.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label இந்திய வரைபடங்கள்!. Show all posts
Showing posts with label இந்திய வரைபடங்கள்!. Show all posts

Wednesday 30 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09

உபநிடதங்கள்
 
வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின் தத்துவ நூல்கள் மேலும் இவை இந்துக்களின் ஆதார நூலாகவும் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில்
யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.



              நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா கிளை நூல்களும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதத்தின் முடிவிலும் முடிவிலும் உபநிடதங்கள்  இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பல உபநிடதங்கள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவை கிடைத்துள்ளன. 


வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், தெய்வத்திற்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள  பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிடதங்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. 



                 உபநிடதங்களில் சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் பல கேளிவிகளையும் அலசி பார்த்து ஒரு உன்னதமான முடிவை கூறியுள்ள நூல்கள் தான் உபநிடதங்கள். 




 
 
          மொத்தம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. ஆதிசங்கரர், இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர்.  பதினெட்டாம் நூற்றாண்டில் உபநிஷத்பிரம்மேந்திரர் என்னும் துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
 

108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:


10 முக்கிய உபநிடதங்கள்:

              ஈசா வாச்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம்)

             கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)

            கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

            பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)

           முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)

           மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)

           ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)

           தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம்)

           பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம்)
 
 24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்

20 யோக உபநிடதங்கள்

17 சன்னியாச உபநிடதங்கள்

14 வைணவ உபநிடதங்கள்

14 சைவ உபநிடதங்கள்

9 சாக்த உபநிடதங்கள்
 
இவைகளில்,

10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை

32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

16 சாம வேதத்தைச் சார்ந்தவை

31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை.

                   உபநிடதங்களை தொடர்ந்து தோன்றியவை இதிகாசங்கள் எனப்படும் புராணங்கள் ஆகும். வேதம் மற்றும் உபநிடதனகளின் கருத்துக்கள் பல புராணங்களில் விளக்கப்பட்ட்ள்ளன மேலும் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் தோன்றிய புராணங்களை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

Tuesday 29 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-08

                                                            வேத காலம்
                  
 
 

                  ஹிந்து மதத்தின் வரலாறு பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். ஹிந்து மதம் உருப்பெற்று செழிப்படைந்தது வேதகாலத்தில் தான். வேத காலத்தின் வரலாறு மற்றும் வேதங்கள் பற்றி இனி விரிவாக பார்க்கலாம். வேதகாலம் என்பது மனிதன் முழுமையான நாகரிகம் அடைந்தபிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். இது கிமு 2000 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். வேத காலம் வட இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. ஹிந்து மதத்தின் வேராக கருதப்படும் வேதங்கள் இயற்றப்பட்டது இகாலக்கட்டதில் தான்.
 
 
 

                   வேதங்கள் என்பவை இந்து மதத்தின் அடிப்படையாக அறியப்படும் நூல்களில் சிலவாகும் மேலும் காலத்தால் மிகவும் பழமையானது. இன்றும் வேதங்களில் சில நடைமுறையில் இருக்கின்றன. வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழி சொல்லை வேராகக் கொண்டதுவித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). என்பனவாகும்.
 

                வேதங்கள் வேதமொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சம்ஸ்கிருத மொழியின் முன்னோடி. தேவநகரி என்றும் அழைக்கபடுகிறது, வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது .விஜநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாசாரியர்  என்னும் பதினாலாவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதியவேதார்த்த பிரகாஷா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
 
 
இது சமய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உலகின் மிக பழமையான நூல்களிலும் ஒன்று. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 
 

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு:
 
 
  1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிரமாணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

               யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சப்த பிரமாணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
 
காலம் காலமாக வாய்வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த சுலோகங்கள் கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனாச்சார்யர் வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். ரிக் வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் 
வகைப்படுத்தப்படுவதுண்டு
 
                    வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
 
ரிக் வேதம்(rig veda):
 
 


                     இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. மேலும் நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது. இயற்றப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேத கால சமஸ்கிருதம் அல்லது தேவநகரி மொழியில் எழுதப்பட்ட மந்திரங்களை கொண்டது.
 
