.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label இன்றைய தினங்கள்!. Show all posts
Showing posts with label இன்றைய தினங்கள்!. Show all posts

Wednesday 1 January 2014

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராகிறாரா விஷால்?



ஆம் ஆத்மி என்ற கட்சி, தொடங்கிய ஒரே ஆண்டில் வியத்தகு வெற்றி பெற்று தலைநகர் டில்லியில் ஆட்சி அமைத்து டோட்டல் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. அதோடு, 40 ஆண்டுகால அரசியல் கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், சமந்தா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அக்கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், நடிகர் விஷால், அந்த கட்சியின் தமிழக தலைவராகப்போவதாக ஒரு செய்தி பரபரப்பை கூட்டியது. அதிலும் இதுவரை அரசியல் பற்றி ஒரு கருத்துகூட சொல்லாத விஷாலுக்குள்ளும் ஒரு அரசியல்வாதி இருந்து கொண்டிருந்தாரா? என்று பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றனர்.

ஆனால், இநத செய்தி விஷாலின் காதுக்கு சென்றபோது, அவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்னுமே புரியலையே என்றாராம். அப்போதுதான் நீங்க பேப்பரே படிக்கிறது இல்லையா என்று சொல்ல ஆரமபித்தவர்கள் அக்கட்சியின் டில்லி வரலாறை சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள்.

அதன்பிறகுதான், அப்படியா சங்கதி. நானே இப்பத்தான் அந்த கட்சியை பத்தி கேள்விப்படுறேன். அதற்குள் நான் அக்கட்சியின் தமிழக தலைவராகப்போறதா யாரு பரப்பி விட்டாங்க? ஒன்னுமே புரியலையே சாமி. என்று மண்டையை சொறிந்தாராம் விஷால்.

சரி எப்படியோ செய்தி பரவிப்போச்சு. கட்சிப்பணி வா வா என்கிறது. உங்க அபிப்ராயம் என்ன? என்று கேட்டபோது, என் படத்துல அரசியல் இருந்தாகூட எனக்கு அது பிடிக்காது. அந்த அளவுக்கு அரசியல்ல ஈடுபாடே இல்லாதவன் நான். நானாவது அரசியலுக்கு வர்றதாவது. அட போங்கண்ணே ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம் விஷால்.

2014-ம் ஆண்டு - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!!



ஜனவரி முதல் தேதி புத்தாண்டு. இந்த புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு என்றாலும், அது உலகம் முழுக்க அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படும் ஒரு புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர் தங்களது புத்தாண்டு லட்சியங்கள் என்னென்ன என்பதையும், 2013ம் ஆண்டில் அவர்கள் ரசித்த படங்கள், பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்பதையும் மனம் திறந்து கூறியுள்ளனர். இதோ...

டாப்சி

இந்த வருஷம், என் குடும்பத்தினர் மற்றும் என் நெருங்கிய நண்பர்களை வெளியில் அழைத்து போய் நிறைய நேரம் அவர்களோடு நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். இந்த வருடத்தில் எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ ரன்பீர், ஹீரோயின் தீபிகா படுகோனே. இவர்களுக்கு இந்த வருஷம் நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்கன்னு சொல்லலாம் என்கிறார்.

சிம்ரன்

இந்த வருஷம் சந்தோஷமும், அமைதியும் நிறைய எனக்கும், என்னை சுற்றி இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த வருஷம் நிறைய தமிழ் படங்கள் வெளிவந்தன. பெரும்பாலான புதுமுகங்கள் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க, அவங்க எல்லோர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்ல ஆசைப்படுறேன் என்றார்.

த்ரிஷா

எந்த வருஷமும், நான் எந்த புதுத்திட்டமும் போடுவதில்லை. ஏனென்றால் என்னால் எதையும் நிறைவேற்ற முடியாது. அதனால் எப்போதும் போல என் வேலையை பார்த்துட்டு போயிடுறேன். எப்போதும் போல, இந்த வருஷம் கல்யாணம் பண்ணுவிங்களான்னு கேட்குகிறீங்க, நடக்கலாம், நடக்காம போகலாம். எல்லாத்துக்கும் நேரம் நல்லா அமையனும், பார்க்கலாம் என்கிறார்.

