் போட்டி வளாகம் உள்ளது. மாநில அளவில் இங்கு போட்டி நடக்கும். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண், பெண் வீராங்கனைகள் கலந்து கொள்வர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். போட்டியின் இறுதி நாளன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்வார்கள். மொத்தம் 98,260 பல்புகள் அலங்கார ஒளி பரப்பி ஆனந்தப் பரவசப்படுகின்றன. 



இதற்காக ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மின் தட்டுப்பாடு நிலவுவதால், இந்த அலங்கார பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 


இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாதுதான். 


ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை ஒளிரச் செய்ய முடியும். தினமும் அரண்மனைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெறுகிறது. தசராவின்போது மைசூர் மகாராஜா கொலுதர்பாரில் அமர்ந்து அனைவரையும் ஆசிர்வதிப்பார். இனம், மதம் கடந்து மக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகை, மைசூர் தசரா. தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும். இதனால், மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தசரா விழாக் குழுவினர் சிறப்பு ஏற்பாடு களைச் செய்கிறார்கள்.


Saturday 28 September 2013

சாகச மனிதா!






 சாகச மனிதா...................

காரு நேரா போகும்........

வலைந்து வலைந்து போகும்..................

இப்பதான் பார்க்கிறேன்.........................

சுற்றி சுற்றி போகுது...............................  சாதனடா.... சாதனை.....



Sunday 15 September 2013

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?






கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர்.



 தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 



8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.


Monday 9 September 2013

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார்.

sep 9 lord-ganesha-

 


மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.திருச்சியின் அடையாளமாக திகழும் மலைக்கோட்டையில் தாயுமானசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். மேலே அமைந்துள்ள கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் கீழே அமைந்துள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ராமபிரான், விபீஷணன், ஜடாயு, அனுமன் ஆகியோர் வழிபட்ட தலமாகும். இக்கோவிலில் வேண்டிக்கொண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இக்கோவிலில் இன்று முதல் வருகிற 22–ந் தேதி வரை 14 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

Saturday 7 September 2013

தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'


சமய விழாவான விநாயக சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர். 


முதன்முதலில் புனேயில் தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது. 

பின் இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி, அரச விழாவாக கொண்டாடப்பட்டது. 


பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது. 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என எண்ணினார். 

பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார். 

விநாயகர் சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர் மாற்றினார்.

Thursday 5 September 2013

ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி!


சது‌ர்‌த்‌தி ‌தி‌தி கணேசரு‌க்கு ‌மிகவு‌‌ம் உக‌ந்த ந‌‌ன்னா‌ள். சு‌க்ல ப‌ட்ச (வள‌ர்‌பிறை) சது‌ர்‌த்‌தியை வரசது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம் ‌கிரு‌ஷ்ண ப‌ட்ச (தே‌ய்‌பிறை சது‌ர்‌த்‌தியை) ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம், ச‌ங்க‌ஷ்டஹர சது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம் கூறுவ‌ர். நடு‌ப்பக‌ல் வரையு‌ள்ள சு‌க்ல சது‌ர்‌த்‌தியு‌ம், இர‌வி‌‌ல் ச‌ந்‌திரோதய‌ம் வரை ‌‌நீடி‌க்க‌ி‌ன்ற ‌கிரு‌ஷ்ண சது‌ர்‌த்‌தியு‌ம் ‌விரத‌த்‌தி‌ற்கே‌ற்றவை. ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி‌யி‌ல் பக‌லி‌ல் உபவாச‌ம் இரு‌ப்ப‌ர். இரவு ச‌ந்‌திரனை க‌ண்டது‌ம் அ‌‌ர்‌க்‌கிய‌ம் த‌ந்து, பூஜையை முடி‌த்து ‌‌பி‌ன் உ‌ண்ப‌ர்.

ஆ‌திசேஷ‌ன் நாரதரது உபதேச‌ப்படி ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌விரத‌மிரு‌ந்தா‌ர். ‌விநாயகரது ‌‌‌திருவருளா‌ல் ‌‌ச‌ிவபெருமா‌ள் முடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் பேறு பெ‌ற்றா‌ர். அவ‌னியை‌த் தா‌ங்கவு‌ம், ‌விநாயகரு‌க்கு உதரப‌ந்தனமாக இரு‌க்கவு‌ம் ‌திருமா‌லி‌ன் படு‌க்கையாகவு‌ம் ஆகு‌ம் வர‌ம் பெ‌ற்றா‌ர்.