                 ரிக்வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
 
                ரிக்வேதம்வேதகால சமசுகிருதத்தில் 1,028 சுலோகங்களால் இயற்றப்பட்டுள்ளது . இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
 
 
              
         இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. ஒரு கடவுள் கொள்கை, பல கடவுள் கொள்கை மற்றும் இயற்கையை கடவுளாக கொண்டு பெரும்பாலான சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
 
 
           முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் இமயமலைவாசிகலான கிராதர இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
ரிக் வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள் அக்னி, இந்திரன்சோமன் என்போராவர்.
 
  இவர்களைவிட மித்திரன்வருணன்அஷ்வினிதேவர்கள்விஷ்ணுஉருத்திரன், தேவர்களின் குருவான பிரகஸ்பதிபிரிதிவிசூரியன்வாயு, மழை, அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, சரஸ்வதி, அதிதி, நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்..
வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான், தீர்க்கதமா, கோதமர், வேதாதிதி, சியாவாஷ்வ, மதுசந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக், பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை பற்றிய குறிப்புகளும் உள்ளன.
 
ரிக் வேத்த்தில் திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவாநகுசன்யயாதி, மாந்தாதா, புரு, குசிக், திரிச்சு மற்றும் குசிகர் போன்ற அரசர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
 
ரிக்வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள், இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ வைஸ்வதி, ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா, விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, சுதேவி மற்றும் சூர்யா.
 
ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். அவர்களிலே மாமிச உணவு உண்ணாதவர்கள் எவரும் இல்லை எனலாம். ’புலால் இல்லாமல் மதுயர்க்கமே (உணவே) இருக்கமுடியது. ரிக்வேத கால இறைச்சி உண்ணும் மக்கள் முக்கியமாக பசு, குதிரை, ஆடு மற்றும் செம்மறியாட்டின் இறைச்சியை உண்டனர். பலவிதமான பசு ரசமும் [பசுக்குழம்பும்] அவர்களுடைய முக்கிய உணவாகும். ’சுரபி பக்வம் மாம்ஸ் என்ற சொறொடர் (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) இதையே தெளிவு படுத்துகிறது. பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ் என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். தென் இந்தியாவின் முதன்மையான உணவான அரிசி பற்றி ரிக் வேத்த்தில் எந்த குறிப்புகளும் காணப்படவில்லை. சவ்வரிசி முதன்மையான உணவு, வறுத்த தாணியத்தை ‘தானா என்றும், தினை மாவை ’கரம்ப என்றும், ரொட்டியை ‘அபூப் என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.
 
ஆரிய மக்கள் வாழம் இருப்பிடங்களை ‘கிராமங்கள் என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா என்றும் அழைத்தனர். ’சாம்ராட், ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப் (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி (சமூகத்தலைவர்), ’கணபதி ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். ரிக் வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை எவ்வாறு கூறுவது போன்று பல குறிப்புகளும் உள்ளன.
 
யசுர் வேதம்:
 
 
             yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையே யசுர் வேதம்.
இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை 
 
         1. சுக்கில யசுர்வேதம்
 
        2. கிருஷ்ண யசுர்வேதம்
 
 இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
 
கிருஷ்ண யசுர்வேதம்:
 
                 கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
 
  • தைத்திரீய சம்ஹிதை
  • மைத்ராயணி சம்ஹிதை
  • சரக-கதா சம்ஹிதை
  • கபிஸ்தல-கதா சம்ஹிதை
 
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன.
சுக்கில யசுர்வேதம்
 
 


                சுக்கில யசுர்வேதம் முனிவர் யோகீசுவர 
 யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
 
  • வஜசனேயி மாதியந்தினியம்
  • வஜசனேயி கான்வம்
 
என்பனவாகும். வட இந்தியாவிலும், குசராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
 
 
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
சாமவேதம்:
         

           


             sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது சாம வேதம் ஆகும். இந்து சமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக்வேத்த்திற்கு அடுத்த்தாக இது இரண்டாம் நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்
அதர்வண வேதம்:
 