ஹன்சிகா
2013 நாலு படங்கள் எனக்கு கிடைத்தது. 2014, தமிழ் 4, தெலுங்கு 4 என்று பயங்கர பிஸியா இருக்கேன். போனவருஷத்தை விட 2014 நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு ஆசைப்படுறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் நன்றி. இந்த வருஷம் வந்த படங்களில் நடித்த எல்லோருமே அழகா நடிச்சிருந்தாங்க. எல்லாருமே என் குடும்பம் மாதிரி. என்னால் ஒருத்தரை தேர்வு செய்ய முடியல. எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.

காயத்திரி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)


புது வருஷத்தில் எந்த பிளானும் பண்றதில்லை, எடுப்பதும் இல்லை. ஒருநாள் முடிவு பண்ணினா அதை செய்திடுவேன். மனசுக்குள் ஒரு சின்ன ஆசை என்னனா? நல்ல நல்ல படங்கள், தரமான படங்களா பண்ணனும், தரமான படங்கள் கொடுக்கும் ஹீரோ, இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ, ஹீரோயின் விஜய், காஜல் தான். துப்பாக்கி படத்தில் அவங்க கெமிஸ்ட்ரி அவ்ளோ சூப்பர்.

நந்திதா (அட்டகத்தி)

கிட்டத்தட்ட 7 படங்களில் வித்யாசமான ரோலில் நடிச்சிட்டேன். ஆனா, இன்னும் பெர்பார்ம் பன்ற அளவு நல்ல கேரக்டர்களில், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும். முக்கியமா காலையில 6 மணிக்கு எழுந்திருக்க பழகனும். இந்த வருஷம் எனக்கு பிடித்த ஹீரோ கடல் கவுதம் தான். அப்புறம் நம்ம குமுதா என்று தன்னை கூறுகிறார்.

ஜனனி அய்யர்

புது வருஷங்களில் புது திட்டங்கள் போடுறதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறந்ததை செய்யனும், அவ்ளோ தான். 2013-ல் வந்த சிறந்த படம், ஹீரோ, ஹீரோயின்னா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா தான்.

பிரியா ஆனந்த்

புது வருஷங்களில் நிறைய பிளான் பண்ணுவேன். ஆனா, அதை கடைபிடிக்க முடியாது. ஆனா ஒன்னு மட்டும் மாத்திக்கனும். எனக்கு மறதி ரொம்ப அதிகம். பெரிய தப்பான பழக்கம் அது. இந்த வருஷம் அதை குறைக்கனும். இந்த வருஷத்தில் பெஸ்ட் ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் த்ரிஷா(பத்து வருஷம் ஆனாலும் இப்போ வரை தொடர்ந்து ஹிட் கொடுத்திட்டு இருக்காங்க)

சாட்டை மகிமா

2013 என் படங்களில் சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தேன். இதை வரும் வருடங்களில் சரி பண்ண விரும்புகிறேன். இயக்குநர்களின் பிடித்த நடிகையாக வரனும்னு ஆசை. இந்த வருஷம் எனக்கு பிடித்த நடிகர் - சூர்யா, நடிகை - அனுஷ்கா.

ஸ்ரீகாந்த்
2014 தரமான வெற்றிகரமான படங்கள் தரனும் என்பதே என் இலக்கு. நான் தொடங்கி இருக்கும் கோல்டன் பிரைடேஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நல்ல படியாக கொண்டு வர ஆசைப்படுறேன். இந்த வருடம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ கமல் சார். ஹீரோயின் நயன்தாரா.

ஜெய்குகேனி - மெய்யழகி

2013 நான் பண்ண படங்கள் சில பரிட்சார்ந்த முயற்சியாவே இருந்தது. ஆனால் 2014 நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணனும், வெயிட் குறைக்கனும், நல்ல கதைகள் அமைந்து என் பேர் நிலைக்க ஆசைப்படுகிறேன். இந்த வருஷம் வந்த படங்களில் பெஸ்ட் ஹீரோ - ஜெய், ஹீரோயின் நஸ்ரியா என் சாய்ஸ்.

லட்சுமி மேனன்

எந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாம சினிமாவுக்கு வந்தவள் நான். அதனால் எதுக்கும் பிளான் பண்ண மாட்டேன். எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வேன். எது வந்தாலும் நல்லதுக்குனு எடுத்துப்பேன்.

எனக்கு பிடித்த பெஸ்ட் ஹீரோ - விஷால், ஹீரோயின் - மரியான் பார்வதி.