ச‌‌ங்கர ஹர சது‌ர்‌த்த‌ி ‌விரத‌த்தை அனு‌ஷ்டி‌த்தே ராவண‌ன் இல‌ங்கா‌திப‌த்ய‌ம் பெ‌ற்றா‌ன். பா‌ண்டவ‌ர்கள‌், து‌ரியோதனா‌தியரை வெ‌ன்றன‌ர். முத‌ன் முத‌லி‌ல் இ‌ந்த ‌விரத‌த்தை அ‌ங்கார‌கன் (செ‌‌வ்வா‌ய்) அனு‌ஷ்டி‌த்து நவ‌க்‌கிரகங்‌க‌ளி‌ல் ஒ‌ன்றானா‌ர். அதனா‌ல் இ‌ந்த ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌விரத‌த்‌தி‌ற்கு அ‌‌ங்காரக சது‌ர்‌த்‌தி ‌விரத‌ம் எ‌ன்று‌ம் அழைக்கப்படுகிறது.

ச‌ங்கர ஹர சது‌ர்‌த்‌தி‌ ‌விரத‌த்தை மா‌சி மாத‌ம் ‌கிரு‌ஷ்ணப‌ட்ச‌ம் (தே‌ய்‌பிறை) செ‌வ்வா‌ய்‌க்‌‌கிழமையோடு வரு‌ம் சது‌ர்‌த்‌தி ‌தி‌தி‌யி‌ல் துவ‌ங்‌கி ஓரா‌ண்டு ‌வி‌தி‌ப்படி அனு‌ஷ்டி‌த்தா‌ல் எ‌ல்லா‌த் து‌ன்ப‌ங்களு‌ம் ‌நீ‌ங்க‌ப் பெறுவா‌ர்க‌ள். செ‌ல்வ‌ம், செ‌ல்வா‌க்கு ஆ‌கிய அனை‌த்து இ‌ன்ப‌ங்களையு‌ம் அடைவ‌ா‌ர்க‌ள். ஆவ‌ணி மா‌த‌த்‌தி‌ல் வரு‌ம் தே‌ய்‌பிறை சது‌‌ர்‌த்‌தி‌யி‌லிரு‌ந்து 12 மாத‌ங்க‌ள் ‌பிர‌தி மாதமு‌ம் அனு‌‌ஷ்டி‌த்து, ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு மு‌ந்‌திய தே‌ற்‌பிறை சது‌ர்‌த்‌தியான மஹா ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌திய‌ன்று முடி‌க்கு‌ம் மரபு‌ம் உ‌ண்டு.

இ‌ந்த ‌விர‌‌த்தை தொட‌ங்கு‌ம் நா‌ளி‌ல் சூ‌ரிய‌ன் உ‌தி‌க்க 5 நா‌ழிகை‌க்கு (ஒரு நா‌ழிகை எ‌ன்பது 24 ந‌ி‌‌மிட‌ங்களாகு‌ம். இர‌ண்டரை நா‌‌ழிகை எ‌‌ன்பது 60 ‌நி‌மிட‌‌ங்க‌ள். அதவாது ஒரு ம‌ணி. எனவே 5 நா‌ழிகைக‌ள் எ‌ன்பது 120 ‌நி‌மிட‌‌ங்க‌ள் அ‌ல்லது 2 மண‌ி) மு‌ன்னரே உற‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து எழு‌ந்து, ‌வி‌‌தி‌ப்படி ச‌ங்க‌‌ற்ப‌ம் செ‌ய்து கொ‌‌ண்டு, ‌பு‌னித ந‌தி‌‌யி‌ல் ‌நீராடி, ‌‌சிவ‌ச்சசின்ன‌ங்களை அ‌ணி‌‌ந்து கொ‌ண்டு, ‌விநாயக‌ப் பெருமானை ‌தியா‌னி‌க்க வே‌ண்டு‌ம்.