 


                அதர்வண வேதம் நான்கு வேதங்களுள் ஒன்றாகும் மேலும் இது நான்காவது வேதமாக கருதப்படுகிறது. அதர்வண வேத கூற்று படி பிரம்மதேவர் இவ்வுலகத்தை படைத்தார் பின் அதர்வன் - அங்கிராசா என்ற இரண்டு முனிவர்களை படைத்தார் அவர்களால் இயற்றப்பட்டது அதர்வண வேதம் என்பது கூற்று. அதர்வண வேதத்தில் கடவுள் பற்றிய பல சுலோகங்கள் தந்திரங்கள் மற்றும் பல மருத்துவ குறிப்புகள் உள்ளன.
 
 
                 இவாறாக நான்கு வேதங்களும் வகைபடுதப்பட்டு அவற்றில் சில இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆதி காலத்தில் ஓதப்பட்ட வேடங்களில் இன்று இருப்பவை மிக சொற்பமே. அவற்றில் இருக்கும் தத்துவங்களும், கருத்துக்களும் ஏராளம். எகிப்திய, மெசபடோமியா நாகரிகத்திற்கு ஒப்பானதாக நம் நாகரிகம் இருந்தாலும் வரலாற்றில் அவற்றிற்கு இருக்கும் ஆதாரங்கள் சொற்பமே. 
 
 
                வேதங்களை தொடர்ந்து வேதங்களுக்கு பின் வந்த உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் 

Monday 28 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-07



                       இந்திய வரலாறும் பழங்கால இந்திய வரைபடங்களும் என்ற தலைப்பில் ஆறு பதிவுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாரம் ஒரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறேன் வேலைபளு காரணமாக  குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவிட இயலவில்லை. ஏழாவது பதிவில் அடிஎடுத்துவைப்பதற்கு முன்பு இது வரை நாம் பார்த்து வந்த வரலாற்றின் காலக்கோடு (timeline) பார்த்து செல்வோம்.
இப்பிரபஞ்சத்தில்,
அண்டங்கள் உருவானது                                                   - 750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
சூரிய குடும்பம் உருவானது                                           -  450 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
பாக்டீரியா                                                                                    -  350 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
முதல் உயிரினம்                                 -  100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
டைனோசர் போன்ற ஊர்வன தோன்றியது   - 85 கோடி ஆண்டு 8 கோடி ஆண்டுகள் வரை
எலி போன்ற பாலூட்டிகள் தோன்றியது        - 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு  
மனிதன் தோன்றியது                  -                                         -6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 
இந்தியாவில் மனிதர்களின் குடியேற்றம் தொடங்கியது- 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பழைய கற்காலம்                     -                                          -கி.மு 5 லட்சம் முதல் கி.மு 10000 ஆண்டு வரை
இடை கற்காலம்                                                - கி.மு10,000 முதல்  கி.மு6000 வரை
புதிய கற்காலம்                                   -கி.மு6000 முதல்  கி.மு4000 வரை
உலோக காலம்                                   - கி.மு4000 முதல்  கி.மு1500 வரை
வேத காலம்                                       -கி.மு1500 முதல்

                         நிலையான வாழ்க்கை இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக  வாழ்வை பெற்றதும் வேதங்களூம், புராணங்களூம் உபநிதங்களூம் தோன்றியதாக கடந்த பதிவுகளில் பார்த்தோம் அங்கனமெ மதங்களும் தோன்றின. அப்படி இந்தியாவில் தோன்றிய பல மதங்களில் மிகவும் பழமையானது நம் ஹிந்து மதம். ஹிந்து மத்த்தை பற்றி இனி விரிவாக அலசுவோம்.

ஹிந்து மதம்

ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர். ஹிந்து மத்த்தில் முதன்முதலில் தோன்றிய பிரிவு பிராமணர்கள். கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.






இந்தியாவில் தோன்றியகாலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று நம் ஹிந்து மதம்ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா, கனடா  மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

          பிற சமயங்கள் போல் இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லைஇதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லைபல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள்சடங்குகள்சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.