பிரசாந்த்

2013 நிறைய ரிலாக்ஸ் பண்ணிட்டேன். 2014-ல் விட்ட இடத்தை பிடிக்க போராடப் போகிறேன். நிறைய கடினமா உழைப்பை கொடுக்க தயாராகி கொண்டு இருக்கேன். இந்த வருஷம் வந்த படங்களில் கமல் சாரின் விஸ்வரூபம் படமும், அவரது நடிப்பும் என்னை கவர்ந்தது.

விஜய் வசந்த்

புதுத்திட்டங்கள் எடுக்கிற பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை. இப்போது 2 படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். 2014-ல் இன்னும் தரமான நல்ல படங்களா நடிக்க ஆசைப்படுகிறேன்.

இந்த வருஷம் வந்த படங்களில் அதிகமாக பேசப்பட்டதும், ஹிட் கொடுத்ததும் விஜய் சேதுபதி தான். ஹீரோயின் எனக்கு எந்த சாய்சும் இல்லை என்கிறார்.

இனியா

புது வருஷம் எனக்கு பெருசா எந்த திட்டமும், இல்லை. எப்பவும் பேசப்படுற நல்ல படங்களா பண்ணனும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கு. 2014-ல் பார்க்கலாம். எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்.

பூர்ணா

எனக்கு எப்பவும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. எந்த விஷயம் என்றாலும் நாளை பார்த்துக்கலாம், நாளை பார்த்துக்கலாம்னு தள்ளி போட்டுவிடுவேன், அதை கொஞ்சம் மாத்தனும், சமூக நல விஷயங்களில் கொஞ்சம் பங்கெடுக்க ஆசைப்படுகிறேன். இந்த வருடம் தமிழ் படங்கள் நிறைய பார்க்கல, அதனால என்னால் பெஸ்ட் யாருன்னு சொல்ல முடியல என்கிறார்.

விதார்த்

இந்த வருஷத்தில் நான் தெரிஞ்சிகிட்ட ஒரே விஷயம், நல்ல கதை, நல்லா நடித்தால் மட்டும் போதாது, அந்த படத்தை மக்கள் கிட்ட போய்சேர்க்கும் நல்ல தயாரிப்பு நிர்வாகம் வேண்டும், அந்த மாதிரி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படங்களில் இன்னும் அதிகமாக நடிக்க ஆசை. 2013-ல் வந்த படங்களிலேயே இப்போ வரை என்னை பாதித்த ஒரே கேரக்டர், விடியும் முன் படத்தில் நடித்த அந்த குழந்தை தான்.

சிவகார்த்திகேயன்

2013 எனக்கு சூப்பர் வருஷம். 2014 இன்னும் சூப்பரா இருக்க வேண்டுகிறேன். இந்த இடத்தை தக்க வைக்க ரொம்ப போராட வேண்டியிருக்கு. காமெடி எல்லை தாண்டி, டான்ஸ், ஆக்ஷ்ன் இப்படி கொஞ்சம் கவனம் செலுத்த ஆசை இருக்கு.

இந்த வருஷம் வந்த படங்களில் பலரும் நல்லா நடிச்சிருந்தாங்க. கமல்சாரின் விஸ்வரூபம் பார்த்து மிரண்டு போனேன், அஜித் சாரின் ஸ்டைல், நடிப்பு, விஜய் சாரின் டான்ஸ், சூர்யா சாரின் ஆக்ஷ்ன் இப்படி பலரும் சிறப்பா நடிச்சிருந்தாங்க. நடிகைகள்ன்னா - ஹிஹிஹி....

சுரபி (இவன் வேற மாதிரி)


வரும் வருஷம், பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களில் நடிக்கனும், என் பெயரை தமிழ் சினிமாவில் கொஞ்சம் பேச வைக்க ஆசைப்படுறேன். எனக்கு பிடிச்ச பெஸ்ட் ஹீரோ - அஜீத், ஹீரோயின் - சமந்தா.

பாவனா

எனக்கு ஒரு கெட்ட பழக்கம், நடந்து போனதை பற்றி யோசித்து ரொம்ப டிஸ்டர்ப் ஆவேன். அது முடிஞ்சிபோச்சுன்னு யோசிக்க மாட்டேன். மிஸ் ஆனது பற்றி அப்புறம் யோசிக்கறத 2014-ல் சுத்தமா நிறுத்த ஆசைப்படுகிறேன். நல்ல தமிழ் படங்களில் அடுத்த வருடம் என்னை பார்க்கலாம். எனக்கு பிடித்த ஹீரோ - ரன்பீர், ஹீரோயின் - தீபிகா.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!