அவருடைய ஓரெழு‌‌த்து, ஆறெழு‌த்து ம‌ந்‌திர‌ங்க‌ளி‌ல் ஏதாக‌ிலு‌ம் ஒன்றை, அதுவு‌ம் தெ‌ரியாதவ‌ர்‌கள் விநாயகரது பெய‌ர்களையாவது இடை‌விடாது அன‌்று நா‌ள் முழுகூது‌ம் ஜெ‌பி‌த்‌த‌‌ல் வே‌ண்டு‌‌ம். உபவாச‌ம் இரு‌ப்பது‌ம் நல‌ம். இரவு ச‌ந்‌திரோதய‌ம் ஆனவுட‌‌ன் ச‌‌ந்‌திர பகவானை பா‌ர்‌த்து‌வி‌ட்டு‌ச் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். அ‌ன்று ‌விநாயக புராண‌த்தை‌ப் பாராயண‌ம் செ‌ய்வது ந‌ல்லது.

இ‌வ் ‌விரத‌த்தை ஓரா‌ண்டு, அதாவது ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு‌ப் ‌பிறகு வரு‌ம் ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌திய‌ி‌லிரு‌ந்து மஹா ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி வரை, உறு‌தியுட‌ன் அனு‌ஷ்டி‌ப்பவ‌ர்க‌ள் எ‌ல்லா நல‌ன்களையு‌ம் பெறுவ‌ர். இ‌த்தகைய ச‌க்‌தி வா‌ய்‌ந்த ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி ‌‌‌விரத‌த்தை வருட‌ம் முழுவது‌ம் அனு‌ஷ்டி‌‌க்க முடியாதவ‌ர்க‌ள், மஹா ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌‌தின‌த்‌திலாவது அனு‌ஷ்டி‌த்தா‌ல் ஒரு வருட‌ம் ‌விரத‌ம் கடை‌பிடி‌க்க பலனை ‌விநாயக‌ரி‌ன் அருளா‌ல் பெறுவா‌ர்க‌ள் எ‌ன்பது உறு‌தி.

கண் திறந்த கணபதி!

விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களையும், கோணங்களையும், அவற்றின் சிறப்புக்களையும் நாம் அறிந்திருக்கிறோம். பார்வையற்ற பக்தனுக்கு கண் வழங்கிய கணபதியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தரும் கண் கொடுத்த கணபதியை, அந்த பெயரால் அழைக்கப்படும் நிகழ்ச்சி முன்பு நடந்ததாக வரலாறு உண்டு.

பிறப்பால் பார்வையற்ற ஒருவர், தனக்கு பார்வை இல்லையே என்ற சோகத்திலும், வறுமை தன்னை வாட்டி வதைக்கிறதே என்ற ஆதங்கத்திலும் துன்பத்தோடு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தான் சுவாமிமலையில் உள்ள விநாயகரின் பெருமைகளை அவர் உணந்து, அங்கு சென்றார். பிறர் உதவியுடன் வஜ்ச்சிர தீர்த்தம் என்ற கிணற்றில் நீராடி, கடவுளை வேண்டி விரதம் இருக்கத் துவங்கினார்.

பார்வையற்ற பக்தரின் செயலை பலர் ஏளனம் செய்தனர். எனினும் மனம் தளராமல் அவர் தனது விரதத்தை தொடர்ந்தார்.

தனது பக்தரின் இந்த செயலால் அகம் மகிழ்ந்த விநாயகர், பார்வையற்ற பக்தனின் குறையை நிவர்த்தி செய்தார். 'அஞ்சற்க..' என்று கூறி அவரது புறக்கண்ணையும், அகக்கண்ணையும் திறந்தார்.

தன்னை நோக்கி விரதம் இருருதவர்களை தான் எப்போதும் கைவிடுவதில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே இவ்வினாயகரை கண் திறந்த கணபதி அல்லது கண் கொடுத்த விநாயகர் என்று பக்தர்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

அன்னையும் விநாயகரும்!


ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார்.

அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார்.

என்ன வேண்டும் என்று வினவினார்.

எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.

எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க முடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது. ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாக நிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன். இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்று அன்னை விரிவான பதிலளித்து முடித்தார்.

இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம்.

அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும், அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாக ஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர்.

புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குள விநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம் செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்கு இடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம் ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்கு அளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின் தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌யி‌ல் ‌விரத‌ம்!

 
விநாயக‌ர் சது‌ர்‌‌‌த்‌தி ‌பண்டிகை நம் நாடு முழுவது‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. த‌மிழக‌த்‌‌தி‌ல் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ பூஜைக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌க்‌கி‌ன்றன. ‌‌விநாயகரு‌க்காக எ‌ப்படி ‌விரத‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது ப‌ற்‌றி சில யோசனைகள்;

ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌.

பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். பு‌‌‌திய க‌ளிம‌ண் ‌பி‌ள்ளையாரை அ‌ரி‌சி‌க்கு நடு‌வி‌ல் வை‌க்க வே‌ண்டு‌‌ம்.

அத‌ன் பி‌ன் அருக‌ம்பு‌ல்லோடு இலை, பூ‌க்களோடு ‌பி‌‌ள்ளையாரு‌க்கு ‌பிடி‌த்த வ‌ன்‌னி, ம‌ந்தாரை இலைகளோடு ‌விநாயக சது‌‌ர்‌த்‌தி அ‌ன்று அ‌ர்‌ச்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

பி‌ள்ளையாரு‌க்கு அரு‌கி‌ல் ஒரு செ‌ம்‌பி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌த்து அத‌ன்மே‌ல் மா இலை, தே‌ங்கா‌ய் வை‌த்து கு‌ம்பமாக அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.

விள‌க்கே‌ற்‌றி வை‌த்து கொழுக்க‌ட்டை, பழ‌ங்க‌ள், சு‌ண்ட‌ல் உ‌ள்டப பல பொரு‌ட்களை வை‌க்கவே‌ண்டு‌‌ம். எ‌‌ல்லா‌ம் தயாரானது‌ம் ‌‌பி‌ள்ளையாரு‌க்கு அருகு சா‌த்‌தி‌வி‌ட‌்டு அத‌ன் ‌பிறகு எரு‌க்க‌ம் பூ மாலை, வ‌‌ன்‌னி, ம‌ந்தாரை ப‌த்‌திர‌ம் எ‌ல்லா‌ம் சா‌த்த வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் கணப‌தி‌யி‌ன் மூல ம‌ந்‌‌‌திரமான ஓ‌ம், ஸ்ரீ‌ம் ‌‌‌‌ஹ‌்‌‌ரீ‌‌ம் ‌க்‌லீ‌ம் ‌க்லெள‌ம் க‌ம் கணப‌தியே வரவரத ‌ஸ‌ர்வஜன‌ம்மே வஸமானய ‌ஸ்வாஹா எ‌‌ன்று 51 முறை சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் உ‌ங்களு‌க்கு தெ‌ரி‌ந்த ‌விநாயக‌ர் து‌திகளை சொ‌ல்‌லி முடி‌வி‌ல் தூப‌ம், ‌‌தீப‌ம், ‌நிவேதன‌ம் செ‌ய்து ‌விநாயகரை வ‌ழிபட வே‌ண்டு‌ம். இ‌ப்படி பூஜை செ‌‌ய்‌கிற வரை‌க்கு‌ம் உபவாச‌ம் இரு‌ப்பது ந‌ல்லது.

ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ‌விர‌த‌ம் இரு‌க்‌கிறவ‌ர்க‌ள் அ‌ன்று மாலை ‌நிலவு வ‌ந்தது‌ம் ச‌ந்‌திரனை பா‌ர்‌த்து ‌வி‌ட்டு ‌பி‌ள்ளையாரை வணங்கவே‌ண்டு‌ம். அ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌விர‌த‌ம் முழுமையாக பூ‌ர்‌த்‌தியாகு‌ம்.

விநாயகர் சதுர்த்தி புராணம்!


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 
 
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.


 சந்திரனின் சாபம்!

பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

சாபம் நீங்கிய விதம்!

சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து, அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து,

"தவம் காரணம் காரண காரணாநாம்
க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்" என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது.

பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை.

விநாயக சதுர்த்தி!

எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.

 

விநாயகர் சதுர்த்தி வரலாறு!

vinayagar sathurthi

விநாயக சதுர்த்தி வரலாறு! (History of vinayagar sathurthi)

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். . பிள்ளையாரின் அவதார தத்துவம்.

vinayagar sathurthi

ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌. பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம்.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

விநாயக விரதங்கள்.(Ganesh fasts)

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' (sangadagara vinagar sathurthi) என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

vinayagar sathurthi

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ

4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ

5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


நாமம் பல தத்துவம் ஒன்று! (One name many Philosophy!)

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

vinayagar sathurthi

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! (prayers will be for all homes!)

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top