ஹிந்து மத கோட்பாடுகள் ஆறு கிளைகளாக பிரிக்கபடுகிறது

1.சம்க்யா(Samkhya),
2.யோகா(yoga),

3.நியாய(nyaya),

4.வைஷேஷிகா(vaisheshika),

5.மிமாச்யா(mimasya),

6.வேதாந்தா(vedantha)

சம்க்யா(Samkhya)

ஹிந்து மத தந்திரங்களை பற்றி கூறுவது சம்க்யா. கபிலர் இதை தோற்றுவித்தார். இதில் மனம், அக ஆற்றல், ஆத்மா, மோட்சம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. உள்ளார்ந்த நினைவுகளில் சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று நிலைகளும் இதில் வருகின்றன. கடவுள் பற்றியோ மோட்சத்திற்கு பிறகு என்ன என்ற குறிப்புகள் இல்லை.

யோகா(yoga)
யோகா மனித மனதை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டி ஆகும். தியானம் முதல் சமாதி நிலை வரை பல நிலைகள் பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
அஷ்டாங்க யோகா எட்டு நிலைகளை கொண்டது. இது தியானம் மூலம் மனிதன் முக்தி அல்லது சமாதி நிலையை அடைய வழிவகுப்பதாகும்
1.யாமா(yama- அஹிம்சை, சத்யம், பிரம்மச்சரியம்):

2.நியாமா(niyama- அகபுற தூய்மை, சந்தோசம், தவம், மத சார்பான புத்தகங்களை படித்தல் மந்திரங்களை தொடர்ந்து ஓதுதல், கடவுளிடம் தன்னை ஒப்படைத்தல்)

3.ஆசனா(asana- இயல்பாக சுவாசித்தல், சிரசாசனம், பத்மாசனம்)

4.பிரானயமா(pranayama- மனதையும் சுவாசத்தையும் ஒன்றாக்கி ஒருநிலைப்படுத்துதல்)
பிராணயாமா மூன்று பெரும் நிலைகளை கொண்டது
I) சுவாசத்தை உள்ளிழுத்தல்

II)சுவாசத்தை வெளிவிடுதல்

III)சுவாசத்தை நிலைப்படுத்துதல்
சுவாசத்தை உள்ளிழுத்து நிலைபடுதுதல்
சுவாசத்தை வெளிவிட்டு நிலைப்படுத்துதல்
சுவாசத்தை நிலைபடுத்தி உள்ளிலுதல் வெளிவிடுதல்

5.பிரத்யஹாரா(prathyahara- நினைவுகளிலிருந்து வெளிவருதல்)

6.தர்ணா(dharna- மன ஒருமைப்பாடு)

7.தியானா(dhayana- தியானம்)

8.சமாதி(samathi- சமாதி நிலை)
நியாய(nyaya)
ஹிந்து மத ஆறு தத்துவங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மத்த்தின் அடிப்படை நியாய தர்மங்களை பற்றி இது குறிப்பிடுகிறது.
வைஷேஷிகா(vaisheshika)
இது ஹிந்து மத்த்தில் அறிவியல் சம்பந்தமான கோட்பாடுகளை கொண்டது. அணு பற்றிய குறிப்புகள் கூட இதில் உள்ளன.
மிமாச்யா(mimasya)
மிமாச்யா என்பதற்கு விசாரணை என்று பொருள். இது ஹிந்து மதத்தில் உள்ள ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றியதர்க்கான குறிப்புகள் உள்ளன
வேதாந்தா(vedantha)
        ஹிந்து மதத்தில் உள்ள வேதங்களை பற்றி இதில் குறிப்பிடுகின்றனர்
ஆதி சங்கரர் முதன் முதலில் வேதங்களை தோற்றுவித்தார் பின்னர் அது பல கிளைகளாக பல்வேறு முனிவர்களால் பிரிந்தது
இவ்வாறாக ஹிந்து மத தத்துவம் ஆறு கிளைகளாக உள்ளன. ஹிந்து மத தத்துவத்தை அடுத்து ஹிந்து மதத்தின் பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
ஹிந்து மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது
1.சைவம்
2.வைணவம்
3.ஸ்மார்த்தம்