Tuesday 31 December 2013

உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்



2014 -ஆம் வருடத்தை வரவேற்கும் பொருட்டு உலகெங்கும் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் போன்ற முக்கிய நகரங்களில் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

நியூசிலாந்தில் புது வருடத்தை வரவேற்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்வுகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

ஆக்லாந்தின் ஸ்கை டவரில் நிகழ்த்தப்பட்ட இந்த வண்ணமயமான நிகழ்வை நகரின் பல பகுதிகளில் இருந்தும் கண்டு களித்த மக்கள் உற்சாகக் குரலெழுப்பி புத்தாண்டை வரவேற்றனர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!




மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர். 

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.



Monday 30 December 2013

எல் சால்வடாரில் எரிமலை வெடித்தது: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்




மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் கொந்தளிப்பாக உள்ள ஒரு எரிமலை வெடித்து, கடும் வெப்பத்துடன் சாம்பலை கக்கியதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2330 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. வானத்தையே மறைக்கும் அளவுக்கு 5000 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம் இருந்ததால் அப்பகுதியில் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட துகள்கள் 10 கி.மீ. சுற்றளவுக்கு பரவியுள்ளன.  இதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. அண்டை நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவுக்கும் இந்த எரிமலையின் சாம்பல் காற்றின்மூலம் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள எல் சால்வடார், நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday 28 December 2013

உலகில் உள்ள சிறப்பு நாட்கள் ...!


  • உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30

• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

 • அனைத்துலக தாய்மொழி நாள் -  யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13

• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15

• உலக வன நாள்-மார்ச் 21

• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-

• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4

• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18

• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23

• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8

• உலக செவிலியர் நாள்- மே 12

• உலகக் குடும்ப நாள்- மே 15

• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

•World Biodiversity Day – மே 22

•World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

Wednesday 11 December 2013

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!




 காக்கைச் சிறகினிலே நந்தலாலா
 நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

 நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

 நெருங்கின பொருள் கைபட வேண்டும்
 மனதில் உறுதி வேண்டும்

 வட்ட கரிய விழியில் கண்ணம்மா
 வானக் கருனைக் கொள்

 இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர்.

சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதிக்கு படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார்.

நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது.

பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி.

தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி. அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார்.

1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது.

சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவனம் பாரதி பக்கம் திரும்பியது. பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார்.

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேறினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது.

பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு.

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார் பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர், அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார், பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார், அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான்.

மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

Thursday 21 November 2013

உலக ஹலோ தினம் = இன்று

 nov 21 - world hello

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு..
அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ ..

இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம் ..
ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று..

ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக சோறு தந்து பாசத்தை உணவில் ஊட்டி வளர்த்த அம்மா ..இன்று பாட்டியாக மாறிய பின், அதே வீட்டில், அதே குடும்பத்தில் நான்கு அடுப்பில் தனித்தனி சமையல் ..ஒரு பாயில் உறங்கிய ,ஒருதாய் வயிற்று பிள்ளைகள் இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரமின்றி , அடுத்த தேசத்து விரோதிகளாய் அண்ணன் தம்பிகளை பார்க்கும் கொடுமை ..

இப்படி… நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..

“ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்..

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசிகர ஓசை ..

இப்படி “ஹலோ’ என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து “ஹலோ’ வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.இந்நிலையில் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம்,

இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

 

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது.

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Monday 18 November 2013

'கப்பலோட்டிய தமிழன்'வ.உ.சி நினைவு தினம் - சிறப்பு பகிர்வு!


நவம்பர் 18 'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று.

விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு.

இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது  தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு. அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.

சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.

Saturday 16 November 2013

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

                                            nov 16 - edit tolerance-day

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

Thursday 14 November 2013

இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்!


                                              nov 14 - doodle_for_google_2013.

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.


வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

Children’s Day: Pune student’s Doodle 4 Google winning entry on Google India homepage

**********************************************


The Children’s Day doodle on the Google India home page has been designed by a class 10 student from Pune. The doodle titled “Sky’s the limit for Indian women” has been designed by Gayatri Ketharaman for the fifth edition of Doodle 4 Google competition with the theme celebrating Indian women.

Thursday 31 October 2013

இன்று வல்லபாய் படேல் பிறந்த தினம்!