சைவம்

சைவ சமயம் சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை.  இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. ஆரம்பகால வரலாறு பற்றி சரியான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் பாண்டியர்கள் காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். தமிழில்  பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவைஇந்தியாஇலங்கைநேபாளம்தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன
      
மொகெஞ்சதாரோ - ஹரப்பா 

அகழ்வாராய்ச்சிகளிலிருந்துஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்த்தென்றும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தனஇதன் அடிப்படையில் ஜி.யு போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தெனிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அவர் கூறியவை பின்வருமாறு,
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும்இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.  சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்எனது அறிவுக்கு அக்கருத்துகள்வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வதுஅதாவது ஆன்மாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான்இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டதுஅவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லைகைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளதுமேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளதுஅதாவது பூமத்திய ரேகையின் மீதுமேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்தில்லைக்கு தெற்கே இராவணவன்ன ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள்தேவகள்அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்அரக்கர்களும்தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ்ஆரியன் என்ற சொல் சதாசிவனையும்அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும்செத்து சம்பலாகவும்புழுக்களானவர்களை குறிக்காதுஇன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறதுதிருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்.

பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டு பண்பும்பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளனவாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனதுஇவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லைபாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாதுமூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளதுஇந்த நிலையே ஞானம் எனப்படுகிறதுஇந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

வைணவம்

வைணவ சமயம்விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறதுமேலும் இச்சமயம் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும்தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு.



உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கைவைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்விஷ்ணு அவதாரங்களில் மச்சகூர்மவராகநரசிம்மவாமனபரசுராமஇராமபலராமகிருஷ்ணகல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றனஉபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.


குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்ததுவைணவத்தில் வடகலைதென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
வைனவர்களிடத்தில் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
  • வடகலை திருமண்காப்புபாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
  • தென்கலை திருமண் காப்புபாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்

வடகலை
தென்கலை
திருமால் தெய்வம்
திருமகளும் தெய்வம்
வடமொழி வேத வழி
நாலாயிர திவ்யபிரபந்தம் நூலும் போற்றப்படும்
பிராமணர்களுக்கு முதன்மை
மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை


வடக்கிலுள்ள திருப்பதிக்கு தென்கலை நாமம்.
தெற்கிலுள்ள திருவரங்கம் கோவிலுக்கு வடகலை நாம்ம்
ஸ்மார்த்தம்
ஸ்மார்த்தம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகும்இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன்,சக்தி, திருமால், விநாயகர், சூரியன், மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்குகின்றனர்.


ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும்ஆதிசங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார்தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்துஇதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷ்ணமதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார்இதன் படி சிவன்சக்திதிருமால்கணேசர்சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம்பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால்இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்என்றே வழங்கலாம்இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும்இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறதுஇன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.
ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம்அதாவது இறைவன் ஈஸ்வரனும்நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்ம்மே.  மாயையில் சிக்குண்டதால்ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறதுஉயர் ஞானம் கிட்டுமாயின்இந்த வேறுபாடு தெளிந்திடும்முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞானம் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. இவ்வாறாக பிரிந்த ஹிந்து மதம் இன்று வரை தனித்தன்மையுடன் தலைதோங்கி நிற்கிறது.

பின்னர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல மன்னர்களால் பின்பற்றப்பட்ட வந்த ஹிந்து மதம். இஸ்லாமியர்கள் வருகைக்கு பின்பு பல்வேறு இன்னல்களை சந்தித்தது. ஒரு மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லாமல், ஒரு தனி அமைப்பு என்று ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு மேல் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டும்,  300 வருடங்களுக்கு மேல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டும் ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதன் தனி பெருமை.

ஹிந்து மதத்தின் வரலாற்றை தொடர்ந்து வேதங்கள், வேதகாலத்தில் தோன்றிய புராணங்கள் மற்றும் உபநிடதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top