 

Sardar patel (cropped).jpg
31 October 1875 – 15 December 1950 (aged 75)

தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர்


இல்லையென்றால் இருந்திருக்காது.


சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ்
கொண்டு வந்தவர். அவர் தான் இந்தியாவின் “இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார்
வல்லபாய் படேல்.


இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Friday 11 October 2013

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!


இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.



11 - international baby child day

 


தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. 


அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.


பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Thursday 10 October 2013

உலக மனநல தினம் – அக்டோபர் 10!


பொதுவாக் மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது……எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்…


10 - health world day

 


அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..ஆண்டு தோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..இந்நிலையில் உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே அக்., 10ம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.




இத்தகைய மனநல பாதிப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஒரு வயது குழந்தைக்கு கூட மனஅழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பின்னாளில் மனநலம் பாதிக்கப்படலாம். இன்று உலக மனநல தினம். இளமையிலும்,முதுமையிலும் மனநலம் பேணுவதின் அவசியத்தை விளக்குகின்றனர், இந்தாண்டு உலகமனநல நாள் முதியோர் மனநலம் பேணும் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் முதியோர்களாக உள்ளனர். உடல் நலம் குறைவு, பிள்ளைகள் புறக் கணிப்பு, கவனிக்க ஆள் இல்லாத நிலையில் கடுமையான மனஅழுத்தம், மனச்சோர்வால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் ஆண்கள் அதிகம். பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்றுமில்லாத போது தான் பெற்றோரின் உறவு கசக்க ஆரம்பிக்கும். 30 வயதைத் தாண்டும் போதே தங்களது முதுமைக்காக சேமித்து வைக்க வேண்டும். சொத்து இருந்தால் பிள்ளைகளின் பெயரில் மாற்றக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் முதுமையின் சுமையை ஓரளவு குறைக்கலாம் எனகிறார்கள் மருத்துவர்கள் . 



இதற்கிடையில் கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆக வேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும்.


இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.


மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விஷயமே வந்தது. அதிலும் அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன.


 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.

Tuesday 8 October 2013

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) 


தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய ஊரில் அருணாச்சலனார்-விசாலட்சி தம்பதியருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலனாரும் கவி பாடும் திறமை கொண்டவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும், வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.


எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை மட்டுமே இவரால் மேற்கொள்ள முடிந்தது. பின்னர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டினார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.



இவருக்கும் கௌரவாம்பாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் 1959-ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குமரவேல் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அந்த ஆண்டிலேயே இதே தேதியில் (08.10.1959) அகால மரணம் அடைந்தார்.



பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம்’ அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

Wednesday 2 October 2013

இவர் யார்? உனக்குத் தெரியுமா?


மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2- 1869)


மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.

பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16-வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.

இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.

பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால்  ரெயில் நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிறகு 1894-ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906-ம் ஆண்டு ஜோகார்னஸ்பர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.

அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1921-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரை (மார்ச் 1930) பிப்ரவரி 1930-ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது.

இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இதுபோல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இதுபோல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காந்தி- ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை) காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஐ குறிக்கும் நாளாகும்.

இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இந்நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 

Sunday 29 September 2013

‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!


சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


sep 28 - joy of giving

 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.


ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் என்று பலரை உதாரணமாக சொல்லலாம்.



எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.



முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


உலக இதய நாள் – செப்டம்பர் 29!


இந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது. 



உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.



Heart

 


“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான். 


எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் : 


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது. உடல் எடை கூடுவது. உடற் பயிற்சியைத் தவிர்ப்பது. 


இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. பதற்றம், உடல் நடுக்கம், அதிக வியர்வை. இதயத் துடிப்பு அதிகரித்தல். இரத்த அழுத்தம் கூடுதல். கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது. இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல். 



இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா, தியா னம் செய்ய வேண்டும். சத்துள்ள காய்கறிகள், பழங் களை சாப்பிட வேண்டும். அரிசி கோதுமை உணவையும் மற்றும் எண்ணெய், நெய், வறுத்த உணவு பொருட்கள், ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால், இதய நோய் வராமல் தடுக்க முடியும்.


அத்துடன் தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling), நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


குறிப்பாக வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 


அதிலும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Saturday 21 September 2013

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21!



உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. 



அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து

sep 21 - peace day

 



மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. 



அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 



இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. 



உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top